பிஸ்மில்லாஹ்ர்ரஹ்மானிர்ஹீம்
அஸ்ஸலாகும் அலைக்கும் (வர்ஹ)
கடந்த 16.09.2011 வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு அமீரக தாஜீல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஏராளமான TIYA உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டம் தொடங்கிய உடன் முதலாவதாக பொருலாளர் சகோதர் நவாஸ்கான் அவர்கள் கடந்த ஒருவருடத்திர்கான வரவு செலவு கணக்கு சமர்பித்தார், அதனை தொடந்து ஊரில் தாஜீல் இஸ்லாம் சங்கத்தில் நடந்த பஞ்சாயத்துகள் குறித்து சில விவாதங்கள் ஒரு மணி நேரம் நடைபெற்றது, அதனை தொடர்ந்து கடந்த ரமளானில் நமது முஹல்லாவாசிகளிடம் வசூல் செய்யப்பட்ட பித்ரா தொகையான 40.500 ரூபாயை நமது முஹல்லாவை சார்ந்த சுமார் 90 குடும்பங்களுக்கு முறையாக அதிரை TIYA நிர்வாகிகளின் மூலம் வழங்கப்பட்டது. ஒரு குடும்பத்திற்க்கு 10 கிலோ அரிசியும், அதற்க்கு தேவையான மசாள சாமான்களும் மற்றும் தலா ஒருவருக்கு 60 ரூபாய் ரொக்க பணமும் வழங்கப்பட்டது என விலக்கம் தரப்பட்டது...
அதனை தொடர்ந்து பழைய நிர்வாகம் கலைகப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதர்க்கு தேர்தள் அதிகாரியாக சகோதரர் அ.மு. அப்துல் ஹாதி சகோதரர் முனாப் ஆகிய இருவரையும் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் மூலம் பழைய நிர்வாகிகள் கலைக்கபட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது அதில் கீழ்கானும் நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். அதன் விபரம் வருமாறு.
தலைவர் : B. ஜமாலுதீன்
து.தலைவர் : B. நெய்னா முகமது
செயலாளர் : S. சிராஜுதின்
து. செயலாளர் : N. ராஜிக் முகமது
இணைச், செயலாளர் : A. அலிம்
பொருளார் : S. அப்துல் காதர்
ஆகியோர்கள் தேர்வுசெய்யபட்டுள்ளார்கள்
No comments:
Post a Comment