Latest News

இளைஞர்களை அழைக்கிறது இந்தியக் கடற்படை


உலகின் வலிமைவாய்ந்த கடற்படைகளில் ஒன்று இந்தியக் கடற்படை. இதில் இணைவதற்கான படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தியக் கடற்படையில்லாஜிஸ்டிக்ஸ் கேடர்(Logistics Cadre), நேவல் ஆர்மமென்ட் இன்ஸ்பெக்ஷன் கேடர்(Naval Armament Inspection Cadre) மற்றும் கல்விப் பிரிவுகளில்(Education Branch) உள்ள பணிகளில் சேர்வதற்கான படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் படிப்புகள் அடுத்த2012ம் ஆண்டு ஜுன் மாதம் கேரளாவின் எழிமலாவில் உள்ள இந்தியக் கடற்படை கல்வி நிறுவனத்தில்(Indian Naval Academy - INA) நடைபெறவுள்ளன. திருமணமாகாத ஆண்கள் மட்டுமே இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
லாஜிஸ்டிக்ஸ் கேடர் படிப்பிற்கு 19.5 முதல் 25 வயதுக்குள்ளும்நேவல் ஆர்மமென்ட் இன்ஸ்பெக்ஷன் கேடர் படிப்பிற்கு 19.5 முதல் 25 வயதுக்குள்ளும்கல்விப் பிரிவு படிப்பிற்கு 21 முதல்25 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
இந்த வகைப் படிப்புகளில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனித்தனி கல்வித் தகுதிகளும்,குறைந்தபட்ச மதிப்பெண் வரையறைகளும் உள்ளன.
இந்தப் படிப்புகளில் சேரஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர் 3ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப செயல்பாடு தொடங்கி நடந்து வருகிறது. அக்டோபர் 28ம் தேதி விண்ணப்பிக்கும் கடைசி நாளாகும். கேட்டுள்ள விபரங்களுக்கு தெளிவான பதில் கொடுத்து,கவனமாகப் படித்து முழுவதுமாக நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பத்தின் நகல்களைப்(பதிவு எண்ணுடன் கூடிய) பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த விண்ணப்பங்களை சரியாக நிரப்பிமுழுமையாகக் கையெழுத்திட்டுஅவற்றை Post Box No. 02, Nirman Bhawan, New Delhi - 110 023 என்ற முகவரிக்கு சாதாரண தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். இந்த விண்ணப்ப நகலுடன்சுய கையொப்பமிட்ட புகைப்படம்சான்றளிக்கப்பட்ட 10மற்றும் 12ம் வகுப்புகளின் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள்பிற படிப்புகளின் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள்(சான்றளிக்கப்பட்ட - attested) ஆகியவற்றை சேர்த்து அனுப்ப வேண்டும்.
சாதாரண தபால் தவிர, Speed post, Registered post மற்றும் Courier ஆகியவற்றின் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
பட்டப்படிப்பில்விண்ணப்பதாரர்களின் செயல்பாட்டை வைத்தே(மதிப்பெண்கள்) நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு அனுப்பப்படும். சர்விஸ் செலக்ஷன் போர்டு(SSB) நடத்தும் இந்த நேர்முகத் தேர்வானதுஅடுத்தாண்டு பிப்ரவரி முதல் மே மாதம் வரையில்பெங்களூர்போபால் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நடைபெறும். இந்த நேர்முகத் தேர்வுக்கான இடத்தை ஒருவர் மாற்றிக்கொள்ள முடியாது.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், 2012, ஜுன் மாதத்தில்கடற்படையில் துணை லெப்டினன்ட் நிலை அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுகேரளாவின் எழிமலையில் கடற்படை தொடர்பான படிப்பு அவர்களுக்கு வழங்கப்படும். அதன்பிறகுநாடு முழுவதிலுமுள்ள பலவித கடற்படை கப்பல்கள் மற்றும் பயிற்சி மையங்களில் பயிற்சிகள் வழங்கப்படும். இந்தப் பயிற்சியின்போது முழு அளவிலான சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும்.
சேர்ந்த நாளிலிருந்து வருடங்கள்ப்ரொபேஷன்(Probation) நிலையிலேயே வைக்கப்படுவர். படிப்பில் சேர்ந்தபிறகு யாருக்காவது திருமணமானது கண்டுபிடிக்கப்பட்டாலோ அல்லது படிப்பின்போது திருமணம் நடந்துவிட்டாலோஅத்தகைய நபர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார். அந்த நாள் வரை அவர் பெற்ற சம்பளம் மற்றும் ஊக்கத்தொகையினை அவர் திரும்ப செலுத்தியாக வேண்டும்.
மேற்கண்ட வகைப் பணிகளின் தன்மைபணியில் கிடைக்கும் சலுகைகள்விதிமுறைகள்,விரிவான விண்ணப்பிக்கும் முறைகள்கல்வித் தகுதி விபரங்கள் மற்றும் இன்னபிற தகுதிநிலைகள் ஆகியவைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள http://nausena-bharti.nic.in/ என்ற இணையதளம் செல்க.
குறிப்பு
இந்தியக் கடற்படைப் பணி என்பது ஒரு மதிப்பு வாய்ந்தப் பணியாகும். அந்தப் பணிகளுக்காகவே,மேற்கூறிய இந்தப் படிப்பு தொடங்கப்படுகிறது. நாட்டுக்கு சேவை செய்யும் உணர்வோடுபோதுமான சம்பளம் மற்றும் ஏராளமான சலுகைகளும் இப்பணியில் கிடைக்கிறது. கடற்படை பணியில் பலவிதமான வாழ்க்கை அனுபவங்களுக்கும் பஞ்சமில்லை. எனவேதகுதியும்திறமையும் உள்ள மாணவர்கள்இந்தக் கடற்படைப் படிப்பிற்கு தயக்கமின்றி விண்ணப்பிக்கவும்.

