
இந்தியாவில் டெல்டா ப்ளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட மரபணு மாற்றமடைந்த டெல்டா வகை கொரோனா, அதிக ஆபத்தான வைரஸ் என்று கருதப்படுகிறது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை ஏற்படுவதற்கு இந்த டெல்டா வகை கரோனாவே காரணம்.
டெல்டா வகை கொரோனா, 50 சதவீதம் அதிகம் பரவும் தன்மையைக் கொண்டது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், இங்கிலாந்தில் டெல்டா வகை கரோனா தீவிரமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில் , டெல்டா வகை கொரோனா மீண்டும் மரபணு மாற்றமடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . மரபணு மாற்றமடைந்த டெல்டா வகை கரோனாவிற்கு டெல்டா ப்ளஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது .
இந்தியாவில் இதுவரை 6 பேர் டெல்டா ப்ளஸ் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர் . அமெரிக்காவில் 14 பேருக்கும் , ஜப்பானில் 13 பேருக்கும் டெல்டா ப்ளஸ் கொரோனா உறுதியாகியுள்ளது .
கனடா , ஜெர்மனி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் தலா ஒருவருக்கும் டெல்டா ப்ளஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது . இந்த புதிய உருமாற்றத்தின் பண்புகள் , அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in
No comments:
Post a Comment