அதிரை முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத்தின் முதல் கூட்டத் தீர்மானத்தின் படி பேரூராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்று காலையில் நடைபெற்றது.
ஒவ்வொரு சங்கத்தைச் சார்ந்தவர்களிலிருந்தும் இருவரை வேட்பாளர்களுக்கு முன்மொழிந்து அவர்களிடையே கலந்துரையாடல் நடத்தி, பின் பொதுவேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனையை தாஜுல் இஸ்லாம் சங்கம் ஏற்றுக் கொள்ள மறுத்து, தற்போது களத்தில் இருக்கும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது...
தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, அனைத்து சங்க நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் கலந்துரையாடலுக்கு அதிரை ஐக்கிய முஸ்லிம் ஜமாஅத் ஏற்பாடு செய்தது. மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தைத் தவிர்த்து மற்ற ஆறு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் தலைவர் பதவி வேட்பாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஐக்கிய ஜமாஅத்தின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு பின் வரும் மூவர் தாங்கள் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
சகோ. அதிரை அன்வர்
சகோ. செய்யது
சகோ. ஹாஜா (தரகர் தெரு)
ஊரின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ள இந்தச் சகோதரர்களை அதிரை எக்ஸ்பிரஸ் குழுமம் பாராட்டுகிறது. அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானா
நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்
No comments:
Post a Comment