வடிமைப்புத் துறையில் பட்டயப் படிப்புகள்

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் கல்வி மையத்தில் இளநிலைமுதுநிலை பட்டயப் படிப்புகளில் சேர மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் கல்வி மையத்தின் அகமதாபாத் மையத்தில் ஆண்டு இளநிலை பட்டயப்படிபிற்கும்அகமதாபாத்காந்திநகர்,பெங்களூரு கல்வி மையங்களில் இரண்டரை ஆண்டுகளைக் கொண்ட முதுநிலை பட்டயப் படிப்பிலும் மாணவ சேர்க்கை நடைபெறுகிறது.
கிராஜுவேட் டிப்ளமோ புரோகிராம் இன் டிசைன் (ஜிடிபிடி)
2011-12
ம் கல்வியாண்டில் பிளஸ் அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அதிகபட்சமாக 20 வயதுக்குள் இருக்க வேண்டும். பின்தங்கிய இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுகள் வயது தளர்வு உண்டு. ஆண்டுகளைக் கொண்ட இப்படிப்பில் 3பாடப்பிரிவுகள் உள்ளன. பேகல்டி ஆப் இன்டஸ்ட்ரியல் டிசைன்பேகல்டி ஆப் கம்யூனிகேஷன் டிசைன்பேகல்டி ஆப் டெக்ஸ்டைல்அப்பேரல் அன்ட் லைப்ஸ்டைல் ஆக்சஸரி டிசைன் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.
ஆப்டிடியூட் டெஸ்டில் பங்கேற்கும் மாணவர்களின் திறனை வைத்து சேர்க்கை நடைபெறும். மொத்தம் 100 சேர்க்கை இடங்கள் உள்ளன.
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ புரோகிராம் இன் டிசைன் (பிஜிடிபிடி)
ஆண்டு வடிவமைப்பு இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது தகுதி30. இதில் பல்வேறு பாடப்பிரிவுகள் வழங்கப்படுகிறது. ஒருவர் இரண்டிற்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். மொத்தம் 245 சேர்க்கை இடங்கள் உள்ளன.
விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்ரூ.1500 செலுத்தி நேரடியாக வங்கிகளிலும் பெற்றுக் கொள்ளலாம். பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.750க்கு விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் நவம்பர் 21ம் தேதியாகும்.
இளநிலை படிப்பில் சேர 2012 ஜனவரி 7ம் தேதியும்முதுகலை பட்டயப்பப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு 2012 ஜனவரி 8ம் தேதியும் ஆப்டிடியூட் டெஸ்ட் நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு www.nid.edu இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.