தமிழகத்தில் 82 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், 47 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று ஒப்பந்தம் செய்யப்படுகின்றன.
சென்னை கிண்டியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆட்டோமொபைல், காற்றாலை, எரிசக்தி, சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் 47 திட்டங்களுக்கு முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக Capital land, Adani, JSW உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளன. இந்த புதிய திட்டங்கள் மூலம், 82,400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இவை தவிர 14 திட்டங்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
No comments:
Post a Comment