சகோதரர் பிறைநதியார் அவர்களே!
தமிழகத்தில் பாச வேரூன்ற முதன்முதலில் களம் அமைத்து வழி வகுத்தவர் அம்மையார் அவர்கள்தான்.அதன் பின்பே தி[ரு]மு.க[கருணாநிதி]
1998 -ல் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 5 தொகுதியில் போட்டியிட்டு 3 தொகுதிகளில் திருச்சி, கோயம்புத்தூர், நீலகிரி வென்றது.
1999 -ல் பாராளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 6 தொகுதியில் போட்டியிடது. 4 தொகுதியில் (கன்னியாகுமரி, திருச்சி, கோயம்புத்தூர், நீலகிரி)வென்றது .
2001 சட்ட சபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து 21 தொகுதியில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் (காரைகுடி, மைலாபூர், மயிலாடுதுறை, தளி) வென்றது.
2004 பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 6 தொகுதியில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை. . இந்த தேர்தலில் பீஜேபி பெற்ற மொத்த வாக்குகள் 14,55,899...
2011/4/6 பிறைநதிபுரத்தான் <pirainathipurathaan@gmail.com>
பா.ஜ.க ஒன்றும் தீண்டத்தகாத கட்சியல்ல - அரசியலில் தீண்டாமையை நாங்கள் பின்பற்ற மாட்டோம் என்று முரொசொலி மாறன் மூலம் அறிவித்து - அக்கட்சியுடன் முதன்முதலில் கூட்டனி அமைத்து தமிழகத்தில் பா.ஜ.க வேரூன்ற காரணமாக இருந்தது கலைஞர் தலைமையில் உள்ள தி.மு.க தான் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.. .
முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு நாடகம் நடத்துவது யார்? - காயல் மகபூப்
நன்றி சகோ;சித்திக்
தே ர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. அந்த சூட்டில் பலரது சாயங்கள் வெளுக்கத் தொடங்கிவிட்டது.
பிரதான கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு முடிந்ததும் தேர் தல் அறிக்கைகளை வெளியிட்டன.
எதிர்கட்சி அறிக்கையை எதிர்பாரா மல் வழக்கம்போல் திமுக முந்திக் கொண்டது. மார்ச் 19ம் தேதி தோழமைக் கட்சி தலைவர்கள் முன்னிலையில் முதல்வர் கலைஞர் திமுக வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
ஆனால் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது நாங்கள் என்ன செய்வோம் என்ற வாக்குறுதிகளை அளித்திருந்ததோடு, திமுக அரசின் சாதனைகளையும் பட்டியலிட்ட அந்த அறிக்கையை முழுமையாக படித்தார் கலைஞர்.
திமுகஅறிக்கை வரும்வரை காத்திருந்து அதை காப்பியடித்து மார்ச் 24ம் தேதி அ.இ.அ.தி.மு.க வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜெயலலிதா.
அதை முழுமையாகக்கூட படிக்க முடியவில்லை. முக்கியமான அறிவிப்புக்களை மட்டும் வெளியிட்டார். அத்தனை விஷயங்களும் திமுக அறிக்கையின் நகல்கள்.
இப்படித்தான் இருக்கும் என எதிர்பார்த்திருந்த நமக்கு அது எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. `அ.இ.அ.தி.மு.க தான் முஸ்லிம்களின் பாதுகாவலர்கள் ஜெயலலிதாதான் நமது நம்பிக்கை நட்சத்திரம்� என புதிதாக சொல்லப் புறப்பட்டிருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும்.
தி.மு.க தேர்தல் அறிக்கையின் பொருளடக்கத் திலேயே ``சிறுபான்மை யினர் நலன்�� என குறிப்பிட்டு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. ``சிறுபான்மையினர் கல்வி, பொரு ளாதார ரீதியில் பின் தங்கியுள்ளவர்கள் குறிப்பாக பெண்கள் பயனடையும் வகையில் சிறப்புச் சலுகைகளுடன் கல்வி மேம்பாட்டுத்திட்டத்தை செயல்படுத்துவோம்.
சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களுக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கும் தேவையான பாதுகாப்பினை வழங்குவோம் கல்வி வேலை வாய்ப்பில் முஸ்லிம்கள் உரிய பங்கினை பெற நீதியரசர் ரங்கனாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை விரைவில் அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்தய அரசை வலியுறுத்துவோம்
முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை அளித்தது தி.மு.கழக அரசுதான். அதனை மேலும் உயர்த்துவது பற்றி பரிசீலிப்போம்�� இந்த வாக்குறுதிகள் திமுக அறிக்கையில் இடம் பெற்றிருப்பவை. அ.இ.அ.தி.மு.க வழக்கம் போல் முஸ்லிம்களை மறந்துவிட்டது. அதற்கு பின்னர் அவர்களோடு தோழமை கொண்டிருப்போர் தொந்தரவு செய்த காரணத்தால் திருச்சியில் 26.03.2011 அன்று தேர்தல் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா, முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி வாய் திறந்துள்ளார்.
அதற்கு சுடச்சுட பதிலடி கொடுத்த கலைஞர், ஜெயலலிதாவால் முஸ்லிம்களை ஏமாற்றமுடியாது என தெரிவித்துள்ளார்.
இரண்டு முறை ஆட்சி யில் இருந்தபோது இஸ்லா மியர்களுக்கு ஜெயலலிதா ஏன் இட ஒதுக்கீடு வழங்க வில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ள முதல்வர் கலைஞர், தி.மு.க. அரசு தான் 3.5 சத வீத இட ஒதுக்கீட்டை வழங்கியது. இதை உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கையை பரிசீலிப்போம் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட் டுள்ளோம் என தெளிவு படுத்தியுள்ளார்.
கேள்வி பதிலாக முதல்வர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக் கையில் குறிப்பிட்டுள்ளதாவது- இ.யூ. முஸ்லிம் லீக் பெருந்தன்மை!
கேள்வி: அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தி வழங்கப்படும் என்று ஜெயலலிதா பேசியிருக்கிறாரே?
பதில்: யாரை ஏமாற்றி னாலும் இஸ்லாமியப் பெருமக்களை ஜெய லலிதாவினால் ஏமாற்ற முடியாது. இஸ்லாமியர் களுக்கும், தி.மு.க.விற்கும் உள்ள உடன்பாடு, ஒற் றுமை என்பது பேரறிஞர் அண்ணா அவர்களும், காயிதேமில்லத் அவர்களும் இருந்த காலத்தி லிருந்து தொடர்ந்து வருகின்ற உடன்பாடு.
ஏன், இந்தத் தேர்தலிலே கூட இந்திய யூ னியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் முதலில் 3 இடங்கள்தான் பகிர்ந்து கொள்ளப்பட் டன. அதன் பின்னர் காங் கிரஸ் கட்சியின் சார்பில் 63 இடங்கள் வேண்டுமென்று வலியுறுத்திய நேரத்தில், தி.மு.க.விற்கு அத்தனை இடங்களை ஒதுக்க முடியாத சூழ்நிலையில் -இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் களான இ.அஹமதுவும், பேராசிரியர் காதர்மொய்தீனும் தி.மு.க. கேட்டுக் கொள்ளாத நிலையிலேயே, பா.ம.க. எப்படி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 31 இடங்களில் ஓர் இடத்தை காங்கிரசுக்கு அளிக்க முன்வந்ததைப் போலவே தாங்களாகவே முன்வந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 3 இடங்களில் ஓர் இடத்தினை காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்லீக் கட்சி பெருந் தன்மையோடு விட்டுக் கொடுத்தது. அதைக்கூட ஒரு சிலர் இஸ்லாமியர்களுக்கு 3 இடங்களை தி.மு.க. முதலில் அளித்து விட்டு, அதிலே ஓர் இடத்தைப் பறித்துக் கொண்டதாக அவதூறு செய்தார்கள். ஆனால் நானே அண்ணா அறிவாலயத்திற்கு பேராசிரியர் காதர் மொய்தீனை யும், தமிழ் மாநில தேசிய லீக் என்ற பெயரில் தனி யாக இயங்கி வந்த திருப்பூர் அல்தாப்பையும் அழைத்து இருவருடனும் பேசி, இரண்டு இயக்கங்களையும் ஒன்றாக இணைத்து வைத்ததோடு - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மீண்டும் ஓர் இடத்தைச் சேர்த்து 3 இடங்களாகவே உயர்த்திக் கொடுத்தோம். இதையெல்லாம் இஸ்லாமிய சமுதாயத்தினர் நன்றாகவே உணர்வார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் இஸ்லாமியர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பவர்கள் யார் என்பது நன்றாகத் தெரியும். தேர்தல் கூட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த வுடன் இஸ்லாமியர்களுக் கான இடஒதுக்கீட்டினை உயர்த்தி வழங்க நட வடிக்கை எடுப்பேன் என்று பேசிய ஜெயலலிதா, இதற்கு முன்பு இரண்டு முறை ஆட்சியிலே பத்தாண்டு காலம் இருந்தாரே, அப்போது ஏன் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு செய்யவில்லை? தி.மு.க. ஆட்சியிலே இருந்தபோதுதானே இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கியது. அதனையும் உயர்த்த வேண்டுமென்று கோரிக்கையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போன்ற அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் அதன் தலைவர்களும் வைத்ததையொட்டி - தற்போது தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில், இஸ்லாமிய மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை ஏற்று 3.5 சதவிகிதம் அளித்தது தி.மு.க. ஆட்சி தான்.
இந்த ஒதுக்கீட்டு அளவினை மேலும் உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை குறித்து பரிசீலிப்போம் என்று எழுதப்பட்டு, படிக் கப்பட்டு அது ஏடுகளிலும் வெளிவந்துள்ளது. எனவே தேர்தலுக்காக - வாக்குக்காக சொல்வது யார், உண்மையிலேயே அக்கறையோடு செயல்படுத்துபவர் யார் என்பதை அவர்கள் நன்றாகவே அறிவார்கள்.
முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டில் ஜெயலலிதா நிலைப்பாடு!
இஸ்லாமியர்களுக்கு இன்னும் ஞாபகப்படுத்த வேண்டுமேயானால் - கரசேவை நேரத்தில் அதனை வலியுறுத்தி தேசிய ஒருமைப்பாட்டு மன்றக் கூட்டத்தில் பேசிய ஜெய லலிதா, """"பெரும்பான்மை யினரும் அவர்களுடைய உரிமைகளை அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். இந்த நாட்டு மக்கள் அயோத்தியில் கோவில் கட்டப்பட வேண்டும் என விரும்புகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதை நமது முஸ்லிம் சகோதரர்கள் புரிந்து கொண்டு உத்தரப்பிரதேச இந்துக்களின் விரு ப்பத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும்�� என்று பேசி அப்போதே ஏடுகளில் எல்லாம் அந்தப் பேச்சு வெளியிடப்பட்டது.
23-7-2004 தேதிய """"தினத்தந்தி�� நாளிதழில் ஜெயலலிதாவின் பேட்டி ஒன்று வெளிவந்தது. அந்தப் பேட்டி இதோ- கேள்வி: இஸ்லாமியர்களுக்கு ஆந்திர மாநிலத்தில் ஆட்சி செய்கிற காங்கிரஸ் அரசு 5 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்துள் ளது. நீங்கள் தேர்தலின் போது இதற்கு ஆதரவாக வாக்குறுதி கொடுத்தீர்களே?
ஜெயலலிதா: இல்லையே? அது தொடர்பாக எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லையே!
