பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்
துபையில் கடந்த வெள்ளிக்கிழமை 05.11.2010 அன்று இரவு 7:00 மணியளவில் அமீரக தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்க (TIYA) த்தின் பொதுக்குழு கூட்டம், தலைவர் தலைமையில் மற்ற நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்றது. அதில் நிர்வாகிகளால் கடந்த 10.07.2009 முதல் 04.11.2010 வரையிலான TIYAவின் செயல்பாடு, கணக்கு விபரங்கள்
அனைத்தும் உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
மேலும் TIYAவின் கடந்த வருட நிர்வாகம் கலைக்கப்பட்டது. உறுப்பினர்கள் முன்னிலையில் TIYAவின் மூத்த உறுப்பினர்களான சகோ. பகுருதீன் அவர்களையும் சகோ.அன்வர்தீன் அவர்களையும் தேர்வு குழு உறுப்பினராக தேர்வு செய்து, வரக்கூடிய ஒரு ஆண்டுக்கானா TIYAவின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து தருமாறு அவர்கள் இருவரும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
அதன்படி அவர்கள் இருவரும் கீழ்க்காணும் சகோதரர்களை உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று ஒருமனதாக தேர்வு செய்தார்கள். அதன் விபரம் வருமாறு :
1. தலைவர் : B. ஜமாலுத்தீன்
2. து. தலைவர் : N. முஹமது மாலிக்
3. செயலாளர் : S. சிராஜுதீன்
4. து. செயலாளர்கள் : H. சபீர் அஹமது, N. ராஜிக் அஹமது, M. ஷேக் நசுருதீன்
5. பொருளாளர் : S. நவாஸ்
6. து. பொருளாளர் : R. முஹமது யாசீன்
மேற்கண்ட நிர்வாகிகள் தேர்வு முடிந்தவுடன் கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அவைகள் வருமாறு:
1. உறுப்பினர்களிடம் வசூலிக்கப்படும் மாதச் சந்தாவை இனிவரும் காலங்களில் 3 தவணையாக திர்ஹம்: 40/- வீதம் வசூலிப்பது என உறுப்பினர்களின் ஒப்புதலுடன் தீர்மானிக்கப்பட்டது.
2. நமது முஹல்லாவில் மக்கள் குடியிருப்பு பகுதிகள் வளர்ந்து கொண்டேயிருப்பதனால் சாணா வயலுக்கு மேற்புறம் ஒரு பள்ளிவாசல் உருவாக்க வேண்டும் என நமது முஹல்லா மக்கள் விரும்புவதனால் பள்ளிவாசலுக்கென்று நிலம் வாங்க,TIYAவின் உறுப்பினர்கள் நிதியிலிருந்து கடனாக தேவைப்படும் தொகையினை பெற்று நிலத்தை பள்ளிவாசலுக்கு வாங்குவதற்கு உறுப்பினர்களின் ஒப்புதல் பெற பெற்றது. TIYAவில் இருந்து வாங்கக்கூடிய கடன் தொகையினை முடிந்தளவிற்கு திருப்பி செலுத்தி விட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
3. வரும் காலங்களில் நமது முஹல்லாவில் நலிவுற்று இருக்கின்ற ஏழைச் சிறுவர்களுக்கு, இன்ஷா அல்லாஹ் வருடந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையினருக்கு இலவச கத்னா செய்து கொடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்ட நிகழ்வுடன் அமீரக TIYAவின் பொதுக்குழு கூட்டம் துஆவுடன் இனிதே நிறைவுற்றது.
என்றும் அன்புடன்,
அமீரக TIYA நிர்வாகம்
துபை
அமீரக TIYA நிர்வாகம்
துபை
No comments:
Post a Comment