அதிராம்பட்டினம் பேரூராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் MMS. பஷீர் அகமது அவர்கள் வரும் வியாழக் கிழமை 29-09-2011 அன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதுதொடர்பாக அவரது குடும்பத்தார் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அஸ்ஸலாமு அலைக்கும்....
வருகிற 29-09-2011 அன்று காலை 10:30 மணியளவில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திருமிகு N.R.ரெங்கராஜன் B.Com.,அவர்களின் தலைமையிலும் அதிராம்பட்டினம் நகர காங்கிரஸ் தலைவர் M.M.S. அப்துல் கரீம் அவர்களின் முன்னிலைலும் MMS. பசீர் அகமது அவர்கள் அதிராம்பட்டினம் பேரூராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதனை பொது அழைப்பாக ஏற்று காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள், முஹல்லா தலைவர்கள், முஹல்லா பெரியோர்கள் மற்றும் அதிரை நகர் வாழ் பொதுமக்கள்அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பிக்கும்மாறு மிக அன்புடனும், தாழ்மையுடனும் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
MMS. குடும்பத்தார்கள்
நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்
No comments:
Post a Comment