Latest News

அண்ணா பல்கலை கழகத்தில் B.E/B.Tech பகுதி நேர (Part Time) படிப்பு

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, October 15, 2010, 19:39
சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் 3 பொறியியல் கல்லூரிகளில் (CEG, AC Tech, MIT) பகுதி நேர பொறியியல் படிப்பிற்கு (Part Time B.E/B.Tech ) விண்ணப்பங்கள் சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் விணியோகிக்கப்படுகின்றன. கடைசிதேதி அக்டோபர் 19.

டிப்ளோமா படித்து முடித்து வேலையில் உள்ளவர்களுக்காக இந்த சேர்க்கை நடைபெறுகின்றது. டிப்ளோமா படித்துமுடித்து அதிகபடியாக 2 ஆண்டுகள் ஆகிருக்க வேண்டும். மொத்த படிப்பு காலம் மூன்றரை ஆண்டுகள் (7 செமெஸ்ட்டர்கள்) வகுப்புகள் மாலை 6.15 முதல் 9.15 வரை இருக்கும், தேவைபடும்போது சனி ஞாயிறு கிழைமைகளிலும் வகுப்புகள் இருக்கும். விண்ணப்பத்தின் விலை ரூ.500. டிப்ளோமா இறுதி ஆண்டு மதிப்பெண்ணில் 75% மற்றும் பணி அனுபவத்தில் 25% மத்திப்பெண் நிர்ணயித்து கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். இதில் முஸ்லீம்களுக்கு 3.5% இட ஒதுக்கீடு உள்ளது. மேலும் விபரங்கள் இந்த இணையதளத்தில் உள்ளது – www.annauniv.edu/ptbe2010...


பகுதி நேர படிப்பின் சில அம்சங்கள் : பகுதி நேரபடிப்பில் சேர எதாவது நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு இருக்க வேண்டும். பகுதி நேர படிப்பின் கல்வி கட்டணம் வழக்கமான படிப்பின் (Regular) கட்டணத்தைவிட இரண்டு மடங்கு இருக்கும். (6 மாதத்திற்க்கு ரூ.25,000-க்கு மேல் இருக்கும்) மத்திய, மாநில அரசு வழங்கும் எந்த கல்வி உதவி தொகையும் பகுதி நேர படிப்பிற்க்கு கிடைகாது.

எனவே இந்த பகுதி நேர படிப்பு, வேலை செய்து கொண்டிருக்கும் சகோதரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கையில் பணம் இருந்தால் நேரத்தை வீணடிக்காமல் இதுபோன்ற படிப்புகள் படித்து கல்வியில் முன்னேறலாம் இன்ஷா அல்லாஹ்.

தகவல்
S.சித்தீக்.M.Tech
http://www.tntj.net/

தகவல் அதிரைம் M. அல்மாஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.