மக்கள் போராளி மதானியை
விடுதலை செய்!!
பாபர் மசூதியை இடித்த பயங்கரவாதிகள்
நாடாளுமன்றத்தில்...!
பல்லாயிரம் முஸ்லிம்களை கொன்ற
நரமாமிச வெறியன்
நரேந்திர மோடி அதிகாரத்தில்..!
வைக்காத குண்டுக்கு
ஒன்பது ஆண்டுகள் சிறை சென்ற
மதானிக்கு மீண்டும் சிறையா?
காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்ட் சங்க் பரிவார் எல்லாம் ஓரினமே..!
இந்துத்துவா ஆதிக்கத்தை வேரருப்போம்!
பொய் வழக்கும்,சிறைச்சாலைகளும் போராளியை என்ன செய்யும்?
- திருமா.
விடுதலை சிறுத்தைகள் கட்சி
இஸ்லாமிய ஜனநாயக பேரவை
மழைக்காலத்தின் சென்னை மாநகர வீதிகள் முழுவதும் ,சுட்டெரிக்கும் திருமாவின் கண்டன வாசகங்களால் அனல் பறக்கின்றது-
கேரளாவில் மதானியின் கைதினை கண்டித்து நேற்று முன் தின இரவிலிருந்து சுமார் 10,000 சுவொரொட்டிகள் திருமா வின் கண்டன குரலாக நகர் முழுவதும் பதியப்பட்டுள்ளது.
இஸ்லாமியன் என்ற ஒற்றை காரணத்திற்காகவே 9 ஆண்டுகள் எந்த குற்றமும் நிருபிக்க படாமல் வாழ்க்கையை சிறைச்சாலை இருள்களுக்குள் தொலைத்த அப்துல் நாசர் மதானி மீண்டும் பெங்களூர் சிறைகளில் மதவாத கர்நாடக அரசால் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார்.
இதுவ்ரை ஒருவர் கூட அவரின் கைது நடவிடிக்கையை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை. இஸ்லாமியன் என்றால் காங்கிரஸும், கம்னீஸ்டுகளும் இந்துத்துவா பி.ஜே.பி யாகிவிடுகின்றது.
மற்ற இஸ்லாமிய அமைப்புகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் தனது நிலையை பாதுகாத்து கொள்ளுவதே பெரும் பிரச்சனையாக உள்ளது. ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயமும் பெரும் அச்ச நிலையில் ஒடுக்கப்பட்டு வாழும் இந்திய சூழலில் சத்தியத்தின் குரலாய் அச்சமின்றி ஆண்மையுடன் கண்டனத்தை பதிவு செய்த தமிழகத்தின் மால்கம் X - திருமா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி-
ஒடுக்கப்பட்ட இரு சமுகங்களும் இனையும் ஒற்றை புள்ளியாய் வாழும் திருமாவிற்கு இஸ்லாமிய சமுகம் நன்றி கடன்பட்டுள்ளது.
தகவல் : அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment