Latest News

  

நல்லாட்சி தொடர ஆதரிப்போம்!

2011 ஏப்ரல்13 தமிழகத்தில் பொதுத் தேர்தல்!

தேர்தலில் வாக்களிக்க வேண்டியது ஜனநாயகத்தில் நம்பிக்கை யுள்ளவர்களின் உரிமை. அனைவரையும் வாக்களிக்கச் சொல்வது நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்களின் கடமை!

உரிமையை நிலைநாட்டும் போதுன் கடமையை நிறைவேற்றும்போதும் நிதானத்தோடு சில விஷயங்களை சீர்தூக்கிப்பார்ப்பது அவசியம்! ஏனெனில்...

ஐந்து ஆண்டு ஆட்சி என்பது யாரும் வரலாம் யாரும் ஆளலாம் என அலட்சியப்படுத்தும் விஷயமல்ல.

தமிழகத்தின் தலைவிதி மட்டுமல்ல. நம்முடைய நிகழ்காலம், வருங்கால தலைமுறையின் எதிர்காலம் என எல்லாமே அதில் அடங்கியிருக்கிறது.

ஒரு அரசை தேர்ந்தெடுப்பதற்கு நம்முடைய வாக்கை பயன்படுத்தும் போது மன நிறைவும், நிம்மதியும், மன மகிழ்வும் நமக்கு ஏற்பட வேண்டும்.

ஒரு அரசு அமைந்தபின் அது செய்கின்ற ஆட்சிமுறை - சாதனைகளால்தான் வக்களித்தவனுக்கு இந்த மனநிறைவை அளிக்க முடியும். ணிறூம்ஷ யார் ஆட்சிக்கு வந்தால் தனக்கும் தான் சார்ந்துள்ள சமுதாயத்திற்கும் நன்மை - அதைவிட யார் ஆட்சி அமைத்தால் தன் சமூகத்திற்கு தீமை இருக்காது என்பதை ஒவ்வொருவரும் எடை போடவேண்டியது காலத்தின் கட்டாயம்.

``நீங்கள் அனைவருமே பொறுப்பாளிகள்; உங்கள் பொறுப்புக்கள் பற்றி விசாரிக்கப்படும்�� என்பது நபிகள் நாயகத்தின் எச்சரிக்கை!�� இதை மனதில் நிறுத்தி தேர்தலை பற்றி அலசுவோம்.

இந்த தேர்தலில் தி.மு.க தலைமையில் ஒரு அணி. அ.இ.அ.தி.மு.க தலைமையில் இன்னொரு அணி. பாஜக தனி. இந்திய ஜனநாயக கட்சி தலைமையில், சில சமுதாய அமைப்புக்கள் களத்தில் உள்ளன.

இதில் யாரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் அதற்கு காரணம் என்ன என்பதை ந்ழிட்ஙூன் அதே சமயம் ஒரு அணியை புறக்கணிப்பதற்கும் நியாயமான காரணங்கள் சமுதாயத்திடம் தெளிவுப்படுத்த வேண்டியது அவசியம்...


முஸ்லிம் லீக் - ஒரு வரலாற்று பார்வை

இந்திய முஸ்லிம்களின் வாழ்வோடும் வரலாற்றோடும் இரண்டறக் கலந்துவிட்ட முஸ்லிம் லீக் ``தாய்ச்சபை�� என்றும், சமுதாயத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பேரியக்கம் என்றும் பெருமையுடன் அழைக்கப்படுகிறது.

தாய்ச்சபை என்று இதை அழைப்பதற்கு காரணம் சமுதாயத்தின் மூத்த இயக்கம்!

ஆம் 1906 ம் ஆண்டு டிசம்பர் 30 ம் தேதி அகில இந்திய முஸ்லிம்லீக் அறிஞர் பெருமக்களால் உருவாக்கப்பட்டது. 1907 ல் நடைபெற்ற முஸ்லிம்லீக்கின் முதல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே கல்வி வேலைவாய்ப்பில் முஸ்லிம்கள் பின்தங்கியிருப்பதால் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதுதான்.

கல்வி-வேலைவாய்ப்பு மட்டுமின்றி நாடாளுமன்ற சட்டமன்றங்கள் உள்ளாட்சிஅமைப்புக்களிலும் தனி இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தது. 1947 ஆகஸ்ட் 15 இந்தியத் திருநாட்டின் விடுதலைக்குப்பின் டிசம்பர் 13,14 தேதிகளில் கராச்சியில் நடைபெற்ற கடைசி கவுன்சில் கூட்டத்தோடு அகில இந்திய முஸ்லிம்லீக் நிறைவு பெற்றது.

1948 மார்ச் 10 புதன் கிழமை காலை 11 மணி சென்னை அரசினர் தோட்டத்திலுள்ள ராஜாஜி ஹாலில் கண்ணியத்திற்குரிய ``காயிதே மில்லத்�� அல்ஹாஜ் எம். முஹம்மது இஸ்மாயில் சாகிப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துவக்கப்பட்டது.

