சென்னையை அடுத்த மாங்காட்டைச் சேர்ந்த 62 வயதான பசிலா பீ என்ற பெண் மலேசியாவுக்கு வீட்டு வேலைக்கு சென்றார். திருவல்லிக்கேணியைச் சேர்ந்த டிராவல் ஏஜெண்டு ஒருவர் அவருக்கு விசா எடுத்து கொடுத்து மலேசியா வுக்கு அனுப்பி வைத்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் போது பசிலா பீயிடம் டிராவல் ஏஜெண்டு ஒரு சூட்கேசை கொடுத்து இதை மலேசியா போய்ச் சேர்ந்ததும் வாலிபர் ஒருவர் வாங்கிச் செல்வார் என்று கூறினார்.
மலேசியாவில் கோலாலம்பூர் விமான நிலையம் போய்ச் சேர்ந்ததும் அந்நாட்டு அதிகாரிகள் பசிலா பீ எடுத்துச் சென்ற சூட்கேசை சோதனையிட்டனர். அதில் 3 கிலோ கேட்டமின் போதைப் பொருள் சிக்கியது...
இதையடுத்து பசிலா பீ கைது செய்யப்பட்டார். மலேசியா கோர்ட்டு அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. இந்த தகவல் மாங்காட்டில் வசிக்கும் அவரது 4 மகள்களுக்கு தாமதமாக தெரியவந்தது. அவரை அனுப்பி வைத்த டிராவல் ஏஜெண்டிடம் கேட்ட போது அவர் தன் னால் எதுவும் செய்ய முடியாது என கை விரித்து விட்டார்.
இதைத் தொடர்ந்து பசிலா பீ மகள்கள் முதல்- அமைச்சரின் குறை கேட்பு பிரிவிலும், சென்னை கமிஷனர் ஆபீசிலும் புகார் மனு கொடுத்தனர். தங்களது தாயை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அதில் கூறியிருந்தனர்.
இது பற்றி கேள்விப்பட்ட வேலூர் எம்.பி. அப்துர் ரகுமான் இந்த பிரச்சினையை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ண கவனத்துக்கு கொண்டு சென்று மலேசிய அரசுடன் பேசி சென்னை பெண்ணை மீட்க நடவடிக்கை எடுக்கு மாறு கேட்டுக் கொண்டார்.
இந்த தகவல் அறிந்ததும் பசிலா பீயின் மூத்த மகள் நூர்ஜகான் மகிழ்ச்சி அடைந்தார். தனது தாயார் சொந்த ஊர் திரும்புவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
இதற்கிடையே பசிலா பீயை மலேசியாவுக்கு அனுப்பி வந்த டிராவல் ஏஜெண்டிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாக நூர்ஜகான் கூறினார். பசிலாவை மலேசிய போலீசார் கைது செய்ததும் அவரது குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நஷ்டஈடு கொடுப்பதாக டிராவல் ஏஜெண்டு கடிதம் எழுதி கொடுத்தார்.
இந்த கடிதம் நூர்ஜகானிடம் உள்ளது. இது முக்கிய ஆதாரமாக சிக்கியிருப்பதால் அந்த கடிதத்தை திரும்ப கேட்டு மிரட்டுவதாக நூர்ஜகான் புகார் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment