பாபர் மசூதி மீது உரிமை கோருவதை கைவிடமாட்டோம் என சன்னி மத்திய வக்ஃப் வாரியம் அறிவித்துள்ளது. அயோத்தி வழக்கிலிருந்து 90 வயது வாதி முகமது ஹசீம் அன்சாரி விலகினால் அதனால் பெரியதொரு பாதிப்பு ஏற்படப் போவதில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சன்னி மத்திய வக்ஃப் வாரியத்தின் வழக்கறிஞர் ஜபர்யாப் ஜிலானி கூறுகையில், ராமஜென்மபூமி, பாபர் மசூதி பிரச்சனையில் உருப்படியான திட்டங்கள் எதுவும் இல்லாமல் சுமுக தீர்வு காண முயற்சித்தால், பலன் ஏற்படாது. மேலும், சுமுகத் தீர்வுக்கான திட்டமோ அல்லது யோசனையோ, இஸ்லாமிய சட்டத்துக்கு (ஷரியத் சட்டம்) உட்பட்டதாகவே இருக்கவேண்டும். மசூதி மீது இஸ்லாமியர்கள் கோரும் உரிமை ஏற்கப்பட்டால் மட்டுமே பிரச்னைக்குத் தீர்வு காணமுடியும்.
நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அன்சாரி மேற்கொண்டுவரும் முயற்சி குறித்து கேட்டதற்கு,......தீர்வுக்கான யோசனையை எதிர்த்தரப்புதான் வக்ஃப் வாரியத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கவேண்டும். எமது தரப்பிலிருந்து எந்த யோசனையையும் முன் வைக்கமாட்டோம். தீர்வு காண அன்சாரி முயற்சி மேற்கொண்டால், எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.
தன்னை கொல்ல சதி நடப்பதாக அன்சாரி புகார் கூறியுள்ளது பற்றி கேட்டதற்கு, யாரோ சிலர் அவரை தூண்டி விடுகின்றனர், அவருக்கு எதிராக எந்த சதித்திட்டத்தையும் நான் மேற்கொள்ளவில்லை, அவரை நான் சந்திக்கவும் இல்லை. அவரை மிரட்ட எனக்கு அவசியமுமில்லை.
அயோத்தி வழக்கிலிருந்து வாபஸ் பெறுவதாக கூறும் அன்சாரி, அப்படியே விலகினாலும் அந்த வழக்கில் எவ்வித பாதிப்பும் நேராது. முஸ்லிம்கள் சார்பில் 5 வாதித் தரப்புகள் உள்ளன. அன்சாரி விலகினால் 4 வாதி தரப்புகள் உள்ளன. அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வார்கள்.
அயோத்தி பிரச்சனையில் தீர்வுகாண வாய்ப்பு இல்லாமல் போகவில்லை. சுமுகத் தீர்வு காணும் நோக்கில் வந்தால் வரவேற்கத் தயாராக இருக்கிறோம். தீர்வு காண வருபவர் நேர்மை மிக்கவராகவும் கபட நோக்கமில்லாமலும் வரவேண்டும் என்று ஜிலானி கூறினார்.

நன்றி: http://in.tamil.yahoo.com/
No comments:
Post a Comment