ஒரு வழியாக, இரண்டு வார காலமாக நீடித்து வந்த தி.மு.க - காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. இனி காங்கிரஸை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற நிலையில் அ.தி.மு.க கூட்டணியிலும், இன்றிரவுக்குள்ளாகவே கூட தொகுதிப் பங்கீடுகள் ஒரு முடிவுக்கு வந்துவிடும். இரு கூட்டணியிலுமே, சில்லரை கட்சிகளிடமிருந்து சிறுசிறு சலசலப்புகள் எழுந்தாலும், அவையெல்லாம் அடக்கப்பட்டுவிடும் அல்லது வேறு வழியின்றி அடங்கிப் போய்விடும்.
ஆக கிட்டத்தட்ட கால் நூற்றண்டுகளுக்குப் பிறகு, தமிழக சட்டமன்றத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் இரு பெரும் கூட்டணிகளாகப் பிரிந்து நேருக்கு நேர் மோதப் போகின்றன. பி.ஜே.பி போன்ற ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான வாக்கு வங்கிகளைக் கொண்ட கட்சிகளை இங்கு நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்த இரண்டு கூட்டணிகளிலும் உள்ள கட்சிகள் மற்றும் அதனதன் தன்மைகளைப் பற்றி முதலில் பார்த்துவிடுவோம்...
முதல் அணியில், தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க, வி.சி, கொ.மு.க, மு.லீ, மூ.மு.க என்று நறுக்குத் தெரித்தாற் போன்று ஏழு கட்சிகள், ஒவ்வொன்றும் தனித் தனியாக திருப்திப்படும் அளவிற்கான எண்ணிக்கையில் தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு, களத்திற்கு வந்துவிட்டன. இதில் மூன்று ஜாதிக் கட்சிகள் அடக்கம் என்றாலும், அவை மூன்றுமே, தங்களது வாக்கு வங்கி கணக்கை ஏற்கனவே பலமுறை களத்தில் நிரூபித்த கட்சிகளாகும். மேலும் அக்கட்சிகளின் தேர்தல் பணிக்கான தொண்டர்படையும் இக் கூட்டணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும்.
இங்கு, பா.ம.க மற்றும் விடுதலை சிறுத்தைகளும் சேர்ந்து மொத்தம் 115 தொகுதிகளில் பலம்மிக்க வாக்கு வங்கிகளை வைத்திருக்கின்றன. அதேப் போன்று, மேற்கு மாவட்டங்களில் உள்ள 55 தொகுதிகளில் கொ.மு.க விற்கு நிரூபிக்கப்பட்ட வாக்கு வங்கியும், தொண்டர் பலமும் இருக்கின்றன. மீதமுள்ள 64 தொகுதிகளுக்கு, அஞ்சா நெஞ்சன் அழகிரியின் தேர்தல் ஸ்பெஷல் வியூகங்களும்(!), கட்டுக்கோப்பான தொண்டர் படையும் இருக்கின்றன.
இக் கூட்டணியின் தேர்தல் போர் அணிவகுப்பின் காலாட்படையின் பலத்தை பார்த்து விட்டோம். அடுத்து குதிரைப் படை, மற்றும் ரத, கஜ, துராதிகளைப் பார்ப்போம். இதில் குதிரை, ரதம் மற்றும் யானைப் படை என்றால் அது தகர்க்க முடியாத இரும்புக் கோட்டை வாக்கு வங்கியான 32 + 8 = 40 சதவிகிதத்தை தன் வசம் வைத்திருக்கும் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளாகும். இந்த இரண்டு கட்சிகளுக்கும் உள்ள இந்த வாக்கு வங்கி எந்த காலகட்டத்திலும், சூழ்நிலையிலும் மாறாத தன்மை கொண்டது. நிலைமை சாதகம் என்றால் இதற்கு மேல் ஏறுமே தவிர, எந்த மோசமான சூழ்நிலையிலும் இதை விடக் குறைந்து விடாது.
தேர்தல் போருக்கு மற்ற மற்ற அத்தியாவசியத் தேவைகளாக இருப்பது முதலில் விளம்பரம் அல்லது பிரச்சாரம். இதில் இக் கூட்டணியே முன்னிலையில் இருப்பதை எதிரணியினர் கூட ஒத்துக் கொள்வர். தமிழகத்தில் கிட்டத்தட்ட, 70 சதவிகித மக்கள் தினம்தோரும் விரும்பிப் பார்க்கும் சேனல்களான, சன், கலைஞர், மக்கள், மெகா, வசந்த் சேனல்கள் மற்றும் அதன் துணை சேனல்கள் இக் கூட்டணியின் முக்கிய பிரச்சார பீரங்கியாக நேரடியாக களம் இறங்கும் என்பதில் ஐயமில்லை. அடுத்ததாக, இத்தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய சக்தியாக திகழும் என்று அகில இந்தியாவே எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம்(!)... அதாங்க வாக்காளர்களுக்கும் தொண்டர்களுக்கும் வாரியிரைக்கப் பட தயாராக இருக்கும் பணம்!
இயற்கையாகவே, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலிருக்கும் கட்சிகள் இக் கூட்டணியில் கைகோர்த்திருப்பதால், பணத்திற்கும் பஞ்சமில்லை, அதை பட்டுவாடா செய்வதை தடுக்கும் அரசு எந்திரங்களை பழுதாக்கும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் பஞ்சமிருக்காது! அடுத்ததாக, திட்டமிடப்பட்ட தேர்தல் களப்பணி வியூகம். இதில் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் தவிர்த்து, மற்ற ஐந்து கட்சிகளுமே கில்லாடிகள் தான். அதிலும் தி.மு.க மற்றும் பா.ம.க இரண்டும் ஏற்கனவே களமிறங்கி முழு வேலைகளையுமே முடித்துவிட்டு, நாளையே தேர்தல் என்றால் கூட சந்திக்க தயாராகி விட்டன! இது அரசியலை உற்று உள்நோக்கிப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே புரிந்த விஷயம். இந்தக் களப்பணி என்பது ஒரு கட்சிக்கு கூடுதலாக இரண்டிலிருந்து மூன்று சதவிகித வாக்குகளை பெற்றுத்
தகவல்
அதிரை அல்மாஸ்
No comments:
Post a Comment