தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகே நேற்று முன்தினம் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது, தே.மு.தி.க., வேட்பாளர் பெயரை மாற்றிச் சொன்னதாகவும், அதை திருத்திச் சொல்ல வேட்பாளர் பெயரை கூறிய போது, அவரை விஜயகாந்த் அடித்து விட்டதாகவும் சில, "டிவி'க்களில் தொடர்ந்து ஒளிபரப்பானது.
எங்கள் தலைவர் விஜயகாந்த் என்னை அடித்து விட்டதாக தொடர்ந்து சில "டிவி'க்களில் பொய்யான சித்தரிப்புகளுடன் செய்தி ஒளிபரப்பி வருகின்றனர். பிரசார இடத்தில் என்னை அடிக்க வேண்டிய அவசியமும், நிர்பந்தமும் இல்லை. தோல்வி பயத்தில் இது போன்று மக்களிடம் தவறான பிரசாரங்களை தி.மு.க., கூட்டணியினர் செய்து வருகின்றனர் என்று தர்மபுரி தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் பாஸ்கர் செய்தியாளரிடம் கூறினார்...
மேலும் அவர், பிரசாரத்தில் விஜயகாந்த் பேசிய போது, மைக்கில் இருந்த ஒயர் கீழே விழுந்து விட்டது. அதை எடுத்து சரி செய்து பேசிக் கொண்டிருக்கும் போது, இரண்டாவது முறையாக மைக் ஒயர் கழன்று விழுந்து விட்டது. பேச்சை நிறுத்திய விஜயகாந்த், மைக் ஒயரை டேப் போட்டு சுற்றினால் என்ன என கூறி, டேப்பை சுற்றுவதற்காக கீழே குனிந்து மைக்கை தட்டினார். இது தான் நடந்தது என்றார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:விஜயகாந்த் பிரசாரத்தில் பா.ம.க.,வினரின் உண்மை நிலைகளை மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருவதை பொறுக்க முடியாமல், இது போன்று ஒளிபரப்பில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற பொய் செய்திகளை புனைந்தும், சித்தரித்தும் வெளியிடுவதற்கு இவர்களுக்கு சொல்லித் தர வேண்டியது இல்லை. ஏற்கனவே கருணாநிதி கைது செய்யப்பட்ட போது, சித்தரித்ததை போல் தற்போது, எங்கள் தலைவர் விஜயகாந்த் அடித்து விட்டது போல் சித்தரித்து வருகின்றனர். இவ்வாறு பாஸ்கர் கூறினார்.
நன்றி : இந்நேரம்.காம்
தகவல் : அதிரை M. அலமாஸ்
No comments:
Post a Comment