கடையில் மாட்டுக்கறியை வாங்கி வீட்டில் சமைத்து உண்ண வேண்டும். அப்படி உண்பவர்கள்தான் பார்ப்பனியத்தை எதிர்க்கும் மனிதநேயர் என்று அழைக்கப்படுவார்கள்.
சைக்கிள் கேப்பு கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பன ஆதிக்க சாதியினர் இறைச்சி உணவுக்கு எதிரான காழ்ப்புணர்வைக் கொட்டுவதற்கு தவறுவதில்லை.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நூறு கோடி முதலீட்டில் அரசு, தனியார் நிறுவனங்கள் இணைந்து எட்டு நவீன இறைச்சிக் கூடங்களை நிறுவ உள்ளதாம். இதில் ஒவ்வொரு கூடத்திலும் 15 ஆயிரம் கால்நடைகள் இறைச்சிக்காக வெட்டப்படுமாம். இதை பிராணிகள் வதை செய்யப்படும் என்பதாக வன்மத்துடன் தினமணி குறிப்பிட்டுள்ளது. சிக்கன், மீன், மட்டன், பீஃப் சாப்பிட்டால் அது பிராணி வதையா? இல்லை அசைவச் சாப்பாட்டை இழிவுபடுத்துவது மனித வதையா? அஜாத சத்ரு அம்பி வைத்தியநாதன் பொங்கல், நெய், வெண்ணெய், இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் என்று நோகாமல் உள்ளே தள்ளும் போது வெஞ்சன சாமான்களுக்கே சிங்கி அடிக்கும் நமது மக்கள் மலிவான மாட்டுக்ககறி சாப்பிட்டால் அது பிராணிவதையா?...
உத்தரப்பிரதேச இறைச்சிக்கூடங்களை எதிர்த்து ஜைன துறவி ப்ரபாசாகர்ஜி உண்ணாவிரதம் மேற்கொண்டாராம். அவரை கைது செய்த போலீசார் வண்டியில் கொண்டு சென்றார்களாம். ஜைன துறவிகள் எப்போதும் கால்நடையாக செல்வதால் இப்படி வண்டியில் கொண்டு சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதாம்.
போலீசு கைது செய்தால் ஜீப்பில்தான் ஏற்றுவார்கள், அவன் ஜைனனோ இல்லை பொறுக்கி சங்கராச்சாரியோ இல்லை பிட்டுப் பட பூசாரி தேவநாதனோ யாராக இருந்தாலும் இதுதானே நடைமுறை? மேலும் சட்டம் ஒழுங்கு சமூகப் பிரச்சினைகளில் போராட வருவோர் எவரும் தங்களுக்கென்று தனியாக சலுகைகள் கோருவது எப்படி சரியாக இருக்க முடியும்? உன் மத அனுஷ்டானங்களை எப்போதும் பின்பற்ற வேண்டுமென்று சொன்னால் அதற்குரிய கட்டுப்பாடுடன் சமூக விசயங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும். உன் பார்வையை மற்றவர் மீது திணிப்பதற்கு அதையும் போராட்டமாக நடத்தும் உனக்கு எல்லோருக்கும் உள்ள உரிமைதானே கிடைக்கும்?
தற்போது உ.பி இறைச்சிக்கூடங்கள் மற்றும் ஜைன சாமியாரை ஜீப்பில் ஏற்றிச் சென்றது ஆகிய இரு காரணங்களை எதிர்த்தும் வேலை வெட்டி இல்லாத ஜைன, இந்துமதவெறி மற்றும் சைவ உணவு இயக்கங்கள் தில்லி,மும்பை, கொல்கத்தா என ஆங்காங்கே சவுண்டு விட்டு போராட்டம் நடத்துகிறார்களாம். இதன் தொடர்ச்சியாக சென்னை மெமோரியல் ஹால் முன் ஆர்ப்பாட்டம் நடந்ததாம். இதில் சென்னை புளியந்தோப்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன ஆட்டிறைச்சிக் கூடத்தை எதிர்க்கும் காரணத்தையும் சேர்த்திருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பார்ப்பன இந்து முன்னணியின் தலைவர் இராம கோபாலன் தலைமையேற்றாராம்.
இதில் பேசிய இராம கோபாலன் ” பிராணிகளின் இறைச்சிகளை ஏற்றுமதி செய்வதற்காகவே இது போன்ற இறைச்சிக் கூடங்கள் அமைக்கின்றனர். நம் நாட்டில் இறைச்சியை உண்பவர்கள் குறைவான அளவே உள்ளனர். எனவே பிராணிகள் இறைச்சி ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். புளியந்தோப்பில் 1000 மாடுகளும், 5000 ஆடுகளும் இறைச்சிக்காக வெட்டப்படும் என தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் கால்நடைகள் இல்லாத நிலையில் இருக்கும் கால்நடைகளை பலியிடுவதை அரசு தடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு இலவசமாக கால்நடைகள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படுமென அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குறுதியை வரவேற்கிறோம்” என்று திமிராக கக்கியிருக்கிறார்.
இறைச்சியை எதிர்த்து நடந்த இந்த மாபெரும் போராட்டத்தை அவாள் பத்திரிகைகளான தினமணி, தினமலர் இரண்டும் முக்கியத்துவத்துடன் செய்தி போன்ற வன்மத்தை வெளியிட்டிருக்கின்றன.
முதலில் சைவ உணவு தின்பவர்களெல்லாம் மனிதாபிமானிகள் போலவும், இறைச்சி சாப்பிடுபவர்களெல்லாம் காட்டுமிராண்டிகள் போலவும் சித்தரிக்கின்ற இந்தப் பார்வை பார்ப்பனத் திமிரன்றி வேறென்ன? யதார்த்தமாக ஒரு விசயத்தை பார்ப்போம். சாலையில் ஒரு விபத்து ஏற்பட்டு ஒரு மனிதன் கைகால் முறிந்து ரத்தச் சிதறலோடு விழுந்து கிடக்கிறான். அப்போது அருகே கறிக்கடை பாய் அப்துல்லா, பார்த்தசாரதி கோவில் பூசாரி ராமானுஜ அய்யாங்காரும் வருகிறார்கள். விபத்து, இரத்தத்தை சகிக்காத அய்யங்கார் ஐயோ பாவம்
No comments:
Post a Comment