இற்தியத்திருநாட்டின் அரசியல் சட்டத்தை உருவாக்கிய இந்திய அரசியல் நிர்ணய சபை, நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை, மாநிலங்களின் சட்ட சபைகளி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் இடம் பெற்று மகத்தான சாதனைகள் புரிந்துள்ளனர். * பொது சிவில் சட்டத்தை கொண்டுவராமல் தடுத்தது, சிறப்பு திருமண சட்டத்திலிருந்து முஸ்லிம்களுக்கு விலக்கு பெற்றுத்தந்தது. * முஸ்லிம் தனியார் சட்டம் என அழைக்கப்படும் இஸ்லாமிய ஷரீஅத் ழிட்டத்தை முஸ்லிம்கள் பின்பற்றவும், காப்பாற்றவும் சட்டப்பூர்வ வழிவகை ஏற்படுத்தி தந்தது.

* இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யாமல் எரிக்க வேண்டும் என சட்டம் கொண்டுவர முயன்றபோது அதைத்தடுத்து நிறுத்தி நல்லடக்கம் செய்கின்ற ஙிமுமையை நிலை நாட்டியது.

  • ஊர் எல்லைக்குள் கபரஸ்தான்கள் இருக்கக்கூடாது என சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதனை எதிர்த்து பள்ளி வாசல்களிலும் கபரஸ்தான்கள் இருக்கும் நிலையை பெற்றுத்தந்தது.

பள்ளிவாசல்களில் ஒலி பெருக்கி மூலம் பாங்கு சொல்லும் உரிமையை காப்பாற்றியது.

* புறக்கணிக்கப்பட்டிருந்த உர்து மொழிக்கு பாதுகாப்பும் உரிய அந்தஸ்தும் பெற்றுத் தந்தது.

இந்திய விடுதலைக்குப்பின் சோதனையான ஒரு காலகட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாதித்த சாதனைகளில் மிகச் சிலதான் இவை.

எனவேதான் சமுதாயத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பேரியக்கம் என இந்திய யூனியன் முஸ்லிம் லீகை முஸ்லிம்கள் ஏற்றி போற்றுகிறார்கள்.

��இந்த சாதனைகளையெல்லாம் காயிதே மில்லத் போன்ற தலைவர்கள் இருந்து சாதித்தவை. அந்த தலைவர்களுக்குப்பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ன சாதித்து விட்டது?�� என்ற கேள்வியை விவரம் தெரியாமல் பலரும் இன்று கேட்கின்றனர்.

இந்தக் கேள்விக்கான பதிலையும் பார்த்து விடுவோமே!

இன்று கோடிக்கணக்கில் இந்தியர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். அரபு நாடுகளில் 25 லட்சம் பேர். இதில் சவூதியில் மட்டும் 18 லட்சம் பேர் உள்ளனர். னீபூயூலி வேலை வாய்ப்புக்களுக்கு அடித்தளம் அமைத்துத் தந்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக். 1970களில் இந்திய பிரதிநிதியாக அரபுலகம் சென்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் அரபு நாட்டு மன்னர்களிடம் ஷடுகிசிகுபு காரணத்தால் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்புக் கதவு அங்கே திறக்கப்பட்டது.

இந்த உண்மை தெரிந்தால் முஸ்லிம்லீகை விமர்சிக்கும் துணிச்சல் யாருக்கும் வராது.

இன்று எல்லோரும் பேசுகின்ற இட ஒதுக்கீடு என்ற சொல்லையே அறிமுகப்படுத்தி அரசியல் அரங்கில் அதற்கு அங்கீகாரம் பெற்றுத்தந்தது முஸ்லிம்லீக்.

கேரளமும் ஆந்திராவும் நம்மோடு இணைந்திருந்த சென்னை மாகாணத்தில் 1927 ல் முஸ்லிம்களுக்கு 7 சதவீதமும் 1947 ல் 7.14 சதவீதமும் இட ஒதக்கீட்டை பெற்றுத்தந்தது. இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்த பின் 1951ல் இந்த உரிமை பறிக்கப்பட்டது.

இந்திய விடுதலைக்குப்பின் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையில் செயல்பட்டது கேரளாவில் தான். அதன் விளைவாக முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோருக்கு இன்று 69 சதவீத இட ஒதுக்கீ வழங்கப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முயற்ஊபுட் 95 ழிஷிஆஹஷி க்ஷ்எடுன்லிழ் ழள்ஙீம்ஸிட் ஙீர்புடு ஸின் ந்ள்க்ஷிறூ. தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட 252 பிற்பட்டோர் பட்டியலில் அன்ஸர்(5), தக்னி(21), தூதேகுளா(24), லெப்பை(69), மாப்பிள்ளை(77) என்றழைக்கப்பட்ட முஸ்லிம்களில் 95 சதவிகிதம் பேர் பிற்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றனர். பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து 3.5 சதவீத தனி இட ஒதுக்கீடு 2007 செப்டம்பர் 15ல் வழங்கி தி.மு.க அரசின் முதல்வர் கலைஞர் வழங்கினார். 2004 ம் ஆண்டு இந்திய மக்களவைக்கான தேர்தலில் இந்திய யூனியன்முஸ்லிம் லீகின் அன்றைய தேசிய பொதுச்செயலாளர் இ.அஹமது அவர்களும், இன்றைய தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர். கே.ஏ.எம். காதர் மொகிதீன் அவர்களும் வெற்றி பெற்றார்கள்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம் பெற்றது. இ.அஹமது அவர்கள் வூகுபு வெளியுறவுத்துறை இணைஅமைச்சரானார்.

இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கட்சியும் குறைந்தபட்ச செயல் திட்டங்களை அளித்தன.

  • இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்வைத்த குறைந்த பட்ச செயல் திட்டத்தால் கிடைத்த பலன்கள் தான் நீதியரசர் ராஜேந்திர சச்சார் கமிஷனும், நீதியரசர் ரங்கனாத் மிஸ்ரா கமிஷனும்.!

சச்சார் கமிஷன் பரிந்ததுரை பெறப்பட்டதால் இன்று முஸ்லிம் சமுதாயத்திற்கு எண்ணற்ற நன்மைகள் கிடைத்துள்ளன.

மிஸ்ரா கமிஷன் பரிந்துரை அமல்படுத்தப்பட்டால் கல்வி வேலை வாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு கிடைக்கும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கம் வகிக்கும் மத்திய அரசின் சாதனைகழ் நிபூட்ன். அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறோம்.

* இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக சிறுபான்மையினர் நலனுக்காக தனி அமைச்சரகம்

* சிறுபான்மையிருக்கு பிரதமரின் 15 அம்ச திட்டம்

* சச்சார் கமிஷன் பரிந்துரை அடிப்படைதுல் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் 90 மாவட்டங்கள் கண்டறியப்பட்டு அங்கு அபிவிருத்தி பணிகள்.

* 9,661 பள்ளிக்கூடங்கள் 1562 வங்கி கிளைகள் திறப்பு ரூ 2,31,223 கோடி முன்பணம்

* இந்திய முஸ்லிம்களிடையே கல்வி கற்கும் ஆர்வம் அதிகரிப் கடந்த கல்வியாண்டில் 1 கோடியே 48 லட்சத்த 30 ஆயிரம் குழந்தைகள் பள்ளியில் படிப்பு, இதில் 49 சதவீதம் பெண்கள்.

  • தேசிய சிறுபான்மை மேம்பாஙீ நிதி கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ 1000 கோடியாக உயர்வு.

* மௌலானா அபுல்கலாம் ஆஸாத் கல்வி அறக்கட்டளை நிதி ரூ 100 கோடியிலிருந்து ரூ 425 கோடியாக உயர்வு சிறுபான்மையினர் அதிகம் வாழும் மாவட்டங்களுக்கு பன்முகப்பிரிவு திட்டம் ரூ 807.01 கோடி நிதி.

* மாணவர்களுக்கு 2223841 கல்வி உதவி தொகை

* கடந்த ஆண்டில் சிறுபான்மையின் கடன் உதவி 1,08,850 கோடி அரசு வேலைவாய்ப்பில் சிறுபான்மையின் பிரதிநித்துவம்

* 2006-07ல் 7 சதவீதம், 2008-09ல் 9 சதவீதம்

* 2008-09ம் ஆண்டு ஹஜ் மான்யம் ரூ867 கோடி.

பட்டியல் போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

இப்போது சொல்லுங்கள் இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமா? வேண்டாமா?

இந்த சாதனைகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காரணமா? இல்லையா?

எண்ணமா? சின்னமா?

தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் hஹள்ஸ் 3 தொகுதிகள் என 2011 பிப்ரவரி 26ம்தேதி உடன்பாடு செய்து முதல்வர் கலைஞரும் தலைவர் பேராசிரியரும் கையெழுத்திட்டனர்.

அதே சமயம் தி.மு.க காங்கிரஸ் உடன்பாடு ஏற்படாமல் அமைச்சரவையிலிருந்து விலகும் முடிவை மார்ச் 5ம் தேதி தி.மு.க எடுத்தது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை தலையிட்டது. மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், தேசியத் தலைவர் இ.அஹமது சாகிபை தொடர்ந்து எப்படியும் தி.மு.க காங்கிரஸ் உடன்பாடு ஏற்பட முயற்சியுங்கள் என்றார்.

இ.அஹமது சாகிப் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களான பிரணாப் முகர்ஜி, அகமது படேல், குலாம் நபி ஆஸாத் ஆகியோரிடம் முயற்சி செய்தார். காரியங்கள் வேக வேமாக நடைபெற்றன.

மார்ச் 8ம் தேதி மாலை டெல்லியில் சோனியா காந்தியின் இல்லத்தில் காங்கிரஸ் - தி.மு.க உடன்பாடு ஏற்பட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்தது. இது தி.மு.க தலைமைக்கு தெரியாது என்பதே உண்மை.

நிலைமைகளை அறிந்த தி.மு.க தலைமை தாய்ச்சபை தலைவர்களை அழைத்து பேசியது, ``எங்களுக்குத் தெரியாமல் நீங்கள் செய்த இந்த பெருந்தன்மை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது, நீங்கள் தொகுதியை இழக்க வேண்டாம். அதனை தருகிறோம் என தந்தனர்��. தமிழகத்தை பொறுத்தவரை 23 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் கட்சிக்குத்தான் பொதுவான சின்னம் ஒதுக்கப்படும். அதற்கு குறைவான தொகுதியில் போட்டியிட்டால் சுயேட்சை சின்னங்கள்தான். இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இன்னொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டால் நாடாளுமன்றத்திலோ சட்டமன்றங்களிலோ ``கொறடா�� உத்தரவிற்கு காத்திருக்க வேண்டுமென்பது புருடா.

