அண்மையில் இந்தியா முழுவதும் பெய்த பருவமழை காரணமாக வெங்காய உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு வெங்காய விலை தாறுமாறாக ஏறியது. வெங்காயத்துக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைப் போக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து பாகிஸ்தானிலிருந்து அதிக அளவில் வெங்காயம் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது.
முதல் கட்டமாக பாகிஸ்தானில் இருந்து வரும் வெங்காயம் ஜனவரி 7ஆம் தேதி டில்லியை வந்தடையும். வெங்காயத்தின் வரத்து அதிகமானால் உள்ளூர் சந்தையில் வெங்காயத்தின் விலை சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் தற்போது வெங்காயம் கிலோ ரூ. 65க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அஸ்ஸலாமு அழைக்கும்
ReplyDeleteஜனவரி 8 இல் இருந்து PJP காரவங்க வெங்காயம் இல்லமே தான் சப்பிடுவங்களா!!