Latest News

  

காவி பயங்கரவாதமும் அதனை தொடர்ந்து கொக்கரிக்கும் ஹிந்துத்துவவாதமும்!!


காவி பயங்கரவாதமும் அதனை தொடர்ந்து கொக்கரிக்கும் ஹிந்துத்துவவாதமும்!!

காவி தீவிரவாதம் என்று .சிதம்பரம் ஒரு இடத்தில் கூறியதற்காக ஒட்டுமொத்த ஹிந்துத்துவவாதிகளும் கொக்கரிக்கின்றீர்களே மான நஷ்ட வழக்கு போடும் நிலைக்கு உங்கள் மனம் துடிக்கின்றதே, காலம் காலமாய் எங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் உடனடியாக ஹிந்துத்துவவாதிகளாகிய நீங்களும், சில இல்லை பல அரசு அதிகாரிகளும், ஒட்டுமொத்த மீடியாக்களும் முஸ்லிம்களை புண்படும்படி முஸ்லிம் பயங்கரவாதிகள், இஸ்லாமிய தீவிரவாதிகள் என்றெல்லாம் இட்டுக்கட்டி குண்டுவெடிப்பு சம்பவங்களோடு தொடர்பு படுத்தி பேசுனீர்களே அதற்கு நாங்கள் எந்த கோர்டில் போய் வழக்கு போடுவது? அப்படியே வழக்கு போட்டாலும் எங்களுக்கு நீதி கிடைக்குமா? நீதி வழங்கும் இடங்களிலும் உங்களால் மூளை சலவை செய்யப்பட்ட பார்பினியவாதிகள் தானே இருகின்றார்கள்!

இவ்வாறு நீங்கள் தொடர்ந்து மீடியாக்களாலும்,உங்கள் பேச்சுக்களாலும் எங்கள் மனதை ரொம்பவே காயப்படுத்தினீர்கள் ஆனால் நாங்களோ பொங்கி எழுந்து அரசு அதிகாரிகளை உங்களை போல் மிரட்டவில்லை,உங்களை போல் மத்திய அரசை பணிய வைக்கக்கூடிய அதிகாரம் எங்களுக்கு இல்லை ஆனால் எல்லா அதிகாரத்தையும் ஒருமணே வைத்திருக்கின்ற ஏக இறைவனிடம் நாங்கள் கையேந்தினோம். அந்த இறைவன் தான் இன்று எந்த மீடியாக்களை வைத்து எங்களை தீவிரவாதிகள் முத்திரை குத்தினீர்களோ அதே மீடியாக்கள் இன்று உங்களை பார்த்து தீவிரவாதிகள் என்று சொல்லும் காலத்தை எங்களை படைத்த இறைவன் உருவாக்கிவிட்டான். எல்லா புகழும் இறைவனுக்கே!

காவி தீவிரவாதிகள் என்று சொல்லியதற்காக இன்று ஒட்டுமொத்த ஹிந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டார் .சிதம்பரம் என சொல்லும் நீங்கள் முஸ்லிம்கள் வெளியில் தலைகாட்டமுடியாத அளவிற்கு படிக்காத பாமரனும் எங்களை பார்த்து நீங்கள் தீவிரவாதிகளா என்று சொல்லும் அளவிற்கு முஸ்லிம் தீவிரவாதிகள், இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்று நாடுமுழுவதும் பரப்புனீர்களே அப்பொழுது உங்களுக்கு தெரியவில்லையா ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மனதும் புண்படுமே என்று! அடுத்தவனுக்கு என்றால் ஒரு நியாயம்!உங்களுக்கு என்றால் ஒரு நியாயமா? குத்துதே குடையுதேஎன்று கிராம புறங்களிலே கூறும் ஒரு பழமொழியை இங்கு கூறினால் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

உங்களையாவது வார்த்தைகளால் தான் சொன்னார்கள் காவி தீவிரவாதிகள் என்று எங்கள் சமுதாயத்தை சந்தேக கண்ணோட்டத்தோடு இந்திய காவல்துறையினரும் உளவுத்துறையினரும் சல்லடை போட்டு சலித்தார்களே, தீவிரவாதிகளை தேடுகிறோம் என்ற போர்வையில் அப்பாவி இளைஜர்களையும், பள்ளி,கல்லூரி மாணவர்களையும் சித்திரவதைக்கு உள்ளாக்கியதோடு மட்டுமில்லாமல் என்கவுண்டர் என்ற புனித(!) பணியை முஸ்லிம்கள்மீது திட்டமிட்டு தினித்தீர்களே அதையெல்லாம் எங்கே கொண்டு சொல்வது. அதெற்கெல்லாம் காரணம் நீங்கள் எங்கள் சமுதாயத்தை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தியதுதானே.

இப்பொழுது உங்களுக்கு என்றவுடன் உங்களின் உண்மை (தீவிரவாத) முகத்தை வீடியோ ஆதாரத்தோடு செய்திவெளியிட்ட ஹெட்லைன்ஸ் டுடே அலுவலகத்தை தாக்குகின்றீர்கள்,கோர்ட்டிலே வழக்கு போடுகின்றீர்கள், நஷ்டஈடு கோருகின்றீர்கள், ஹிந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக கூக்குரலிடுகின்றீர்கள் என்ன நியாயமிது?

இருகின்றோம் இன்னும் பொறுமையாக இருந்து எங்களை படைத்த இறைவனிடம் கையேந்துகின்றோம் இன்ஷா அல்லாஹ் கர்கரே போன்ற நியாயமிக்க அதிகாரிகள் மீண்டும் வருவார்கள் உங்கள் கொட்டத்தை அடக்க என்ற சிந்தனையோடு!

ஆக்கம் முத்துப்பேட்டை முகைதீன்


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.