அமெரிக்க குவான்டானமோ மற்றும் ஈராக்கிய அபூ கிரைப் சிறைகள் மட்டும் தான் மனிதாபிமானத்திற்கு முரணான, மிருகத்தனமான சித்திரவதைகள் செய்யப்படும் வதைமுகாம்கள் என வாசித்திருப்பீர்கள்.
ஆனால் இஸ்லாத்தின் புனித பூமியாகிய சவூதி அரேபியாவில் பணிப்பெண்களுக்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தால் ஜாஹிலிய்யா என்ற அறியாமைக்காலத்தில் தான் தொடர்ந்தும் அந்த நாடு இருந்து வருகின்றது என்ற உண்மை புலனாகும்.
(சவூதியிலிருந்து இலங்கை திரும்பிய பெண்ணின் உடம்பிலிருந்த ஆணிகள் எக்ஸ் ரே படத்தில் இவ்வாறு தெரிகின்றன.)
சித்திரவதை, கற்பழிப்பு, காடைத்தனம் என்ற தனது அமெரிக்க நண்பனின் அத்தனை செயல்களையும் அச்சொட்டாக சவூதி ஆளும் வர்க்கமும், எண்ணெய் ஷேக்களும் ஏனைய பிரஜைகளும் செய்து வருகின்றனர்.
இலங்கையர்கள் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் சவூதியில் பணிபுரிகின்றனர். இவர்களில் 75 வீதமானோர் வீட்டுப்பணிப்பெண்களாக பணிபுரிகின்றனர். இந்த பணிப்பெண்களுக்கு குறைந்த ஊதியத்தை வழங்கி, அடிமையாக வைத்து வேலை வாங்குவது மட்டுமல்லாமல், அவர்கள் மீது பாலியல் பலாத்காரத்தையும் வயது வேறுபாடின்றி இந்த அரபுகள் இழைத்து வருகின்றனர்.
அரபு வீடுகளில் வயது போன பாட்டன் முதல் பேரன் கொள்ளுப் பேரன் வரை பாலியல் பலாத்காரம் என்ற இந்தக் கலையில் படு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கின்றனர்.
சவூதியில் பணிப்பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அவ்வப்போது ஊடகங்களில் வெளிவந்தாலும் சவூதி அரசு அதற்காக ஒருபோதும் அலட்டிக் கொள்வதில்லை.
இஸ்லாத்தின் தாயகம் என்று தன்னை மார்தட்டிக்கொள்கின்ற ஒரு நாட்டில் பணிப்பெண்களுக்கெதிராக இத்தகைய வன்முறைகள் நிகழ்வது அந்த நாட்டை மட்டுமல்ல இஸ்லாத்தையும் இழிவு படுத்தும் செயலாகும்.
இலங்கையிலிருந்து பணிப்பெண்ணாக சவூதி சென்ற ஒரு ஏழைப்பெண்ணுக்கு 23 ஆணிகளை உடலில் அறைந்து கொடுமை புரிந்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது சவூதி நாடு.
தன்னுள் ஜாஹிலிய்யத்தை வளர்த்துக்கொண்டு வெளி உலகிற்கு வெட்கமில்லாமல் இஸ்லாத்தைப் போதிக்கும் சவூதி அரசு தனது வஹ்ஹாபிய சிந்தனையூடாக உலகையே இன்று சர்ச்சைக்களமாகவும், இரத்தக்களமாகவும் மாற்றி வருகிறது.
இலங்கை பேருவளை(இரண்டு குழுவினர்களுக்கிடையிலான மோதல்) முதல் ஆப்கான், ஈராக், செச்னியா, சோமாலியா வரை அதன் அரசியல் சதிக்கு சிக்காத எந்த நாடும் இல்லை என்ற நிலை உருவாகி வருகின்றது..
உலகில் அமெரிக்காவின் தேவைக்காக ஜிஹாத் என்ற போர்வையில் வன்முறையை வளர விட்டு வாழ்ந்துக் கொண்டிருக்கும் வஹ்ஹாபிய அரசு, அதன் உள்வீட்டு விவகாரத்திலும் வன்முறையுடனேயே வாழ்கிறது என்பதற்கு சிறந்த சான்று இது போன்ற சம்பவங்கள்.
தனது வீட்டு பணியாளர்களை மிருகத்தை விட மோசமாக நடாத்தும்
இவர்கள், பெண்கள் மீதான வக்கிர, வன்முறை சார்ந்த மனநிலையில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள்.
சவூதி போதிக்கின்ற அமெரிக்க நலன் சார்ந்த வஹாபி இஸ்லாம் மன்னர் குடும்பங்களையும், அதன் ஜாஹிலிய்ய ஆட்சியையும் மட்டுமே பாதுகாக்கின்றது.
பாலைவன கொள்ளை கோஷ்டி பரம்பரையைச் சேர்ந்த இப்னு சுஊத் மன்னர் குடும்பம், பிற நாடுகளில் பணத்தை ஊட்டி வஹாபிஸ இஸ்லாத்தை வளர்த்து வருகிறது. வஹாபிஸம் தனது சொந்த நாட்டு மக்களுக்கு கூட வழிகாட்ட தகுதியற்றது என்ற உண்மையை அரபுகளின் வாழ்க்கையைப் பார்த்து இலகுவாக புரிந்துகொள்ள கூடியதாய் இருக்கிறது.
சவூதியின் பிரபல பத்திரிகையான சவூதி கெஸ்ஸட் வெளியிட்டுள்ள ஒரு தகவலில் ரமழான் மாதம் வரும்போதே வீட்டுப்பணிப்பெண்கள் வீடுகளை விட்டு ஓடிவிடுவதாகவும் நோன்பு காலத்தில் 24 மணி நேரமும் ஓய்வின்றி அடிமையாக வேலைசெய்ய பணியாளர்கள் நிர்ப்பந்திக்கப் படுவதே இதற்குரிய காரணமென்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.
நோன்பு காலங்களில் பணியாளர்களை எவ்வாறு கவனிக்க வேண்டும் என்ற இஸ்லாத்தை போதனையை மறந்த இந்த சவூதிகள் அந்த மாதத்தின் கண்ணியத்தையே சீர்குலைத்து இஸ்லாத்திற்கே மாசு கற்பிக்கின்றார்கள் .
இஸ்லாம் பிறந்த அந்த பூமியின் மகிமை காட்டுமிராண்டித்தனமான இந்த காமக் கூத்தாடிகளின் செயல்களால் இன்று களங்கப்பட்டு நிற்கிறது.
இலங்கைப் பெண்களுக்கு குறிப்பாக சிங்கள இனத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இப்படி அநீதி அக்கிரமம் இழைக்கப்படும் போது இலங்கையிலுள்ள சவூதியின் கைக் கூலி இயக்கங்கள் மரண மௌனத்தில் ஆழ்ந்து நிற்கின்றன.
வயிற்றுப் பிழைப்பு இவர்களை வாய் மூடி மௌனிகளாக மாற்றி இருக்கிறது. காரணம் மாதா மாதம் கிடைக்கின்ற சவூதி சம்பளம் நின்று போய் விடும் அச்சம் இவர்களை ஆடகொண்டிருக்கிறது.
அக்கிரமங்களை தட்டிக்கேட்பது கூட அல்லாஹ்வின் தூதா் (ஸல்) அவர்களின் “சுன்னா” என்பதை ஏற்றுக்கொள்ள இவர்களுக்கு பணம்தான் பகையாக நிற்கிறது.
நன்றி : www.badrkalam.blogspot.com
தகவல் அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment