சென்னை : 'மேகதாதுவில் அணை கட்டப்படும்' என, கர்நாடக முதல்வர்
அறிவித்துள்ளதற்கு, தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., கடும்
கண்டனம் தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கை:நான் பிரதமரை சந்தித்த போது,
'கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும்' என, கோரிக்கை மனு
அளித்தேன். கர்நாடக அரசு அணை கட்டினால், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள்
பாலைவனமாகி விடும் என்பதை எடுத்துரைத்தேன்.கர்நாடக அரசு, 2019 ஜூன் 20ம்
தேதி, சுற்றுச்சூழல் அனுமதி கோரி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை
அணுகியது. இதை அறிந்து, நான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்,
'சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கூடாது.
மேகதாது திட்ட அறிக்கையை திருப்பி அனுப்ப வேண்டும்' என,
தெரிவித்தேன். பன்மாநில நதி நீர் தாவா சட்டப்படி, நதி நீரை தடுப்பதற்கோ
அல்லது திசை திருப்புவதற்கோ, எந்த மாநிலத்திற்கும் உரிமை கிடையாது.ஏற்கனவே
உச்ச நீதிமன்றத்தில், 2018 டிச., 5ம் தேதி, என் தலைமையிலான அரசு, உச்ச
நீதிமன்ற ஆணைகளை மீறியதாக, கர்நாடக மீது, அவமதிப்பு வழக்கு தாக்கல்
செய்தது. இவ்வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், மேகதாதுவில் அணை
கட்டப்படும் என்ற, கர்நாடக முதல்வரின் ஒருதலைபட்சமான அறிவிப்புக்கு, என்
கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
கர்நாடக அரசின் நடவடிக்கைகளை, கூர்மையாக கவனிக்க வேண்டும். தமிழகத்திற்கான காவிரி நீரை முழுமையாக பெற வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் போக்கிற்கு, எள்முனையளவு கூட இடம் அளிக்காமல், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பதற்கான நடவடிக்கைகளை, தமிழக அரசு முழுமையாக தொடர்ந்து எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment