மஹாராஷ்ட்ரா மாநிலம் இரத்தனகிரி மாவட்டம் முரத்புர் கிராமத்தில் நிசா என்ற பெண் தனது தந்தைக்கு எதிராக காவல்துறையில் வழக்கு பதிவு செய்துள்ளார். எதற்காக தெரியுமா? தனது கள்ளக் காதலனை காப்பாற்றுவதற்காக!.
நிஸா என்பவருக்கு கடந்த மே மாதம் திருமணம் ஆனது. சமீபத்தில் இவர் தனது கள்ளக் காதலன் அமித் உடன் விட்டுக்கு தெரியாமல் ஓடிப் போய்விட்டார். சென்ற மாதம் ஹரியானாவில் இருவரும் பிடிபட்டனர். போலிசார் நிஸாவை அவரது தகப்பனாரிடத்தில் ஒப்படைத்துவிட்டு கள்ளக் காதலன் அமீதை கைது செய்தனர். உடனே தனது கள்ளக் காதலை காப்பாற்ற தனது தந்தையின் மீதே வழக்கு தொடர்ந்துள்ளார் நிஸா. பி டி ஐ செய்திகுறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக் காதலனுக்காக கணவன் மற்றும் பிள்ளைகளுக்கு எதிராக செயல்படும் காலம் போய் பெற்று வளர்த்த பெற்றோர்களுக்கு எதிராகவே வழக்கு பதிவு செய்யும் கொடூரம் நடந்தேறியுள்ளது.
பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளை உங்களுக்கு எதிராகவே திருப்பிவிடுவதற்கு நல்ல(?)காதல் தேவையில்லை கள்ளக் காதலே போதும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று.
காதலை ஊக்கப்படுத்தும் சினிமா மற்றும் தொலைக்காட்சி சீரியலை விட்டும் உங்கள் குழந்தைகளை அப்புறப்படுத்துங்கள். உங்கள் குழந்தைகளை நல்லொழுக்கப்படுத்த அதுவே பெரும் உதவியாக இருக்கும்.
அந்நிய ஆண்களுடன் தேவையில்லாமல் பேசுவதும், பழகுவதும் தவறு என்பதை சிறுவயது முதல் மனதல் ஆழமாக பதியும் வண்ணம் உங்கள் குழந்தைகளுக்கு உபதேசம் செய்யுங்கள். இல்லையென்றால் இது போன்ற கதி உங்களுக்கும் ஏற்படலாம்!
நன்றி: www.tntj.net
No comments:
Post a Comment