அவசர சிகிச்சை பிரிவில் அரை மயக்கத்தில் இருந்த இளம்பெண்ணை மானபங்கம் செய்த டாக்டர் கைது செய்யப்பட்டார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நவிமும்பை பகுதியில் உள்ள ஐ.சி.எல். பள்ளி வளாகத்தில் கடந்த சனிக்கிழமை துர்கா பூஜை கோலாகலமாக நடைபெற்றது.
மும்பை வாசியைச் சேர்ந்தவர் லேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் கணவருடன் பூஜையில் பங்கேற்க வந்தார். அங்கு அவர் மற்ற பெண்களுடன் இணைந்து "கர்பா" என்ற நடனம் ஆடினார். அவர் தொடர்ந்து வேகமாக ஆடியதால் மயங்கி கீழே விழுந்தார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள லோட்டஸ் என்ற தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அப்போது அங்கு பணியில் டாக்டர் விஷால் வான்னே (26) என்பவர் மட்டும் இருந்தார்.
அவர் லேகாவை அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார். லேகாவின் கணவரை வெளியே காத்திருக்குமாறு கூறிவிட்டு அறையை பூட்டினார்.
பின்னர் டாக்டர் விஷால் அதிகாலை 2 மணிக்கு பாதி மயக்க நிலையில் இருந்த லேகாவை கற்பழித்தார். அப்போது லேகாவால் சத்தம் போட இயலவில்லை. அப்போது அதே அறையில் மயக்க நிலையில் சிகிச்சை பெற்று வந்த இன்னொரு நோயாளி திடீரென மயக்கம் தெளிந்து எழுந்தார்.
உடனே அவர் "காப்பாற்றுங்கள்" என்று சத்தம் போட்டபடி கதவை திறந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு வெளியே இருந்தவர்கள் அவசர சிகிச்சை பிரிவுக்குள் ஓடிவந்தனர். அங்கே லேகா அலங்கோலமான நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் டாக்டர் விஷாலுக்கு தர்மஅடி கொடுத்து வாசி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்துடாக்டர் விஷாலை கைது செய்தார். அவரிடம் நடத்திய விசா ரணையில் டிசம்பர் மாதம் முதல் லோட்டஸ் மருத்துவ மனையில் பணியாற்றி வருவது தெரியவந்தது. அவரிடம், இதற்கு முன்பு எத்தனை பெண்களை நாசம் செய்துள்ளார் என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.
இதுபற்றி மண்டல போலீஸ் துணை கமிஷனர் அசோக் துதே கூறும்போது, "டிஜிபியின் உத்தரவுப்படி உடனடியாக குற்றவாளியை கைது செய்திருக்கிறோம். பாதுகாப்பு குறைபாடு பற்றி மருத்துவமனை உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடக்கிறது" என்றார்
No comments:
Post a Comment