இன்று உலகம் முழுவதுமே சவாலாக இருக்ககூடிய விசையம் என்றால் அது புகை பிடிப்பதை கட்டுப்படுத்துவது என்பதுதான்.
அந்த அளவுக்கு ஆண் பெண் என்றில்லாமல் உலக மக்கள் புகைக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்பது மட்டுமில்லாமல்,இறப்பு விகிதமும், மலட்டு தன்மையும் அதிவிரைவாக கூடிக்கொண்டு வருவதற்கு இது ஒரு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.
சிகரட்டை பொறுத்தவரை கடந்த சில வருடங்களாக பல மாற்று வழிகள் கண்டு பிடித்த போதும், சுவிங்கம், மாத்திரை போன்ற எந்த ஒரு மாற்று வழியும் சரியான பலனை தரவில்லை என்பதுதான் உண்மை.
மேலும் உண்மையை சொல்ல வேண்டும் என்றால், தானாக விரும்பி விட்டால் தவிர, புகைப்பதை கைவிட மாற்றுவழி கண்டு பிடிப்பது என்பது ஒரு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.
மாற்றுவழியாக கண்டுபிடிக்க படும் பொருட்கள் வெற்றி பெறாத காரணத்தை ஆராய்ந்தால் அதன் அடிப்படை இரண்டாகவே இருக்கும்.
I- புகைத்ததை போல உணர்வே வரவில்லை!.
II- என்னதான் இருந்தாலும் சிகரட்டை கையில் பிடிக்க கூடியதை போல உணர்வும் புகையும் இல்லாததுதான்.
காரணம் புகை வராத ஒரு பொருளை வைத்திருப்பது சிலருக்கு சங்கோஜத்தையும் சிலருக்கு பின் விளைவுகளையும் கொடுத்தது.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு சந்தைக்கு புதிதாக வந்திருப்பதுதான் இ-சிகரட்(படங்களை சொடுக்கி தெளிவாக பார்க்கவும்).
Electronic Cigarette என்பதின் சுருக்கமே E-Cigarette, பேட்டரியில் இயங்கும் இவை, ஒரு முறை சார்ச் செய்தால் ஆறு மணிநேரம் முதல் இரண்டு நாட்கள் வரை பயன்படுத்தும் வகையில் இருக்கிறது.
மற்ற அனைத்து தயாரிப்பை விட இது குறுகிய காலத்தில் வெற்றி பெற்று இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன், காரணம் இது சாதாரண சிகரட் போலவே வடிவம், புகை வருகிறது, குறிப்பாக புகைத்ததை போல சுவையும் உணர்வும் இருக்கிறது, பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது.
மேலும் இதன் வெற்றிக்கு முக்கிய காரணம், இதில் தீங்கு வரும் நிக்கோடின், தார் போன்ற எந்த நச்சு பொருட்களும் இல்லை என்று சான்றுகள் தரப்படுகிறது.
சாதாரண சிகரட் சுவை முதல் பல்வேறு சுவைகளில் இ-சிகரட் கிடைகிறது, இதில் வரும் புகை அருகில் இருப்பவர்களுக்கு, மற்ற சாதாரண சிகரட் புகை போல எரிச்சலையோ, வெறுப்போ ஏற்படுத்துவது இல்லை, அதனால் இதை அந்த அந்த நாட்டு சட்டத்துக்கு உட்பட்டு எங்கும் புகைக்க முடியும் என்று விளம்பரப்படுத்த படுகிறது..
சில நாடுகளில் அரசாங்கமும் இதை அங்கீகரித்து இருக்கின்றன, சாதாரண சிகரட் புகைக்கு தடை விதித்து இருக்கும் பகுதிகளில் கூட இ-சிகரட் புகைக்க அனுமதி கொடுத்திருக்கிரார்கள். அதே நேரம் சில நாடுகளில் இதை இன்னும் அங்கிகரிக்கவில்லை என்பதும் உண்மை.
எது எப்படியோ புகைப்பதை நிறுத்த இ-சிகரட் ஒரு சிறந்த மாற்று வழியாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
ஆனாலும், இ-சிகரட் வாங்கும் முன் பொதுவாக சில சுய பரிசோதனை விசையங்களை கருத்தில் கொள்வது என்பது அவரவர் சொந்த பொறுப்பாகிறது.
இந்த தயாரிப்பை வாங்கவோ அல்லது பொது இடங்களில் பயன் படுத்தவோ உள்ள விதி முறைகளை நீங்கள் இருக்கும் நாட்டின் சட்டத்தில் இருந்து தெளிவாக முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
மற்றவர்கள் நிறுத்த சொல்கிறார்கள் என்பதற்காக இல்லாமல், உங்கள் அடி மனதில் புகைப்பதை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.
இதை தவிர மற்ற புகை பிடிக்கும் சமந்த பட்ட அனைத்து பொருட்களையும் உடனே கண்ணில் படாமல் கடாசி விட்டு, இதை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இது புகைப்பதை படிப்படியாக குறைத்து ஒரேடியாக நிறுத்துவதற்கான ஒரு சிகிச்சைதான், இதையும் விரைவில் நிறுத்தி விட வேண்டும் என்று ஒவ்வொரு முறை புகைக்கும் போதும் நினைவில் வைத்திருந்து, ஒரு நாள் சுத்தமாக நிறுத்தி விட வேண்டும்.
இறுதியாக, எந்த ஒரு பொருள் சந்தைக்கு வந்தாலும் அதன் அடிப்படை பலனை இழந்து விட்டு, வெறும் விலையை மட்டும் கருத்தில் கொண்டு குறைந்த விலையில் சில போலி தயாரிப்புகளும் உடனே சந்தைக்கு வந்து விடும்.
விலை குறைவு என்பதை மட்டும் பார்க்காமல், தகுந்த நிபுணர்களை அல்லது மருத்துவரை கலந்து ஆலோசித்து சரியான தயாரிப்பை விலை சிறிது அதிகமானாலும் வாங்குவதன் மூலம் மட்டுமே இ-சிகரட்டின் உண்மையான பலன் பெற முடியும்.
இனி சுவாரஸ்சியமான ஒரு குட்டி தயாரிப்பை பற்றி பார்ப்போம்.
எவ்வளவோ பெரிய பெரிய பொருட்கள் சந்தைக்கு வந்தாலும், ஆக சிறிய பொருளை தயாரிப்பதில் இருக்கும் ஆர்வம் எந்த ஒரு நிறுவனத்துக்கும் குறையவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இதோ இங்கு படத்தில் இருப்பது ஏதோ பென்சில் சீவ அல்லது விளையாட்டு பொருள் என்று நினைக்க வேண்டாம். இது ஒரு ஆயுதம் என்றால் உங்களால் நம்ப முடியுமா?
ஆனால் உண்மை அதுவே, ஆம் இது "கெனான்" நிறுவம் தயாரித்துள்ள ஆக சிறிய பீரங்கி.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல, உருவத்தில் சிறிதாக இருந்தாலும் இதன் சக்தி அதிகமாகவே இருக்கிறது.
என்னதான் சொல்லுங்கள், ஆயுதம் என்றாலே ஆபத்துதானே?
அதிலும், இத்தகைய பொருட்கள் தப்பி தவறி கூட குழந்தைகள் கையில் கிடைத்து விட்டால்!, அது உயிருக்கே உலை வைத்து விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நன்றி : விகடன்
தகவல் அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment