Latest News

அதிரை சகோதர,சகோதரிகளே


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹீ சமீபகாலமாக நமதூரில் பல்வேறு விபத்துக்கள் ஏற்ப்பட்டு உயிர் பழிகளும் ஏற்ப்பட்டு உள்ளது.

இதற்க்கான காரணம் நமதூரில் சரியான மருத்துவமனை இருந்தும் நாம் கண்டுக்கொள்ளாத அவலநிலை இதற்கு காரணம், நம்மில் உள்ள பலகீணம் நாமல்லாம் அறிவோம். நம்முடைய அதிரை உள்ள சகோதர்கள்,மற்றும் வெளிநாட்டு சகோதர்களும் நன்கொடையாக கொடுக்கப்பட்ட நிதியினால் கட்டப்பட்ட (ஷிஃபா) மருத்துவமனை இப்போது (கேட்ப்பாறற்று) கிடக்கின்றது...

நமதூரில் அதிகமாக ஆர்வமுள்ள இளைஞர்கள் இருந்தும் இதை பற்றி கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள். இது மிகவும் வேதனையாக அழிக்கிறது. நமதூர் வாசிகள் எந்த ஒரு நோயாக இருந்தாலும் பட்டுக்கோட்டைக்கும், தஞ்சாவூர்க்கும் அள்ளல் படும் அவல நிலை ஏற்ப்படுகிறது.

இதனால் முதல் சிகிச்சை(FIRST AID)இல்லாமலும் நம் கண் எதிரேயே பல உயிர்கள் பிறிந்துள்ளது. இதனால் நமதூர் சகோதர, சகோதரிகள் பல சிரமத்துக்கு ஆளாகிறார்கள். இப்பொளுது நாம் பிறிந்துள்ளது. இதனால் நமதூர் சகோதர, சகோதரிகள் பல சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

இப்பொளுது நாம் செய்ய வேண்டியது அந்த மருத்துவமனையுடைய நிருவாகிகளை நாம் அனுகி மருத்துவர்களை நியமனம் செய்வதிலே மும்முறமாக ஈடுபட வேண்டும்.வெளிநாட்டில் வாழ் அதிரை வாசிகளும் மருத்துவமனை நிருவாகிகளுடன் இதை பற்றி கலந்து ஆலோசித்து இருக்கிறோம்.

இதற்க்காண மருத்துவமனை மரு சீறமைப்பிற்க்காக நிதி திரட்ட படுகின்றது. அதிலும் நாம் பங்கேற்க வேண்டும். குறிப்பாக இந்த மருத்துவமனை பொறுத்தவரை (1) மகப்பெறு மருத்துவர். (2) குழந்தை மருத்துவர்.(3) இரவில் பணிபுரிய ஒரு மருத்துவர் மற்றும் இரத்த வங்கி இவை அனைத்தும் அன்றாட தேவைபடும் ஒன்று.

இந்த வசதிகள் கூட தற்ப்போது இந்த மருத்துவமனையில் இல்லை.இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் சுகாதர வசதிகளுடன். அமைந்துள்ளது. சற்று சிந்தித்து பாருங்கள். இப்போது இந்த மருத்துவமனயை சீறமைத்தால் நமதூரை சுற்றி உள்ள பல கிராமங்கள் நமதூர் ஷிஃபா மருத்துவனையில் பயன் அடைவார்கள். நாமெல்லாம் ஒற்றுமையுடன் ஒரு குடையின் கீழ் பணியாற்றினால்.

இந்த மருத்துவமனையை புது பொழிவுடன் காணாலாம்.இதனை கொண்டு நமதூரில் வணிகமும் பெருகும். இதற்க்கான முயற்ச்சியை சகோதர்கள் மிக விரைவில் பணியாற்ற வேண்டுமென்று பணி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் இங்ஙனம்

லண்டன் அதிரை வாசிகள்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.