Latest News

  

புற்றுநோயோடு போராடும் ஐந்து வயது பிஞ்சுக்கு உதவ முன் வாருங்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகரத்தில், ஓரியண்ட் இங்கிலீஷ் மீடியம் பள்ளியில் பயிலும் அபூபக்கர் என்ற படத்திலுள்ள ஐந்து வயதுள்ள மாணவன் முதலாம் வகுப்பு பயின்று வருகிறான்.

பள்ளியில் சக மாணவர்களுடனுடன் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கையில் இவனால் மட்டும் திடீரென முடியாமல் போனது. காரணம் அறிய மருத்துவரை நாடி பரிசோதனைகளை மேற்கொண்டபோதுதான் அந்த அதிர்ச்சியான தகவல் வெளியானது. சிறுவன் அபூபக்கரின் வயிற்றுப் பகுதியில் புற்றுநோய் கட்டி (கேன்சர்) வளர்ந்து கொண்டு இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மருத்துவர்களின் அறிவுரைப்படி இந்த கேன்சரை அறுவை சிகிச்சை மூலம் குணமாக்க இயலாதாம். தொடர்ந்து 2 வருட காலம் தீவிர சிகிச்சை செய்ய வேண்டுமாம். (சுட்டி: மருத்துவர்களின் பரிந்துரை) மிகச் சாதாரண வேலையில் இருந்து கொண்டு, தம்மால் இயன்ற அளவில் சேமித்து ஆங்கிலக் கல்வியில் மகனைச் சேர்த்து படிக்க வைத்துக் கொண்டிருக்கும் மாணவனின் தந்தை சுலைமான் மீளாத் துயரத்திலும், இதனை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்களின் உதவிக் கரங்களையும் எதிர்பார்த்தும் உள்ளார்.

வங்கிக் கணக்கு விபரங்கள்:
M. Sulaiman
SBT, Colachel Branch
A/C No : 57059234495
Contact Numbers:
Mobile:  +918907042122
Mobile:  +919952531612
 
கேன்சர் போன்ற பணக்கார நோய்க்கு 2 வருட காலம் தீவிர சிகிச்சை என்பதும் அது சுலைமான் போன்ற ஏழைகளைப் பொறுத்த மட்டில் எவ்வளவு சிரமம் என்பதும் சிந்திக்க வேண்டிய விஷயம்.  சிறுவன் அபூபக்கர், உங்களது உதவியை எதிர் நோக்கி இருக்கிறார்.

இங்கே உள்ள வங்கி கணக்கிற்கு உங்களால் இயன்ற உதவியை அனுப்பி வைத்தால், வறுமையில் வாடும் சிறுவனின் குடும்பத்திற்கு மிக்க உதவியாக இருக்கும். இதற்கான நற்கூலிகள் இறைவன் புறத்திலிருந்து உங்களுக்குக் கிடைக்கும், இன்ஷா அல்லாஹ்!

உதவியினை உடனடியாக அனுப்ப இயலாதவர்கள் இவ்விஷயத்தை பிறருக்கு உடனடியாகத் தெரிவியுங்கள். அத்துடன் இந்தக் குடும்பத்தினரின் இன்னல்களைப் போக்கிட, குறிப்பாக இந்த சிறுவனுக்காக இறைவனிடத்தில் பிராத்திக்கவும்.

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.