புத்தாண்டையொட்டி மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, லைசென்சு, வரிவிதிப்பு உள்ளிட்ட தொலைதொடர்பு அம்சங்களில் அடுத்த 100 நாட்களில் வெளிப்படையான நிர்வாக நடைமுறை கடைப்பிடிக்கப்படும். ஏழைமக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை தொலை தொடர்பு துறை எடுத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்கள் மூலம் ஓய்வு ஊதியம், பிறப்பு/இறப்பு சான்றிதழ், வங்கிகளில் பணம் செலுத்துவது மற்றும் ரெயில் பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் அடுத்த 100 நாட்களில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.
No comments:
Post a Comment