தொலைத் தொடர்புத் துறையின் 100 நாள் செயல் திட்டங்களை டில்லியில் வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கபில் சிபல், தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை 1999 உருவாக்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்குப் பின் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. எனவே, தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை 2011 என்ற பெயரில் புதிய கொள்கை உருவாக்கப்படும் என்று கூறினார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்குப் பெருமளவில் வருமான இழப்பை அளித்ததாகக் கூறப்படும் "முதலில் வந்தவருக்கே முதலில் சேவை" என்ற தொலைத் தொடர்புக் கொள்கை 99இல் மாற்றங்கள் எதுவும் செய்யப்படுமா என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
அரசுக்கு ஓரளவு வருவாய், உபயோகிப்பாளர்களுக்கு குறைந்த விலை மற்றும் தொலைத் தொடர்புத் துறையின் வளர்ச்சி ஆகிய மூன்று அம்சங்களையும் கருத்தில் கொண்டு புதிய கொள்கை வகுக்கப்படும் என்று கபில் சிபல் கூறினார். இந்த மூன்றிலும் ஒரு சமன்பாடு இருப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.
பாதுகாப்புக் காரணங்களால் தாமதமாகும் 3ஜி சேவையை உடனடியாகத் தொடங்க தொலைத் தொடர்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்
No comments:
Post a Comment