Latest News

கேவலத்தின் முகவரி மு.லீக்

அட, மானங்கெட்டவர்களா! இப்படித்தான் நம் சமுதாய கட்சியினர்களை அழைக்கத் தோன்றுகிறது. நேற்று நடந்து முடிந்த (08.03.2011) அரசியல் நாடகங்கள் மானமுள்ள தமிழக முஸ்லீம்களை வெறுப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. மமக என்றொரு கட்சி மூன்றுக்கு மேல் வேண்டாம் என்று ஒரு சாத்தானிடம்; தெரிந்தே சரணடைய, பாரம்பரியமிக்க? மு.லீக் இன்னும் கெடுவேன் என்ன பந்தயம் என தமிழக முஸ்லீம் சமுதாயத்தையே இன்று முட்டாளாக்கி விட்டது.

2ஜி புகழ் திமுகவின் மிரட்டல் நாடகங்கள் எதுவுமே பாபரி மஸ்ஜித் துரோகிகளான காங்கிரஸிடம் பலிக்காமல் போக, கேட்ட 63 தொகுதிகளை தர வேண்டிய கட்டாயத்தில் முஸ்லீம் லீக்கின் பெயரில் ஒதுக்கிய மூன்றுறுறுறுறுறுறு தொகுதியிலிருந்து ஒன்றை பறித்து காங்கிரஸிடம் தந்துள்ளார் சிறுபான்மை மக்களின் காவலரான? கருணாநிதி, இவரோடு (குவிந்திருக்கின்ற) ஒட்டியிருக்கின்ற நிதியின் எள்முனை அளவு கூட நீதியில்லாதவர் என்பதை இன்னொரு முறை நிரூபித்துள்ளார்...

நேற்றுப் பிறந்த, கோவை மாவட்டத்தை தாண்டாத ஜாதி கட்சியான கொ.மு.க விற்கு ஒதுக்கிய 7ல் ஒன்றைப் திரும்பப் பெறவோ, வி.சி.க்கு ஒதுக்கிய 10ல் ஒன்றை திரும்பப்பெறவோ திராணியில்லாத கருணாநிதி தன் தைரியத்தை (தமிழக இஸ்லாமிய இயக்கங்களால்) நாதியற்ற சமூகமாக்கப்பட்டு விட்ட இஸ்லாமியர்களிடத்தில் காட்டியுள்ளார், சொந்த சின்னத்தில் நிற்கத்துணியாமல் இரவல் சூரியன் சின்னத்தில் நிற்கும் போதே இந்த நிலைமையென்றால்... நினைக்கவே குமட்டிக் கொண்டு வருகிறது.

இந்த அவமானங்கள் எல்லாம் ஆளுக்கொரு பக்கம் திரும்பி நிற்கின்ற சமுதாய இயக்கங்களால் விளைந்தவினை என அடித்துச் சொல்லுமளவிற்கு கட்சி, இயக்கச் சண்டைகள். சமுதாயம் நலம் நாடி ஓரணியாய் வாருங்கள் என்று எத்தனை கூப்பாடுகள், வந்தீர்களா? உங்கள் அனைவரையும் சரமாரியாக வசைபாட என் மனம் நாடுகிறது இருந்தாலும் அடக்கிக் கொண்டு இன்னும் கெட்டுவிடவில்லை வாருங்கள் ஒன்று சேருவோம், நம்முடைய சகோதர சண்டையை இன்னொரு நாளில் வைத்துக் கொள்வோம் இப்போதைக்கு ஒன்றுசேர்ந்து தேர்தலை சந்திப்போம், திமுக உட்பட அனைத்து கட்சிகளையும் அடுத்த தேர்தலில் நம் சமுதாயத்தின் முன் மண்டியிட வைப்போம், இன்ஷா அல்லாஹ் நம்மால் முடியும், காதில் விழுகிறதா என் சகோதரர்களே!

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள். திருக்குர்ஆன் 12:8
முஸ்லீம்கள் பாடம் படிக்க நேற்று (08.03.2011) நடந்த இன்னொரு முக்கிய நிகழ்வு, ஏகப்பட்ட சங்கங்களாக செயல்பட்ட அத்தனை நாடார்களும் ஒன்று சேர்ந்து அவர்களின் ஜாதிக்காக ஒரு கட்சியே தொடங்கிவிட்டார்கள், இந்தத் தேர்தலில் போதிய தொகுதிகளை யாரும் ஒதுக்காவிட்டால் தனித்து போட்டியிட்டு தங்களின் பலத்தை காட்டப்போவதாகவும் அறிவித்தும் விட்டார்கள், எல்லாம் நேற்று வரை நாம் யாருமே அறியாத கொ.மு.க.விடம் படித்த பாடம்.

தானும் கெட்டு சமுதாயத்தின் மானத்தையும் ஏலம் போட்ட முஸ்லீம் லீக்கே உடனே திமுக கூட்டணியை விட்டு வெளியேறு, ம.ம.கவே அதிமுகவை விட்டு வெளியேறு, சோ.டெ.பா.இ கட்சியினர்களே நீங்களும் வாருங்கள் ஒன்றாக கைகோர்த்து தேர்தல் களத்தை சந்தியுங்கள், இன்றைய தோல்வி நாளைய வெற்றி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஓட்டையும் வாங்கிக் கொண்டு சீட்டையும் பறித்துக் கொண்ட (அதாவது உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்யும்) திமுக, பாபரி மஸ்ஜித் விவகார அயோக்கியர்களான காங்கிரஸ், நரவேட்டை காட்டுமிராண்டி கும்பலான பாஜக, கரசேவை காவி நடிகையின் அதிமுக ஆகிய அனைவரையும் சமதூரத்தில் நிறுத்துவோம், இந்த தேர்தலில் இவர்களில் யாருக்கும் முஸ்லீம்களின் ஓட்டில்லை என்ற நிலையை ஏற்படுத்துவோம்.

இஸ்லாமியர்களின் இயக்கங்களே! நமது சமுதாயத்தின் பெயரைச் சொல்லி கட்சி நடத்துவோர் ஒன்றிணைந்து வந்தால் தயவுசெய்து நீங்களும் சமுதாயத்தின் நலன்நாடி இந்த ஒருமுறை மட்டுமாவது உங்களுடைய முந்தைய தீர்மானங்களை வாபஸ் வாங்குங்கள், பிற அமைப்புக்களுடனும் மக்களுடனும் கரம் கோர்க்க முன் வாரீர். தாத்தா ஜெயித்தாலும், செல்வி? ஜெயித்தாலும் முஸ்லீம்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை மாறாக இருப்பதை தா
தகவல்
அதிரை M. அல்மாஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.