
- தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து,பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க வாய்ப்புள்ளதாக தகவல்.
தமிழகத்தில் வருகின்ற 14-ம் தேதியுடன் தளர்வுடன் கூடிய ஊரடங்கு காலை 6
மணியுடன் முடியும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
கூட்டம் இன்று நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்
மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர், மருத்துவர் துணைச்செயலாளர், டிஜிபி
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு மேலும்
நீட்டிப்பதா..?
அல்லது மேலும் தளர்வுகள் அளிப்பதா..? பற்றி உயர்
அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தார்.
இந்நிலையில்,தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க
அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும்,கொரோனா தொற்று அதிகமுள்ள 11
மாவட்டங்களை தவிர்த்து,பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க
அதிகாரிகள் பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment