Latest News

  

சர்ச்சையை கிளப்பும் இந்து “காவி” தீவிரவாதம்

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் இந்து தீவிரவாதம் குறித்து கூறிய கருத்திற்க்கு எதிப்பு தெரிவித்து ராஜிய சபாவில் பா.ஜ.க. மற்றும் சிவசேனா கட்சிகள் அவை நேரங்களை செயல்பட விடமால் பெரும் கூச்சல் குழப்பங்களை எழுப்பியது இதனால் சபை சில நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தியாவில் எந்த மூலையில் குண்டு வெடித்தாலும் விசாரனையை தொடங்குவதற்கு முன்னரே அது இஸ்லாமிய தீவிரவாதம் தான் என உறுதிசெய்து அப்பாவி இஸ்லாமியர்களை கைது செய்து சிறையில் தள்ளும் வழக்கம் தான் இருந்து வருகிறது. அது இஸ்லாமியர்களின் தொழுகை தளத்தில் வெடித்தாலும் அதற்கும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் தான் காரணம் என கூறிவந்தது உளவுதுறையும்,காவலதுறையும்.

விசாரனைகளின் தொடக்கம் ஒரே மாதிரியான வியுகத்துடனே தொடங்கும் அது குண்டு வெடித்த சில மணி நேரங்களிலே இது பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற , பங்களாதேசில் பயிற்சி பெற்ற ,ஆஃப்கானிஸ்தானில் பயிற்சி பெற்ற X,Y,Z தீவிரவாத அமைப்பு என்று தான் குற்ற விசாரனை தொடங்கும்.

இந்து காவி தீவிரவாதத்தின் கொடுர முகம் ஊடகங்களின், அரசுதுறைகளின் இருட்டடிப்புகளையும் கடந்து வெளிவர தொடங்கியது முதல் இப்பொழுது காவித்தீவிரவாதம் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

வெளிப்படையாகவே கொஞ்சம் கூட குற்ற உணர்வுகள் இல்லாமல் நடக்கும் எல்லாத் தீவிரவாதங்களும் இஸ்லாமிய தீவிரவாதம் என கூறி வந்த ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் இந்து தீவிரவாதம் என்பதை மட்டும் ஜீரனிக்க முடியவில்லை. பி.ஜே.பி மற்றும் சிவ சேனா காவிகள் இந்து காவி தீவிரவாதம் என்பது இல்லவே இல்லை மேலும் இது பெரும்பான்மை இந்துக்களை புண்படுத்தும் வாசகம் என்கிறது.

காங்கிரஸ் அதற்கு இன்னொரு சொல்லாடல் உபோயோகப்படுத்தலாம் என்கிறது அதாவது இந்து தீவிரவாத்த்திற்கு பதில் வேண்டுமானால் காவி தீவிரவாதம் என்று கூறிக்கொள்ளலாம் என்கிறது.

இஸ்லாமிய தீவிரவாதம் என்ற சொல்லாடலுக்காக யாரேனும் இப்படி கவலைபட்டதுண்டா?.. மதானி, குணங்குடி ஹனிபா போன்ற இன்னும் பல நூறு இஸ்லாமியர்கள் எந்த ஒரு குற்றமும் நிருபிக்கபடாமலே கொடும் சிறை தண்டனை அனுபவித்து வருவதும், கேட்பாரற்று இஸ்லாமிய சமுகம் நாதியற்ற சமுகமாய் உள்ளது.

இந்துத்துவா தீவிரவாதிகளால் நாட்டில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளைப் பற்றிய விபரங்கள்.

”இந்து தீவிரவாதம் - வெளிவரும் உண்மைகள்”


• RSS. பயங்கரவாதிகளின் குண்டுவெடிப்பு தொடர்பு பற்றி 'HEADLINES TODAY' வெளியிட்ட வீடியோ தொகுப்பு


சர்வமும் காவியாகிவிட்ட அரசு இயந்திரங்களோ, சட்டங்களோ, பாதுகாப்பு துறைகளோ இந்துத்துவ தீவிரவாதிகளின் ராம ராஜ்ஜிய -அகண்ட பாரத கணவுக்காக்கான மனித உயிர் பலிகளைப் பற்றி கவலைப்பட போவது இல்லை!!!

சாதி மத வர்ணங்களை துறந்து அன்பினால் பினைக்கப்பட்ட வலிமையான மக்களின் அரண்கள் எல்லா தீவிரவாதத்தையும் முறியடிக்கும்!

தீவிரவாதம் எதிர்ப்போம் மக்கள் சக்தி பெருவோம். -தேச நலம் காப்போம்.

கவல் : அதிரை M. அல்மாஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.