Latest News

அதிரையில் கல்வி விழிப்புணர்வு மாநாடு

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அதிரைப்பட்டினம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளையும், அதிரைநிருபர்  வலைத்தளமும், அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM) இணைந்து  நடத்தும்


கல்வி விழிப்புணர்வு மாநாடு


அன்புடையீர்!


அஸ்ஸலாமு அலைக்கும்.


இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2011 ஜனவரி 14,15  தேதிகளில் நம் எதிர்காலச்  சந்ததிகளான மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரின முன்னேற்றத்தையும் வளவாழ்வையும் கருத்தில் கொண்டு, கல்வி விழிப்புணர்வு மாநாடு நமதூரில் நடைபெற இருக்கின்றது. அவ்வமயம், நம் சமுதாயத்தின் கல்விச் சிந்தனையாளர்களும் பயிலரங்கு விற்பன்னர்களும் வந்து கலந்துகொண்டு சிறப்புச்சொற்பொழிவுகளும் பயிற்சிகளும் நிகழ்த்த இருக்கின்றார்கள்.

கல்வி நிலையங்களின் நிர்வாகிகளே! பெற்றோர்களே! பெரியோர்களே! உங்கள் பராமரிப்பில் இருக்கும் மாணவச் செல்வங்களை இம்மாநாட்டு நிகழ்ச்சிகளில் வந்து கலந்து பயன்பெறச் செய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம். நீங்களும் வந்து கலந்துகொண்டு, நிகழ்ச்சிகளில் பங்குபெற்று, பயன் பெறலாம்.


இவண்,
இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை,
அதிரைநிருபர்,
அதிரை இஸ்லாமிக் மிஷன்.
கல்வி விழிப்புணர்வு மாநாடு பற்றி விரிவான அறிவிப்பும் நிகழ்ச்சி விவரங்களும் பின்னர் வெளியிடப்பெறும், இன்ஷா அல்லாஹ்.


நாளைய நம் சமுதாயத்தை தலைநிமிர்ந்த சமுதாயமாக உருவாக்குவோம். நமக்குரிய உரிமைகளை  நம் பக்கம் மீட்டெடுப்போம்.   ஆட்சி  அதிகாரத்திலும், சட்டத்துறையிலும், நீதித்துறையிலும் நம் இஸ்லாமிய ஆளுமையை நிலைநிறுத்துவோம்.  உலக மக்களுக்கு ஓர் உதாரணமாக நம் வருங்கால சந்ததியினரை உருவாக்க அனைவரும் வாருங்கள்,  மார்க்க கல்வியுடன் உலகக்  கல்வியை  வழியுறுத்தி வலுமைமிக்க  சமுதாயமாக  நம்  முஸ்லீம் சமுதாயம் உருவாக  ஒற்றுமை கரம் நீட்டுகிறோம். வாருங்கள் ஒன்றுபடுவோம்.  வெற்றி  பெற்ற  சமுதாயமாக  உருவெடுப்போம்.  இன்ஷா அல்லாஹ்.


கல்வி விழிப்புணர்வு மாநாடு வெற்றிபெற படைத்தவனிடம் துஆ செய்கிறோம். நீங்கள் அனைவரும் துஆ செய்யுங்கள்.


கல்வி விழிப்புணர்ச்சி சபதத்துடன்....


-- அதிரைநிருபர் குழு

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,

    எங்கள் கோரிக்கையை ஏற்று தங்களின் வலைப்பூவில் அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாடு அறிவிப்பு செய்தியை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.