Latest News

முஸ்லிம்லீக் அகாலமரணம்!. அறிவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது!!. (இன்னாலில்லாஹி.....)


மேலும் திமுகவின் சிறுபான்மை பிரிவான முஸ்லிம் லீக்கிற்கு வழக்கம் போல் குடும்ப கட்டுப் பாட்டு கோட்பாட்டின் தாரக மந்திரமான இரண்டுக்கு மேல் வேண்டாம்(!) என்ற அடிப்படையில் இரண்டு தொகுதிகள் வழங்கப்படலாம். அதுவும் திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டால் ( போட்டியிட்டாலா?. பரம்பரை பழக்கத்தை மாற்ற முடியுங்களா?.) மூன்று கிடைக்கலாம். ஆக மொத்தம் இஸ்லாமிய இயக்கங்களுக்கு மொத்தமாக இந்த தேர்தலில் ஆறு தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பே உள்ளது. தவிர ஒன்றோ அல்லது இரண்டோ வேறுபடலாம்.//

மேற்கண்ட செய்தியினை நம் இணையத்தினை வாசிக்கும் சகோதரர்கள் அவ்வளவு சீக்கிரமாக மறந்திருக்க மாட்டார்கள்!. இனி என்ன செய்யப் போகிறாய்?.... என்ற நம் கட்டுரையில் தொகுதி உடன்பாடு எட்டப்படுவதற்க்கு முன்பே வந்த வாசகம்தான் இது!!. ஒன்றோ அல்லது இரண்டோ வேறுபடலாம் என்று நாம் அந்தப்பாராவை முடித்திருந்தோம்!. தற்போது அது உண்மையிலேயே வேறுபட்டுவிட்டது!. ஆம்!. அரசியல் சாணக்கியர் என்று சொல்லப்படுபவரால், “கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டிஎன்று, பிச்சையாக போடப்பட்ட மூன்றில் ஓரு தொகுதியை முஸ்லிம்லீக்கிடமிருந்து பிடுங்கப்பட்டு, அதை காங்கிரசிடம் திமுக அள்ளிக்கொடுத்துள்ளது!. கொடுப்பதில் காட்டாத தாராளத்தை, பிடுங்குவதில் திமுக காட்டியுள்ளது!. காங்கிரஸ்,திமுக இடையே நடந்த அரசியல் உள் விளையாட்டில் பலிகடா ஆக்கப்பட்டதோ முஸ்லிம்கள்!. ... 

தன்மானத்தை இழந்து, சுயசின்னத்தில் கூட போட்டியிட முடியாமல், அரசியல் அரங்கில் அனாதையாக இருக்கும் முஸ்லிம்லீகிற்கு இதுவும் வேண்டும்!. இதற்கு மேலும் வேண்டும்!. இதற்கு மேல் வேறு என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்பதும் எனக்கு தெரியும்!. ஏன் கொடுத்த மூன்று தொகுதியையும் திரும்ப தர வேண்டும் என்று கேட்டால் (பிடுங்கினால்) கூட, சரணம் சரணம் கச்சாமி....! சாமிசரணம் கச்சாமி.....! என்று அதை தாராளமாக வாரி கொடுப்பதற்கு கொடைவள்ளல் காதிர்முகைதீன் தயாராக இருந்திருப்பார்!. அதையே திமுகவும் செய்திருக்கலாம்!. தாழ்த்தப்பட்டோரை விட முஸ்லிம்களின் நிலை பரிதாபமாக உள்ளது என்ற நீதிபதி சச்சார் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் அரசியல் அரங்கில் காட்சிகள் நிறைவேறிக் கொண்டிருகின்றது!. பொறுத்திருந்து பாருங்கள்!. காதர்முகைதீனிடம் இருந்து கூடிய சீக்கிரமே, சட்டமன்ற மேலவையில் இடம் தருவதாக எங்களுக்கு திமுக வாக்களித்துள்ளது என்று ஓரு டயலாக் வரும்!.

பாருங்கள் சகோதரர்களே!. முப்பத்தி ஒன்று தொகுதியைப்பெற்ற பாமக விடம் ஒன்றை பிடுங்கியதை கூட நியாயப்படுத்திவிடலாம்!. ஆனால் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய சமூகமான முஸ்லிம்களுக்கு திமுக சார்பில் தரப்பட்ட மூன்றே மூன்று தொகுதியைக்கூட விட்டுவைக்காமல், திரும்ப முஸ்லிம்லீக்கிடம் இருந்து பிடுங்கியது எந்தவிதத்தில் நியாயம்?. முஸ்லிம்கள் மேலும் மேலும் வஞ்சிக்கப்படுவது எந்தவிதத்தில் நியாயம்?. முஸ்லிம்லீக்கிடம் திரும்ப பெற்றதைப் போல், கடந்த தேர்தலில் பெற்ற ஒன்பது தொகுதியைவிட, ஓரு தொகுதியை அதிகம் பெற்ற விடுதலைசிறுத்தைகள் கட்சியிடமோ, முதன்முதலாக கூட்டணியில் சேர்ந்ததுமே, ஏழு இடங்களை பெற்ற கொங்கு முன்னேற்ற கழகத்திடம் இருந்தோ இவ்வாறு பெறமுடியுமா?. முடியவே முடியாது!. அவர்களிடம் திரும்ப பெற்றால், இந்நேரம் அவர்கள் கூட்டணியை விட்டு வெளியேறி மாற்று அணியில் சேர்ந்திருப்பார்கள். அந்த சமூகம் தங்களின் எதிர்ப்பை காட்டி திமுக விற்கு தேர்தலில் தக்கபாடம் புகட்டி இருப்பார்கள்.

ஆனால் தன்மானம் இழந்த முஸ்லிம்லீக்கிடம் இருந்து மட்டுமே, இதுபோல் திரும்ப பெறமுடியும்!. இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா" என்று திமுகவிலே கேவலமாக பேசப்படுபவரும், இதற்கு துணை போகியுள்ளவருமான காதர்முகைதீனிடம் இருந்து, முஸ்லிம்லீக் கட்சியின் தலைவர் பதவியை பிடுங்கவேண்டும். இவர் உடனே தூக்கி எறியப்பட வேண்டும்!. சட்டமன்ற இருக்கையில் இடம் பெறாமல், கருணாநிதியின் இதயத்தில் இடம் பெரும் இவரைப் போன்றவர்கள் இருக்கும்வரையும், இதுபோன்று சமுதாய நலனை குப்புறதள்ளிய சுயநலவாதிகள் இருக்கும்வரையும், முஸ்லிம்கள் ஒருக்காலும் அரசியல் அரங்கில், தங்களின் பங்களிப்பை பெறமுடியாது!. தற்போது பிறைக்கொடி அம்மனமாக திரிகின்றது!. இந்த துரோகத்திற்கு தானா முஸ்லிம்லீக் கட்சியினர் லட்சக்கணக்கில் செலவு செய்து விழா எடுத்து கருணாநிதிக்கு விருது கொடுத்தனர்?.

முஸ்லிம்லீக்கின் கடைசி அத்தியாயத்தினை காதர்முகைதீன் அவர்கள் எழுதிவிட்டார். முஸ்லிம்லீக்கை புதைகுழியில் இவர் தள்ளிவிட்டார். இனி முஸ்லிம்லீக் என்ற பெயரை உச்சரிக்கவே இவர் தகுதியற்றவர். தற்போது இவர்கள் பெற்று இருக்கும் இரண்டு தொகுதிகளில் கூட, நிச்சயம் மமக வை எதிர்த்து நிறுத்தப்படுவார்கள். அதற்கும் முஸ்லிம்லீக் துணைபோய், மேலும் இரண்டு முஸ்லிம்கள் சட்டமன்றத்திற்கு செல்வதையும் தடுத்துவிடுவார்கள். இனி அடுத்த சட்டமன்ற தேர்தலில், முஸ்லிம்லீக் என்ற கட்சியே தமிழ்நாட்டில் இருக்காது என்றே நமக்கு தோன்றுகின்றது. எந்த கோரிக்கையாவது நிறைவேற்றக்கோரி முஸ்லிம்லீக் கட்சி களத்தில் இறங்கி போராட்டம் நடத்தியதுண்டா?. எனவே முஸ்லிம்லீக் உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் அடிப்படை உறுப்பினர் பதவியை உடனே ராஜினாமா செய்துவிட்டு, மாற்று கட்சியான மமக வில் சேர்ந்துவிடுங்கள்.

குறைந்தபட்சம் அந்த கட்சியாவது தங்களின் பங்களிப்பை இனி அரசியலில் ஆற்றட்டும்!. அல்லது முஸ்லிம்களின் அரசியல் வெற்றிடத்தை ததஜ களத்தில் இறங்கி நிரப்பட்டும்!. அல்லது பாப்புலர் பிரன்டின் சோசியல் டெமாக்ரடிக் பார்டி அதை நிரப்பட்டும்!. ஏனெனில் எங்களுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் வேண்டும். எங்களின் கோரிக்கையை எடுத்துக்கூற பிரதிநிதிகள் சட்டமன்றத்தின் இருக்கையில் இடம் வேண்டும்!. எவர்களின் இதயத்திலும் எங்களுக்கு இடம் வேண்டாம்!. ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் மனிதர்களின் இதயத்திற்கு அட்டாக் வந்துவிடலாம்!.

-- அதிரை முஜீப்
தகவல்
அதிரை M. அல்மாஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.