உலகம் முழுவதுமே இணைய தளக் குற்றங்கள் எனப்படும் சைபர் குற்றங்கள் சகஜமாக நடக்கின்றதென்றாலும், இத்தகைய சைபர் கிரைம் குற்றவாளிகள் அதிகம் குறிவைத்து மொட்டையடிப்பதென்னவோ இந்தியர்களைத்தான் என்கிறது ஆய்வறிக்கை ஒன்று!
இணைய தளங்களில் வலம் வரும் இந்தியர்களில் 76 விழுக்காட்டினர் கம்ப்யூட்டர் வைரஸ், ஆன் லைன் கிரெடிட் கார்டு மோசடி, வங்கி ரகசிய எண்ணை திருடி பணத்தை சுருட்டுதல் போன்ற சைபர் கிரைம் எனப்படும் இணைய தளக் குற்றங்களுக்கு ஆட்படுபவர்களாகவே உள்ளதாம்!
சர்வதேச அளவில் இணைய தளங்களை பயன்படுத்துவோர்களில் 65 விழுக்காட்டினர் மேற்கூறிய ஏதாவது ஒரு மோசடி அல்லது பாதிப்பை எதிர்கொண்டவர்களாகவே உள்ளதாகவும், ஆனால் இந்த மோசடி இந்தியர்களை இன்னும் அதிகமாக பாதிப்பதாகவும் கூறுகிறது "நார்ட்டான் சைபர் கிரைம் ரிப்போர்ட்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கை.
"ஆஹா லட்சுமி தேவி கண்ண தொறந்துட்டாடா...!" என்று பதில் மெயில் அனுப்பினால், "சிக்கிட்டாண்டா ஏமாளி!" என்ற ரீதியில் வரும் பதிலில், உங்களுக்கான லாட்டரி பரிசை அனுப்பி வைப்பதற்கு சேவை கட்டணம் தேவைப்படுவதால், அதனை அனுப்பி வையுங்கள் என்று ஆளுக்கு தகுந்தபடி ஐந்து லட்சமோ அல்லது பத்து லட்சமோ குறிப்பிட்டு, ஒரு வங்கி கணக்கு எண்ணை அனுப்பி வைப்பார்கள்.
சரி பரிசுதான் கோடிக்கணக்கில் வரப்போகிறதே... என்ற எண்ணத்தில் கையில் இருப்பது, வங்கியில் இருப்பது, போதாதற்கு கடன் என்று அடித்து பிடித்து அந்த தொகையை அனுப்பி வைப்பார்கள் சில அப்பாவி கோவிந்துகள்.
அததோடு சரி! பரிசு தொகை பட்டை நாமம்தான்; மேற்கொண்டு எந்த பதிலும் வராது! அதற்கு பிறகு பணத்தை அனுப்பியவர்கள் சுதாரித்து காவல்துறையில் புகார் அளித்து, பணம் போட்ட வங்கி கணக்கை ட்ரேஸ் செய்தால், அந்த பணம் வழித்து துடைக்கப்பட்டிருக்கும்;கூடவே அக்கவுண்டும் க்ளோஸ் ஆகி, வங்கியில் கொடுத்த முகவரியும் டுபாக்கூர் என்று தெரியும்.
அப்போதுதான் ஆஹா மோசம் போனமே என்று வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறுவார்கள். இது ஒரு உதாரணம்தான்! எங்கள் வங்கியில் கணக்கு வைத்திருந்தவர் மரணமடைந்துவிட்டார். அவருக்கு வாரிசு யாரும் இல்லை.உங்களது பெயரும் அவரது பெயரும் ஒரே மாதிரியாக இருப்பதால் அதை உங்களது பெயருக்கு அனுப்புகிறோம். இருவரும் பாதிப்பாதி பங்கு போட்டுக்கொள்ளலாம் என்று கதை விட்டு மேற்கூறிய மாதிரியே சுருட்டி விடுவார்கள்.
இதுபோன்ற மோசடிகள் இன்னும் வகை வகையாய் "ஒக்காந்து ரூம் போட்டு யோசிப்பாங்களோ?!" என்று சொல்லும் அளவுக்கு நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இதுதவிர எங்கிருந்தோ சுட்ட பெண்களின் படத்தை மார்ஃபிங் செய்து, அவர்களை ஆபாசமாக சித்தரித்து இணைய தளங்களில் உலாவ விடுவது, படு தீவிரமாக நாம் ஒரு தகவலை பெறுவதற்காக இணைய தளங்களில் மேய்ந்துகொண்டிருக்கும்போது, நாம் க்ளிக் செய்யாமலேயே, கணினி திரையின் ஓரம் வந்து அழைப்பு விடுக்கும் பெண்கள் படம், அதில் சபலப்பட்டு தொடர்புகொள்பவர்கள் பணம் உள்ளிடவற்றை இழந்து, வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு சமயங்களில் சக்கையாய் அடி உதைபட்டு திரும்புவதும் உண்டு.
இப்படி உலக அளவில் இணைய தளங்கள் மூலமாக அதிகம் மோசடிக்குள்ளாவது இந்தியர்கள்தான் என்று கூறும் இந்த ஆய்வை நடத்திய "செக்யூரிட்டி சொலியுசன்ஸ் புரவைடர் சிமேன்டெக்" என்ற நிறுவனத்தின் விற்பனை மேலாளர் கவுரவ் கன்வால், இணைய தளங்கள் மூலம் இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் 60 விழுக்காடு கம்ப்யூட்டர் வைரஸ் மற்றும் மால்வேர் (malware) - தீமையை ஏற்படுத்தும் மென்பொருள் - ஆகியவைதான் என்கிறார்!
" இன்றைய சைபர் கிரிமினல்கள் குறிவைப்பது ஆன் லைனில் புதிதாக வலம் வரும் மற்றும் அப்பாவி நபர்களைத்தான்.இப்படி சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்படுபவர்கள், யாரை சந்தித்து இது குறித்து முறையிடுவது என்பதை அறியாதவர்களாகவும், உதவ யாரும் இல்லை என்று நினைப்பவர்களாகவும் உள்ளனர் என்பதுதான் இதில் சோகமான விடயம்" என்று வருத்தம் தொனிக்க கூறுகிறார் கவுரவ்.
நன்றி: www.24dunia.com
No comments:
Post a Comment