Latest News

அமெரிக்கர்கள் இந்துத்துவாவில் ஆர்வம் காட்டுகின்றனர் - சுப்ரமணிய சாமி

மதுரைக் கல்லூரியில் ஆங்கில துறை பேராசிரியர் சுப்ரமோனி எழுதிய "பரமஹம்சா-த வேதாந்திக் டேல்' நூலை வெளியிட்டு ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி பேசும்போது,"அமெரிக்காவில் பொருளாதார மேம்பாடுக்கு உதவும் இந்துத்துவா கொள்கை" என்ற தலைப்பில் என்னை பேச அழைத்தனர். அந்தளவுக்கு அமெரிக்காவில் இந்துத்துவா, சனாதன தர்மத்தில் ஆர்வம் காட்டுகின்றனர்.இந்திய ஆஸ்ரமங்களில் அமெரிக்க சாதுக்கள் அதிக அளவில் உள்ளனர்.

கருணாநிதி போன்றோர் திராவிட இனம் என பேசுகின்றனர். திராவிட இனம் என்பதே இல்லை.திராவிடம் என்பது ஒரு பகுதியின் பெயர். தென்னிந்தியாவின் ஒரு பகுதியே திராவிடம் என ஆதிசங்கரர் கூறியுள்ளார். ஆங்கிலேயர் திராவிடர், ஆரியர் என இன பாகுபாட்டை ஏற்படுத்தினர்.

ராவணன் ஒரு பிராமணர்.ஆனால் ராமர் சத்தியர் குலத்தில் தோன்றியவர். ராவணனை கொன்ற ராமரைத்தான் மக்கள் வழிபடுகின்றனர்.பெண் ஆசை காரணமாக ராவணன் உயிரிழந்தான். அனைவரும் சட்டத்திற்கு, தர்மத்திற்கு கட்டுப்பட வேண்டும். முன்னோர்கள் தர்மத்திற்கு முக்கியம் கொடுத்தனர்.


பிறப்பு,நிறம், மொழியை வைத்து வேறுபாடுகள் கூடாது.சமஸ்கிருதம், தமிழ் போன்றவை பிராமி எழுத்துக்களில் இருந்து உருவானவை.  அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும். நாசா விஞ்ஞானிகள்கூட, கம்யூட்டருக்கு ஏற்ற மொழி சமஸ்கிருதம் என்று தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவில் சமஸ்கிருதம் கற்பதற்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.


ஊழலுக்கு காரணம் பேராசை. வீடு, வாகனம் வாங்கும் ஆசையே ஊழலுக்கு வழிவகுக்கிறது. மாணவர்கள் தொடர்ந்து கற்க வேண்டும். இந்தியாவில் இளைஞர் வளம் அதிகம்.அவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் நிறுவனங்களுக்கு அரசு உதவிகளைச் செய்ய வேண்டும்" என்று பேசினார்.
நன்றி: இந்நேரம்.காம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.