கேள்வி: சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
Error! Filename not specified.ஜெயலலிதா: முஸ்லிம்கள் மட்டும் சிறுபான்மையினர் அல்ல. கிறித்தவர்கள் இருக்கிறார்கள், பார்சிகள் இருக்கிறார்கள், புத்த மதத்தினர் இருக்கிறார்கள், தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் முஸ்லிம்கள், கிறித்தவர்கள் சமமாக இருக்கிறார்கள். முஸ்லிம் களுக்கு தனி ஒதுக்கீடு அளித்தால் நாளை கிறித் தவர்களும் இடஒதுக்கீடு கேட்பார்கள். அப்புறம் மற்ற சிறுபான்மையினரும் கேட்பார்கள். எனவே இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது இயலாத ஒன்றாகும். அரசியல் சட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் ஏற்கனவே பல சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள். பெரும்பான்மைச் சமூகத்தினர் அந்தச் சலுகைகளையெல்லாம் அனுபவிக்கவில்லை.
இதற்கு பிறகு 30-7-2003 அன்று செய்தியாளர் ஒருவர் """"அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை ஆதரிக்கிறீர்களா?�� என்று கேட்டபோது ஜெயலலிதா என்ன சொன்னார்? """"ஆமாம், ஆதரிக்கிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முடிய வில்லை என்றால் வேறு எங்கே கட்ட முடியும்?�� என்று ஜெயலலிதா எதிர்க் கேள்வி எழுப்பினார்.
இப்படியெல்லாம் ஜெயலலிதா பேசியதை மறைத்துவிட்டு தற்போது இடஒதுக்கீட்டு அளவை உயர்த்துவேன் என்று தேர்தல் கூட்டத்திலே பேசினால் அதை அவர்கள் நம்புவார்களா? இன்னும் ஜெயலலிதாவிற்கு விளக்கம் சொல்ல வேண்டுமென்று விரும்பினால் தி.மு.க. ஆட்சியில் இஸ்லாமியப் பெருமக்களுக்கு என்னென்ன சலுகைகள் செய்யப்பட்டன என்பதையும் விரிவாக எழுதலாம். இவ்வாறு முதல்வர் கலைஞர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கலைஞர் குறிப்பிடுவது சரியா? எனக்கேட்டால் முற்றிலும் சரி என்று நாமே பதில் சொல்வோம். ஜெயலலிதா நம்பத்தகுந்தவரா என்று கேட்டால் மறுமலர்ச்சி தி.மு.க வின் வைகோ மட்டுமல்ல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்/ மனித நேய மக்கள் கட்சியின் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லாவையும் பதில் சொல்ல வைப்போம்.
ஆம்!
முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைத்தது எப்படி?��
என்ற தலைப்பில் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் எழுதிய நூல் வெளிவந்துள்ளது.
அதில் 16ம் பக்கத்தில் `இவர்தான் ஜெயலலிதா� என்ற தலைப்பில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, `` ஓர் இறை நம்பிக்கையாளர் ஒரே பொந்திலிருந்து இரண்டு முறை கொட்டுப்பெற மாட்டார் என்பது நபி மொழி. ஜெயலலிதாவிடம் பலமுறை கொட்டுபட்டும் சிலர் நபிவழியில் படிப்பினை பெறவில்லை. கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாதவர் ஜெயலலிதா என்பது ஒன்றுக்கு இரண்டு முறை நிரூபணமாகியும் கூட செல்லாக்காசு ஆணையத்தை அவர் தந்ததற்காக 2006 சட்ட மன்ற தேர்தலில் அவருக்கு ஆதரவு பிரச்சாரம் என்று கூறி தேர்தல் பிரச்சாரம் செய்தனர்...
Error! Filename not specified.ஜெயலலிதா 2001 முதல் 2006 வரை தனி பெரும்பான்மையுடன் ஆட்சி செய்தார். ஆனால் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்பதற்கு அவர் எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை என்பது மட்டுமின்றி ஆந்திராலில் முஸ்லிம்களுக்கு
தகவல் : அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment