விழுப்புரம், மார்ச் 10: விழுப்புரம் மாவட்டத்தில் திமுக, அதிமுகவில் அக் கட்சியைச் சேர்ந்த முஸ்லிமுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்தால் அவர்களுக்கு ஆதரவு தருவோம். இல்லையெனில் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவோம் என்று முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பேரவைத் தலைவர் எஸ்.எம். அமீர் அப்பாஸ் புதன்கிழமை தெரிவித்தார்.
÷ஜமாஅத் அலுவலகத்தில் நிருபர்களிடம் அவர் மேலும் கூறியது:
÷விழுப்புரம் மாவட்டத்தில் இந்த அமைப்பு தொடங்கி 3 ஆண்டுகளாக இஸ்லாமிய மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். மாவட்டத்திலுள்ள 530 பள்ளிவாசல்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறோம். இந்த மாவட்டம் தனியாக உருவான 22 ஆண்டுகளில் ஒருமுறை கூட எந்தக் கட்சியிலும் சிறுபான்மை சமூகத்தவரான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. நாங்கள் மனு கொடுக்கும் சமூகமாகவே வாழ்ந்து வருகிறோம்....
÷எங்களுக்கு அரசியல் அதிகாரமே கிடையாது. நல திட்ட உதவிகள், கடன்கள் பெறக்கூட முடியவில்லை. சிறுபான்மை சமுதாயம் ஆதரவற்றவர்களாகவும், போக்கற்றவர்களாகவும் உள்ளோம். இந்த மாவட்டத்தில் தொடர்ந்து ஒரே கட்சிக்கு வாக்களித்து வருகிறோம், ஆனால் முஸ்லிம்களுக்கு பதவிதர மறுக்கிறார்கள்.
÷எனவே இந்த மாவட்டத்தில் 4 தொகுதிகளை கண்டறிந்துள்ளோம். அங்கு தனித்துப் போட்டியிடுவோம். திமுகவில் முஸ்லிம் லீக்குக்கு 3 இடங்கள் கொடுத்து
மறுபடியும் ஒரு இடத்தை பிடுங்கிக்கொண்டு இந்த சமுதாயத்தை இழிவுப்படுத்தியுள்ளனர். இது என்ன நியாயம்?
இந்த மாவட்டத்தில் 25 ஆண்டுகளாக அரசியலில் போராடி வருபவருக்குக் கூட வாய்ப்பு தரவில்லை, மற்ற சமூகத்தைப்போல் எங்கள் சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் தர வேண்டும்.
÷வரும் வெள்ளிக்கிழமை 40 உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தி, இறுதி முடிவு எடுத்து, இந்த மாவட்டத்தில் எங்கள் வாக்கு வங்கியை நிரூபிப்போம், அல்லது வெற்றிவாய்ப்பை பாதிக்க வைப்போம். ÷மாவட்டத்தில் ஒரு தொகுதிக்கு சராசரியாக 15 ஆயிரம் வாக்குகள் உள்ளன. சிறுபான்மையினர் யாரை ஆதரிக்கிறார்களோ அவர்கள்தான் வெற்றிபெற முடியும் என்றார்.
÷பேட்டியின்போது செயலாளர் ஷேக்தாவூத், மாவட்ட அமைப்பாளர் முகமது ஜக்கிரியா, இயக்குநர் அப்துல்கனி, கெüரவ ஆலோசகர் சாகுல் அமீது, செய்தித் தொடர்பாளர் சகாயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
நன்றி : தினமனி
தகவல் அதிரை அல்மாஸ்
No comments:
Post a Comment