அல்லாஹ்வின் திருப்பெயரால்
அடிவானில் பட்டுத் தெறிக்கும் பிரகாசம்!
சுதந்திர தேசத்தின் முதல் சுவாசம்!
என் உள்ளதிளெல்லாம் மருத்துவம் செய்யும் தஸ்கியா மாதம்!
ரமலானே நீ வருவாய்! என் பாவக் கரைகள் கழுவிச் செல்வாய்!
வஹியமுது பீறிட்டுப் பாய்ந்து ஹிரா குகையும் ஈரமாய் இனிக்குதே!
வானமெல்லாம் அலங்கரித்து நிற்குதே!
ஜன்னாவின் மலரெல்லாம் இதழ் விரித்து சிரிக்குதே!
நரகத்தின் வாயில்கள் மூடுண்டு போனதே!
ரமலானே, நீ வருவாய்! என் பாவக் கரைகள் கழுவிச் செல்வாய்! ...
சுத்திரமாய்த் திரிகிறேன் - நரகத்தின் விழும்பில் நிற்கிறேன்
ஐம்பொறிகளும் அறியாமை பொறிக்குள் இருகிப் போனதே!
படைத்தவனை மறந்து பழகிப் போனதே!
உள்ளத்தின் வசந்தமாய்க் குர்ஆனில் குளிர்ந்திடவே!
பயணத்தின் தோழனாய் நபிவழி பற்றிடவே!
ரமலானே நீ வருவாய்! என் பாவக் கரைகள் கழுவிச் செல்வாய்!
ஜஸாக்கல்லாஹு க்ஹைரா - அல்ஹசனத்
--
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْإِيْمَانِ وَلاَ تَجْعَلْ فِيْ قُلُوْبِنَا غِلاًّ لِلَّذِيْنَ آمَنُوْا رَبَّنَا إِنَّكَ رَءُوْفٌ رَحِيْمٌ
30. எங்கள் இறைவனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்திவிட்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; மிக்க கருணையுடையவன்.
- அல் குர் ஆன்59:10
No comments:
Post a Comment