இ-மெயில் மூலம் நட்பு வலைவிரித்து இளம் பெண்களை வீழ்த்தி பணம் பறிக்கும் இ-பயங்கர வாதம் அதிகரித்து விட்டது. உலகளாவிய தொடர்புகளால் குற்றவாளிகளை பிடிப்பது சைபர் கிரைம் போலீசாருக்கு சவாலாக உள்ளது.
எளிய நகரங்களில் மட்டும் அல்லாது, சிறிய ஊர்களில் கூட இன்று இன்டர்நெட் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தவிர, வசதி படைத்தவர்கள் வீடுகளிலேயே இன்டர்நெட் இணைப்பை வைத்துள்ளனர். இன்டர்நெட் கலாச்சாரம் பெருகி விட்டது. இன்டர்நெட் நல்ல விஷயங்களுக்கு பயன்பட்டது போக, இன்று பல்வேறு குற்றங்களுக்கு ஊற்றுக் கண்ணாக மாறிப் போய் விட்டது.
சமூக விரோதிகள் விரிக்கும் வலையில் சிக்கி இளம் பெண்களும், குடும்ப பெண்ணும் வெளியில் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர். குடும்ப கவுரவம், சமூக அந்தஸ்து இவற்றை கருதி பிளாக் மெயில் பேர் வழிகள் கேட்கும் பணத்தை, பொருளை கொடுத்து, வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றனர். இதுவே பிளாக்மெயில் பேர் வழிகளுக்கு உரமிட்டது போல் ஆகி விடுகிறது. இப்படி பல விஷயங்ககள் அமுக்கப்படுவதால், இன்டர்நெட் குற்றவாளிகளை பிடிப்பது சைபர்கிரைம் போலீசாருக்கு சவாலாக உள்ளது.
சமீபத்தில் சென்னையை சேர்ந்த 10 வயது பள்ளிச்சிறுமி இன்டர்நெட் மூலம் கிடைத்த நட்பு வலையில் சிக்கி, பல்வேறு அவஸ்தைகளை அனுபவித்த சம்பவம் இப்போது வெளியாகி உள்ளது. சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகள் அபி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 10 வயதான இவள் நகரில் உள்ள பிரபல பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கிறாள். இந்த வயதிலேயே இன்டர் நெட்டில் இவள் புகுந்து விளையாடுவதை பார்த்து இவளது பெற்றோர் பூரித்துப் போனார்கள்.
இவளது இ.மெயில் முகவரிக்கு தினமும் நிறைய மெசேஜ்கள் வந்தன. அந்த முகவரிக்கு இவளும் பதில் அனுப்புவாள். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இவளது இ-மெயிலுக்கு உனது நட்பு தேவை என்று மெசேஜ் வந்தது. அதனுடன் அதை அனுப்பி இருந்தவர், தானும் ஒரு பள்ளி மாணவி என்றும்,ஒரு சமயத்தில் அபியுடன் பள்ளியில் ஒன்றாக படித்தவள் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து, அந்த முகம் தெரியாத பெண்ணை அபி நண்பராக ஏற்றுக் கொண்டாள். இருவரும் அடிக்கடி ஆன்-லைனில் பேசிக் கொண்டனர். இப்படியே தொடர்ந்து பழக்கம் சில நாளில் திசை மாறியது. நைசாக பேசி அபியை சில நடவடிக்கைகளுக்கு அவர் உட்படுத்தினாள்.
வெப்-கேமரா முன்பு தனது அங்கங்களை காட்டினாள். இதை விளையாட்டாகவே அபி நினைத்தாள். ஆனால், இவளது செய்கைகள் அனைத்தும் வெப்- காமிராவில் படம் பிடிக்கப்பட்டு, எதிர் முனையில் பதிவு செய்யப்பட்டது. இந்த விஷயத்தை அபி தன் பெற்றோரிடம் சொல்லவும் இல்லை, மகளின் நடவடிக்கைகளை அவர்கள் கண்காணிக்கவும் கிடையாது. இப்படியே 3 மாதங்கள் கடந்த நிலையில், அபியின் தந்தைக்கு மிரட்டல் இ- மெயில் வந்தது. அதில் ரூ.50 லட்சம் தரவேண்டும். இல்லை எனில் அபியின் ஆபாச வீடியோவை யூடியூப்பில் போட்டு விடுவேன். போலீசுக்கு போனால் நிலைமை இன்னும் விபரீதம் ஆகும்.