மண்டல் கமிஷன் அறிக்கை விஷயத்தில் ``கை�� சின்னத்தில் வெற்றி பெற்றிருந்த சிராஜுல் மில்லத் காங்கிரஸ் முடிவிற்கு மாற்றமாக நாடாளுமன்றத்தில் வாக்களித்ததை யாரும் மறந்து விட முடியாது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பொறுத்தவரை 1967 தேர்தலில் தி.மு.க ஐந்து தொகுதிகளை ஒதுக்கியது. காயிதே மில்லத் ஒன்றை திரும்ப கொடுத்துவிட நான்கில் போட்டியிட்டு நான்கிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வென்றது. 1971 ல் ஐந்து தொகுதிகளில் போட்டியிட்டு வென்றது. 1977ல் 10 தொகுதியில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் தான் வென்றது. 1980 ல் 6 ல் ஒரு இடமும் 1984 ல் 6 ல் னிஙு இடக்ஷ்ன் வென்றது.

வரலாற்றில் முதல் முறையாக தன் சின்னத்தில் போட்டி என விளம்பரம் செய்கிறார்களே அவர்கள் தெரிந்து கொள்ளட்டும் 1989 ல் காங்கிரஸ் கூட்டணியில் 8 இடங்களில் `ஏணி சின்னத்திலும், 1991 ல் பா.ம.க உடன் கூட்டணி சேர்ந்து 18 இடங்களிலும் 4 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏணி சின்னத்தில் போட்டியிட்டு அனைத்திலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோற்றது.

சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமத் 1984 ல் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு திருவல்லிக்கேணி ந்ஷிட்ஸ்கு சட்டமன்ற உறுப்பினராகவும், 1990ல் கை சின்னத்தில் போட்டியிட் வேலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். அதைப்பின்பற்றித்தான் 2004 உதயசூரியன் சின்னத்தில் போட்டிதுஙீஸி பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் 2009 எம். அப்துர் ரஹ்மான் 2009 நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், அரவக்குறிச்சியில் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் அவர்களும், வாணியம்பாடியில் ஹெச். அப்துல் பாஸித் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் போட்டியிட்டு இருந்துள்ளனர்.

எனவே தனி சின்னம் என்பது முக்கியமல்ல. எண்ணம் தான் முக்கியம்.

எண்ணங்களின் அடிப்படையில்தான் செயல்கள் என்பது நபிமொழி.

நம்முடைய எண்ணமும் தூய்மையாக இருக்கிறது; சமுதாய நலனை சிந்திக்கிறது. பாதை தெளிவாக இருக்கிறது. ެக்ஷிஷறூ க்ஷ்க்ணுசிகு பயணமும் தொடர்கிறது.

அ.இ.அ.தி.மு.க வை ஏன் ஆதரிக்க முடியாது?

வெளிச்சத்தில் சமுதாயம் ஒருமுகமாக பயணிக்க, இருட்டை சிலபேர் நேசிக்கத் தொடங்கியுள்ளனர்.

``அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்கள் அரசியலுக்கு வரமாட்டோம் என்றவர்கள், அரசியலுக்காக முஸ்லிம் பெயரையும் துறந்து அமைப்பு தொடங்கி இன்று அ.இ.அ.தி.மு.க வோடு தோழமை கொண்டுள்ளனர்.��

செல்வி ஜெயலலிதாவை ஏன் ஆதரிக்கக்கூடாது என்பதற்கு னீக்சி விளக்கம் தந்தவர்களே அவர்கள்தான்!

ஆம்!

``முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வந்தது எப்படி?��

என்ற தலைப்பில் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் எழுதிய நூல் வெளிவந்துள்ளது.

அதில் 16ம் பக்ககத்தில் `இவர்தான் ஜெயலலிதா என்ற தலைப்பில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, `` ஓர் இறை நம்பிக்கையாளர் ஒரே பொந்திலிருந்து இரண்டு முறை கொட்டுப்பெற மாட்டார் என்பது நபிமொழி. ஜெயலலிதாவிடம் பலமுறை கொட்டுபட்டும் சிலர் நபிவழி படிப்பினை பெறவில்லை. கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாதவர் ஜெயலலிதா என்பது ஒன்றுக்கு இரண்டு முறை நிரூபணமாகியும் கூட செல்லாக்காசு ஆணையத்தை அவர் தந்ததற்காக 2006 சட்டமன்ற தேர்தலில் அவருக்கு ஆதரவு பிரச்சாரம் என்று கூறி தேர்தல் பிரச்சாரம் செய்தனர்....

ஜெயலலிதா 2001 முதல் 2006 வரை தனி பெரும்பான்மையுடன் ஆட்சி செய்தார். ஆனால் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்பதற்கு அவர் எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை என்பது மட்டுமின்றி ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட போது அதனை எதிர்த்தார்.

இவை எல்லாம் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்க ஜெயலலிதாவிற்கு கடுகளவு கூட எண்ணமில்லை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டின.

கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டவர் ஜெயலலிதா என்பதைத் தமிழக முஸ்லிம்கள் நன்றாக உணர்ந்திருந்தார்கள். இது மட்டுமின்றி குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்த நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவில் பங்கு கொண்டு தான் சங்பரிவாரின் ஓர் அங்கம் தான் என்பதை மெய்ப்படுத்தியவர் ஜெயலலிதா என்பதை தமிழக முஸ்லிம்கள் நன்றாக உணர்ந்து இருந்தார்கள்.��

இப்படி எழுதிய அவர்கள்தான் அ.இ.அ.தி.மு.க வுடன் க்சி கூட்டு சேர்ந்துள்ளனர்.

செல்வி ஜெயலலிதா வெளியிட்டுள்ள அ.இ.அ.தி.மு.க.வின் சிறப்பு தேர்தல் அறிக்கையில் சிறுபான்மை சமுதாயத்தைப்பற்றி ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை.

அவர்களோடு தோழமை கொண்டுள்ளவர்கள் அம்மையாரின் கவனத்திற்கு எடுத்துச்சென்ற போதுதான் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு பற்றி வாய் திறந்தார்.

இதற்கு உடனடியாக பதிலளித்த டாக்டர் கலைஞர், ``யாரை ஏமாற்றினாலும் ஜெயலலிதாவால் முஸ்லிம்களை ஏமாற்ற முடியாது. தேர்தல் நேரத்தில் மட்டும் முஸ்லிம்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் யார் என்பது நன்றாக தெரியும். தங்கள் ஆட்சி அமைந்தவுடன் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்று பேசிய ஜெயலலிதா இதற்கு முன்பு இரண்டுமுறை 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தாரே, அப்போது ஏன் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவில்லை?�� எனக்கேள்வி எழுப்பியுள்ளார். ``முஸ்லிம்களுக்கு ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் அரசு இட ஒதுக்கீடு கொடுத்துள்ளது. தேர்தலின் போது இதற்கு ஆதரவாக வாக்குறுதி கொடுத்தீர்களே�� என செய்தியாளர்கள் கேட்டபோது, ``நான் எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை. முஸ்லிம்கள் மட்டும் சிறுபான்மையினர் அல்ல. பெரும்பான்மை சமூகத்தினர் அனுபவிக்காத சலுகைகளை எல்லாம் முஸ்லிம்கள்அனுபவிக்கின்றனர். எனவே இட ஒதுக்கீடு அளிப்பது இயலாத ஒன்று�� என ஜெயலலிதா அறிவித்ததையும் கலைஞர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆட்சியில் மட்டுமல்ல, அ.இ.அ.தி.மு.க வின் பொதுக்குழுவிலும் முஸ்லிம்களின் மனம் புண்படும்படியான தீர்மானங்களை நிறைவேற்றி ரசித்தவர் செல்வி ஜெயலலிதா. குறிப்பாக பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும், அயோத்தியில் ராமர் கோவில் அமைத்தே தீர வேண்டும் என ஜெயலலிதா கொண்டுவந்து அ.இ.அ.தி.மு.க பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்கள் அன்றைய நாளிதழ்களில் தலைப்புச்செய்தியாக வந்துள்ளன.

எனவே ஆட்சியையும், கட்சியையும் ஒரு சமூகத்திற்கு எதிராக நடத்தியவரை முஸ்லிம் ழிக்ஷ்ஷிட்புன் ணிஞ்ர் நிள்ஸ்ன்? தி.மு.க வை ஏன் ஆதரிக்கிறோம்!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்மூடித்தனமாக தி.மு.க வை ஆதரிக்கிறது என்ற விமர்சனம் சிலர் செய்கிறார்கள். அப்படி விமர்சனம் செய்கின்றவர்களுக்கு சில விஷயங்களைச் சொன்னால் அவர்களும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பார்கள். சிறுபான்மை சமுதாயத்திற்கு உதவுவதை, உற்ற துணையாக இருப்பதை தி.மு.க ஒரு கடமையாகவே கொண்டுள்ளது. அதற்கான காரணத்தை டாக்டர் கலைஞரே சொல்கிறார்.

``இஸ்லாமிய சமுதாயத்தினரோடு, நமது திராவிட இயக்கமும் நானும் கொண்டுள்ள தொய்வில்லாத தொடர்பும், உறவும் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. 70 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி செல்லும் மாணவனாக இருந்த போதே திருவாரூரில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டிலேயே - நான் கொடி பிடிக்கும் சிறுவனாக - அந்த மாநாட்டிலே கலந்து கொண்டேன் என்பதை நான் பெருமையோடு நினைவு கூறுகிறேன்.

