Latest News

மூன்று தொகுதிகளைப் பெற்றது ஏன்?

20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக முஸ்லிம் அரங்கில் எழுச்சி!மனிதநேய மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் சொந்த சின்னத்தில் போட்டியிட மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாராட்டுகள், வாழ்த்துகள் வரும் வேளையில் ஒரு சிலர் விமர்சனங்களையும் முன் வைக்கின்றனர். பலர் எங்களிடம் அலைபேசியிலும், மின்னஞ்சலிலும் கேட்ட கேள்விகளைத் தொகுத்து, அதற்கான விளக்கங்களை அளிக்கின்றோம்.
கேள்வி: மாற்று அரசியலுக்கான முன்முயற்சி என்ற பெயரில் மனிதநேய மக்கள் கட்சியை உருவாக்குகிறீர்கள். கூடுதல் தொகுதிகளை பெறுவீர்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் மூன்று தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளீர்கள். ஏன்?

பதில்: சமுதாயத்தின் அரசியல் தலை நிமிர்வுக்காகத்தான் நாங்கள் போராடி வருகிறோம். அதில் நாங்கள் சமரசம் செய்துகொள்வதில்லை. இப்போது 3 தொகுதிகள் குறித்து ஒரு சிலர் விமர்சிக்கிறார்கள். அதேசமயம் 90 சதவீதம் பேர் பாராட்டுகிறார்கள் என்பதையும் இங்கே பதிவு செய்கிறோம். எனினும் விமர்சிப்பவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் என்று சிறு கூட்டமாக இருந்தாலும் அவர்களுக்கும் விளக்கமளிப்பது எமக்கு கடமையாகிறது....

ஏதோ கொடுத்ததை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்கள்என்பதுபோல அந்த சிலர் விமர்சிக்கிறார்கள். தொகுதிகளின் எண்ணிக்கைகள் குறித்து அதிமுக குழுவுடன் மமக குழு 5 முறை பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. ஜெயலலிதாவிடம் 15 தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்துவிட்டு, அதில் 12 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் 12&ல் இருந்து ஏழு தொகுதிகள் என்ற நிலைக்கு வந்தோம். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் 5 தொகுதிகள் என்ற நிலையில் இதற்கு மேல் எங்களால் இறங்கி வரமுடியாது என கூறிவிட்டோம். பிப்ரவரி 18&ம் தேதி அதிமுக குழுவிடம் எங்களின் நிலைபாட்டை உறுதிபட தெரிவித்துவிட்டோம். அதனாலேயே ஒப்பந்தம் போடுவது ஒத்திப்போய்க் கொண்டிருந்தது. அதிமுக குழு பல்வேறு காரணங்களை எடுத்துக் கூறி மூன்று தொகுதிகள் தான் என்ற எண்ணிக்கையை ஏற்கக் கூறி வேண்டிக் கொண்டிருந்தது. ஒ.பன்னீர்செல்வம் தொடர்ந்து தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தார்.

நாம் கடைசியாக 4 தொகுதிகளும், புதுச்சேரி மாநிலத்தில் 1 தொகுதியும் ஒதுக்க வேண்டும் என்று உறுதி காட்டினோம். இதனிடையே மமக மல்லுக்கட்டுவது குறித்து நக்கீரன் உள்ளிட்ட ஏடுகள் செய்தி வெளியிட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே ஜமாஅத்துகள், உலமாக்கள், சமுதாய ஆர்வலர்கள், சமுதாய அறிவுஜீவிகள் என பலதரப்பும் நமக்கு அன்பான வேண்டுகோளை விடுத்தனர். போனமுறை திமுகவிடம் மல்லுகட்டியது போல் வேண்டாம். இம்முறை நமது பிரதிநிதிகள் சட்டமன்றத்துக்குள் நுழைய வேண்டும் என்ற அளவில் சிந்தியுங்கள். கூடுதல் தொகுதிகளை அடுத்தடுத்த தேர்தல்களில் வற்புறுத்துங்கள் என கருத்து தெரிவித்தனர்.

இதே கருத்தை பிப்ரவரி 19 அன்று பல மாவட்ட நிர்வாகிகளும், வெளிநாடுகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் நம்மிடம் வலியுறுத்தினர். சமுதாயத்திற்காகத்தான், நாம் கட்சி ஆரம்பித்தோம். சமுதாயத்தின் கூடுதல் பிரதிநிதித்துவத்திற்காகத்தான் போராடுகிறோம். எந்த சமுதாயத்திற்காகப் போராடுகிறோமோ அந்த சமுதாயத்தின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் ஏற்றுக்கொள்வது கட்டாயமாகிறது.

அந்த அடிப்படையில் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைகளுடன் அதிமுக தர முன் வந்த மூன்று தொகுதிகளை இப்போதைய சூழ்நிலையில் ஏற்றுக்கொள்வது என்றும், மூன்று தொகுதிகளில் வெற்றி வாகை சூடிய பிறகு கூடுதல் தொகுதிகள் என்ற லட்சியத்தை அடுத்தடுத்த தேர்தல்களில் முன்வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கேள்வி: நீங்கள் அதிமுக குழுவுடன் பெரும் போராட்டம் நடத்தியது, விவரம் அறிந்தவர்களுக்கு தெரியும். உங்களை விமர்சிப்பவர்கள் அதை ஏற்க மாட்டார்களே..?

பதில்: நாங்கள் கூடுதல் தொகுதிகளுக்காகப் போராடியது வேறு யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ, இறைவனுக்குத் தெரியும். கடைசியாக நான்கு தொகுதிகளையாவது பெற்றுவிட வேண்டும் என்று உறுதிகாட்டினோம். ஆனால் இறைவன் நாடவில்லை. சமுதாயத்தின் தலை நிமிர்வுக்காக நாங்கள் போராடியதற்கான கூலி இறைவனிடத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளோம். எங்களை விமர்சிப்பவர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

கேள்வி: அதிக தொகுதிகள் எதிர்பார்த்து கிடைக்காத நிலையில் மூன்று தொகுதிகளை பெற்றுள்ளீர்கள். அதை ஈடுகட்டும் வகையில் சமுதாயத்தின் நலன் காக்கும் வேறு கோரிக்கைகளை வைத்திருக்கீறீர்களா?

பதில்: செல்வி ஜெயலலிதாவை சந்தித்தபோது பொதுக்குழுவின் தீர்மானப்படி இடஒதுக்கீடு குறித்தும் விரிவாகப் பேசியுள்ளோம். கல்வி முறையில் உருது, அரபி உட்பட சிறுபான்மை மொழிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாராபட்ச போக்கு குறித்தும், திருமண
தகவல்
அதிரை M. அல்மாஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.