மற்ற இணையத்தளங்களிலும் ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என்றும் மிரட்டப்பட்டார். இதனால் போலீசுக்கு செல்ல தயங்கினார். பணம் பறிக்கும் கும்பலிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல் இ-மெயில்கள் வந்த வண்ணம் இருந்தன. அபியின் பெற்றோர், தனியார் துப்பறியும் ஏஜென்சியை அணுகி விபரத்தை தெரிவித்தனர். அவர்கள் சைபர் குற்றங்களை கண்டு பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். அவர்கள் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.
இது பற்றி, தனியார் துப்பறியும் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இது போன்று நிறைய புகார்கள் எங்களிடம் வந்துள்ளன. பேஸ்புக்கில் முதியவர்கள் கூட இளையவர் போன்று தோற்றமளிக்கும் வகையில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இளம் பெண்களை ஏமாற்றுகின்றனர். நட்பு விலையில் விழச்செய்து பெண்களை பிளாக் மெயில் செய்வது, பணம் பறிப்பது போன்ற செயல்களில் இ-பயங்கர வாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
நெதர்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சைபர் குற்றங்களை நவீன தொழில் நுட்பம் மூலம் சுலபமாக கண்டுபிடித்து விடுகின்றனர். ஆனால், இந்தியாவில் போலீசாருக்கு போதிய பயிற்சியும், நுட்பமும் இல்லாததால், சைபர் குற்றங்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் உள்ளது.
இணைய தளத்தில் சாட்டிங்கில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக பெண்கள் முன் ஜாக்கிரதையாக கையாண்டால், இது போன்ற சிக்கல்களை தவிர்க்க முடியும். வெளிநாடுகள் அல்லது தூரத்தில் இருக்கும் தெரிந்து நட்பு மற்றும் உறவு வட்டாரங்களில் மட்டுமே இ-மெயிலில் பேச வேண்டும். முகம் தெரியாதவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்வது, பின்பு பல சிக்கல்களுக்கு வழி ஏற்படுத்தி விடும்.
முகம் தெரியாதவர்களின் முகவரிக்கு எந்த சூழ்நிலையிலும் போட்டோவை அனுப்ப கூடாது. போட்டோவை வைத்து கூட மார்பிங்” முறையில் ஆபாசமாக சித்தரிக்க முடியும் எச்சரிக்கை மிகவும் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வீடியோ-மொபைல்கள்@இண்டெர்னெட்,. >>> DESK-TOP கம்ப்யூட்டர்@இண்டெர்நெட். வசதி இருப்பின் >>>
லேப்டாப் கம்ப்யூட்டர் @USB இண்டெர்நெட்மோடம். என்று இந்த “சினிமா’”அனாச்சாரங்களும் ஆபாசங்களும் நமது வீட்டிலிருந்து – பாக்கெட்டு வரை கிடைக்க >> பெண்களின் பெற்றோர்களும், பெண்ணின் கணவனும். உழைக்கிறார்கள்.
கேட்டதை வாங்கி கொடுப்பவர்களே!!
· மேற்கண்ட சாதனங்களை பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள்.
· யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள். எத்தனை சிம் கார்டுகள் உபயோகிக்கிறார்கள்.
· மாற்று மத தோழிகள் வீட்டுக்கு சென்று என்ன செய்கிறார்கள். அவர்களது வீட்டில் ஆண்களோடு பழகுகிறார்களா?
· தனி அறையில் இருந்து T.V யில் எந்தெந்த சேனல்கள் பார்க்கிறார்கள். என்ன சி.டி.பார்க்கிறார்கள்.
· கம்ப்யூட்டரில் (இண்டெர்நெட்டில்) தனிமையில் இருந்து என்ன பார்க்கிறார்கள் என்ன செய்கிறார்கள்.
· இ-மெயிலில், சாடிங்கில் யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள்...
என்பதை கேட்டு தெறிந்து கொள்கிறீர்களா? அல்லது எச்சரிக்கை உணர்வோடு கண்காணிக்கிறீர்களா?
என்னோட பிள்ளையை நானே கண்காணிப்பதா? சந்தேகப்படுவதாக ஆகாதா? என்று கருதாமல். என்னுடைய பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், இஸ்லாத்தின் கண்ணியம். இவற்றை முன்னிறுத்தி. கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
No comments:
Post a Comment