மாணவப் பருவத்திலே என்னுள் முகிழ்த்த அந்த உறவும், உணர்வும் இன்றைக்குச் செழித்துப் பசுமையாகப் பரவியிருக்கின்றன. எனவே நான், இளமைப்பருவத்திலேயே இஸ்லாமிய சமுதாயத்தினரின் எண்ணற்ற நிகழ்ச்சிகளில், கூட்டங்களில், மாநாடுகளில் கலந்து கொண்டிருக்கிறேன். நான் ஆட்சிப்பொறுப்பை ஏற்றபோதெல்லாம் அந்த சமுதாயத்தினருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைத் தவறாது ஆற்றி வந்திருக்கிறேன்.��

``சிறுபான்மையினர் என்பதால் இஸ்லாமியர்களிடம் நாம் கொண்டிருக்கும் அக்கறையின் காரணமாக, அவர்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்திருந்தாலும், இப்போதும் நான் சொல்லுகின்றேன் - எல்லாவற்றையும் நாம் செய்து முடித்துவிடவில்லை; அவர்களது மேம்பாட்டுக்கு நாம் ஆற்றிட வேண்டியது இன்னும் நிறைய இருக்கின்றது. -

யாரும் எதுவும் கேட்காத நேரத்தில், கோரிக்கை எதுவும் வைக்காத சமயத்தில் ``முரசொலி�� நாளிதழில் 28.10.2009 அன்று உடன் பிறப்புக்களுக்கு லியூளி எழுதிய கடிதத்தின் உணர்ச்சிமயமான வார்த்தைகள் இவை��

இந்த உள்ளத்து உணர்வின் வெளிப்பாடுதான் முஸ்லிம் சமுதாயத்திற்கு கலைஞரால் அடுக்கடுக்காக தரப்பட்ட நன்மைகள். அவைகளை பட்டியலிடுவதற்கு இந்த நூல் போதாது. இருந்தாலும் சிலவற்றை சொல்லிக்காட்டியே ஆக வேண்டும்.

காரணம் மாறுபட்ட கருத்துடையவர்கள் இருந்தால் கூட நன்றி உணர்வோடு சிந்திக்கட்டும் என்பதற்காக.

தி.மு.க ஆட்சியில் முஸ்லிம்கள் பெற்ற நன்மைகள்

1. முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு

கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி 15.9.2007 ல், அறிவிப்பு. இதன் காரணமாக அரசு பணியில் 1774 அலுவலர்கள்/பணியாளர்கள் பயன்பெற்றுள்ளனர். தொழில் நுட்ப கல்வியில் 16518 மாணவ/மாணவியர்களும் மற்றும் மருத்துவக் கல்வியில் 306 மாணவ/மாணவியர்களும் ஆக மொத்தம்18598 அரசு பணியாளர்கள் மற்றும் மாணவ/மாணவியர்கள் பயன்பெற்றுள்ளனர்.

2. இட ஒதுக்கீட்டின் பலன் முஸ்லிம்களை முழுமையாகச் சென்றடைய உயர்மட்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை முதன்மைச்செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வாணைய குழுத்தலைவர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர், சிறுபான்மையினர் நல ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைத்து முதல்வர் கலைஞர் 29.01.2011 அன்று உத்தரவிட்டார்.

3. கல்வி உதவி
தொழிற்கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ மாணவியருக்கு ரூ 1867.07லட்சம் செலவில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ரூ 729.86 லட்சம் செலவில் 2820 இஸ்லாமிய மாணவ/மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். இது மொத்த செலவினத்தில் 39 விழுக்காடு ஆகும்.

பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை

11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் 67683 சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு 2007-2008ஆம் ஆண்டு முதல் 2010-11 ஆம் ஆண்டு வரை ரூ.2315.90 லட்சம் செலவில் 34637 இஸ்லாமிய மாணவ/மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். இது மொத்த செலவினத்தில் 46 விழுக்காடு ஆகும்.

பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை

1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ/மாணவியருக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 350042 மாணவ/மாணவியருக்கு 4098.24 லட்சம் செலவில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ2104.20 லட்சம் செலவில் 178659 இஸ்லாமிய மாணவ/மாணவியர் பயனடைந்துள்ளனர். இது மொத்தத்தில் 51 விழுக்காடு ஆகும்

. 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ/மாணவியருக்கு சேர்க்கைக்கட்டணமாக ஆண்டுக்கு ரூ 500/-ம், கற்பிப்புக்கட்டணமாக ரூ 3500/-ம் விடுதிகளில் தங்கி படிப்போருக்கு மாதம் ரூ600/-ம் வழங்கப்படுகிறது.

11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு, பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 2007-08 ல் ரூ 94/- லட்சமும், தொடர்ச்சியான ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ 247/-லட்சமும் உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் திட்டம் தொழில் மட்டும் தொழில் நுட்பம், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் சிறுபான்மையின மாணவ/மாணவிகளுக்கு ரூ435.48/-லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

4. முஸ்லிம் மாணவியருக்கான விடுதிகள்

திண்டுக்கல் , வேலூர், கோவை, திருச்சி மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கென விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.

5. திறன் வளர்ப்பு பயிற்சி

சிறுபான்மையின மக்கள் தகவல் தொழில்நுட்பம், ஆயத்த ஆடை, காலணிகள் உள்ளிட்ட சுய தொழில்களைக் கற்பதற்கு நடப்பு ஆண்டில் ரூ 2.50/- கோடி செலவிடப்பட்டுள்ளது.

6. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம்

சிறுபான்மையினரின் பொருளாதார மேம்பாட்டிற்கு, தமிழ்நாடு சிறுபான் மையிர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் 1999-ல் துவங்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

அ. தனி நபர் கடன் திட்டம்
சிறுபான்மையினர் தொழில் தொடங்கிட ரூ 1 லட்சம் வரை கடன். கடந்த 4 ஆண்டுகளில் 7331 பயனாளிகளுக்கு ரூ 3107.13 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 4836 முஸ்லிம்கள்- கடன் தொகை ரூ 2143.97
ஆ. சிறுகடன் திட்டம்
சிறுபான்மையின மாணவ/மாணவியருக்கு தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ படிப்பு பயில வருடம் ரூ.50,000 வரை கடன் வழங்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ 40.10 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம்களுக்கு ரூ 14.53 லட்சம். இ. 60 விழுக்காடுகளுக்குக் குறையாமல் சிறுபான்மையினர் உறுப்பினர்களாக இருக்கக்கூடிய சுய உதவிக்குழுவில் உள்ளவர்களுக்கு ரூ.25,000 கடன்

ஈ. ஆட்டோ ஓட்டுநர் தொழிற்கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள சிறுபான்மையினருக்கு சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ.1,21,000 வரை கடன்

உ. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு இரு கலப்பின பசுக்கள் வாங்குவதற்கு ரூ.50,000 வரையிலும், இரு உயர் ரக முர்ரா எருமைகள் வாங்க ரூ.70,000 வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.

7. முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்

ஆதரவற்ற, கணவனால் கை விடப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் 23.4.2007 முதல் துவக்கப்பட்டுள்ளது.

இச்சங்கங்கள் திரட்டும் நிதி ஆதராத்திற்கு இணையாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.10 லட்சம் ஷபூ அரசு மானியம் வழங்கி வருகிறது.

8. உலமாக்கள் பணியாளர் நல வாரியம்

உலமாக்கள் மற்றும் பணியாளர் சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலைகளில் உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கு நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

18 வயது முதல் 60 வயது வரை ஆலிம்கள், இமாம்கள், அரபி ஆசிரியர்கள், முஅத்தின் மற்றும் இதர பணியாளர்கள் உறுப்பினர்களாக இருந்து பயனடையலாம்.

முதியோர் ஓய்வூதியம், இறுதிச்சடங்கு உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித் தொகை, முடக்க ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு விஷங்களுக்கு இந்த நலவாரியத்திலிருந்து உதவி பெறலாம்.

கடுமையான வலியில் முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சை செய்து, 38 நாள் ஓய்வுக்குப் பிறகு 2009 மார்ச் 14-ல் தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் கலைஞர் கையெழுத்திட்ட முதல் கோப்பே உலமாக்கள் பணியாளர் நலவாரியம் பற்றியதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

9. தமிழ்நாடு வக்ஃப் வாரியம்
தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தவும், நிர்வாக செலவினங்களுக்கும், தணிக்கை கட்டணமாகவும் நடப்பு ஆண்டில் ரூ 77,51,000 அரசு மானியம் வழங்கியுள்ளது.

பள்ளிவாசல்கள், தர்காக்கள், மற்றும் வக்ஃப் நிறுவனங்களின் மராமத்து பணிகளுக்காக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2 கோடியே 82 லட்சம் அரசு மானியம் வழங்கியுள்ளது. இதனால் 207 வக்ஃப் நிறுவனங்கள் பயனடைந்தன.

10. கபரஸ்தான் பாதுகாப்பு:
தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் அடக்க ஸ்தலங்கள் வக்ஃப் செய்யப்பட்ட கபரஸ்தான்கள் ஆண்டு தோறும் 20 தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் சுற்றுச்சுவர் மற்றும் முள்கம்பி வேலி அமைப்பதற்கு தலா 5 லட்சம் ரூபாய் அரசு மானியம் வழங்கி வருகிறது.

11. உலமா ஓய்வூதியத்திட்டம்
ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கையை 2200 லிருந்து 2400 ஆக அரசு உயர்த்தியுள்ளது. ஆரம்பத்தில் ரூ 250/- ஆக இருந்த ஓய்வூதியம் இன்று ரூ 750/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்த ஓய்வூதியத்திற்கு அரசு ரூ 2.16 கோடி வழங்கியுள்ளது. உலமாக்களுக்கு இலவச மிதிவண்ட 3 கோடியில் வழங்கப்படுகிறது.

12. மணவிலக்கு பெற்ற பெண்களுக்கு வாழ்க்கைச் செலவு
மணவிலக்கு பெற்ற முஸ்லிம் பெண்களுக்கு வாழ்க்கைச்செலவுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

13. வக்ஃப் சொத்துக்கள் மீட்பு
சென்னை பட்டினப்பாக்கம் சேக்மதார் அவுலியா தர்கா முதற்கொண்டு திருவள்ளூர், தஞ்சை, கோவை, பெரம்பலூர், தர்மபுரி, கடலூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள வக்ஃப் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

14. மறுவாழ்வு திட்டம்
இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட ஊசிட்க்வூதுறூஙுஸ்ன், சிறு குற்றங்களுக்காக சிறை சென்றவர்களுக்கும் சமுதாயத்தில் கண்ணியமான வாழ்க்கை நடத்த உதவும் வகையில் மறுவாழ்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலா ரூ.10,000 இதற்கு நிதி உதவி வழங்கப்படும்.

இதை தவிர
15. சிறுபான்மையினர் நல ஆணையம்
தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் நல ஆணையம், அதற்கு சட்டப்பூர்வமான அந்தஸ்து.

16. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நல ஆணையம்

17. சிறுபான்மையினர் நலனுக்கென தனி இயக்குநரகம்

18. சென்னை பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வு மையம்

19. உர்தூ அகாடமி

20. சமச்சீர் கல்வியில் உர்தூ, அரபி உள்ளிட்ட சிறுபான்மையின மொழிகளுக்கு உரிய அந்தஸ்து.

21. கட்டாயத்திருமண பதிவு சட்டத்தில் முஸ்லிம்லிடீக் கோரிக்கை ஏற்பு, பள்ளிவாசல் தஃப்தருக்கு பாதுகாப்பு.

22. அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு உரிய இடம்

23. நபிகள் நாயகம் பிறந்த நாளுக்கு அரசுவிடுமுறை, 1969-ல் கொண்டுவந்த நடைமுறையை 2001-ல் அ.தி.மு.க அரசு ரத்து செய்த போது 15.11.2006-ல் மீண்டும் விடுமுறை என அறிவிப்பு.

24. கட்டாய மதமாற்க்ஷித் தடைச்சட்டம் ரத்து

25. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களுக்கும், வழிபாட்டுத்தலங்களுக்கும் தேவையான பாதுகாப்பு 26. தமிழகத்தில் இயங்கிவரும் சிறுபான்மை மற்றும் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் 11,307 ஆசிரியர்கள், 648 பணியாளர்கள் ஆக 11,955 பணியிடங்களுக்கு அரசு ஊதியம் வழங்கும் என அறிவித்து 26.2.2011 அன்று அரசு ஆணை. இதற்காக ஆண்டு தோறும் ரூ.331 கோடி அரசு ஒதுக்குகிறது என்ற அறிவிப்பு.

1991-92 க்குப்பிறகு சுயநிதியில் இயங்கும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளிகளுக்கு மட்டுமின்றி 1999 - க்குப்பிறகும் தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கும் அரசு நிதி அளிப்பது பற்றி அடுத்த கல்வி ஆண்டில் பரிசீலிக்கப்படும் என தேன் சொட்டும் அறிவிப்பு. அடடா! யாருடைய ஆட்சியில் இப்படிப்பட்ட சாதனைகளை எண்ணிப்பார்க்க முடியும்!!

இந்த சாதனைப் பட்டியல் முற்றுப்பெற்று விடவில்லை. இப்போது நடைபெறவுள்ள தேர்தலுக்காக தி.மு.க வெளியிட்டுள்ள அறிக்கையில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்துவது பற்றி நிச்சயம் பரிசீலிக்கப்படும் என அறிவித்ததோடு மட்டுமின்றி 26.3.2011 அன்று பத்திரிக்கைகளில் வெளியிட்ட அறிக்கையில் உறுதி மொழி அளித்துள்ளார் கலைஞர்.

இப்போது சொல்லுங்கள்! முஸ்லிம்கள் கலைஞரை ஆதரிக்காமல் வேறு யாரை ஆதரிப்பது!!

கலைஞர் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு மட்டும்தானா நன்மைகள்?

ஏழைகளுக்கு
* மாதந்தோறும் 35 கிலோ இலவச அரிசி

* வீடு தோறும் இலவச கிரைண்டர் அல்லது மிக்சி

* கல்லூரி மாணவ மாணவியருக்கு முதலாம் ஆண்டிலேயே மடிக்கணினி

* கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு ரூ.1 லட்சம் மானியம்

* திருமண நிதி உதவி ரூ.30,000

* கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி ரூ.10,000

* முதியோர் உதவித்தொகை மாதம் ரூ. 750

* பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக 3 சீருடைகள்

* இலவச மின்சாரம், தோட்டக்கலை பயிர்களுக்கும்.

* 58 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பஸ்பாஸ்

* உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் அனைவருக்கும்

* முதல் பட்டதாரிகளுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை

  • நடுத்தர வருவாய் பிரிவினருக்கு நகரங்களில் குறைந்த வாடகையில் குடியிருப்பு

* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ 2 லட்சம் மானியத்துடன்

ரூ 4 லட்சம் கடனுதவி

* விடுபட்ட பயனாளிகள் அனைவருக்கும் இலவச எரிவாயு இணைப்புடன் அடுப்பு

* அடையாள அட்டை பெற்ற அனைவருக்கும் வண்ண தொலைக்காட்சி பெட்டிகள்

அப்பப்பா...! எத்தனை எத்தனை திட்டங்கள்!

சொன்னதைச் செய்வோம்! சொல்லாததையும் செய்வோம்! என நிரூபித்துக் காட்டிய தி.மு. கழகக் கூட்டணியை ஆதரிக்காமல் மக்கள் வேறு யாரை ஆதரிப்பார்கள்!

மக்களே வேட்பாளர்களாக மாறி தி.மு.க கூட்டணிக்கு வாக்கு சேர்க்கும் அதிசயம் தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நல்லாட்சி தொடர - நல்லிணக்க நாயகர் கலைஞர் 6வது முறையாக அரியணை ஏற அயராது உழைப்போம் !

தி.மு.க காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், முவேந்தர் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றி தேடித் தருவோம்.!
தகவல் ; அதிரை M. அல்மாஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.