
தமிழகத்தில் கள்ளச் சாராயத்தைத் தடுக்கவே மதுக் கடைகள் திறக்கப்படுகின்றன என முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அவர் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுக அரசு சுறுசுறுப்பாக, நிதானமாக செயல்படுகிறது. அனைத்துக் கட்சிகளையும், அறிஞர்களையும் கலந்து முடிவெடுத்தால் அனைத்துத் துறைகளிலும் வேகமான, நிலையான வளர்ச்சி கிடைக்கும். இதை திமுக அரசு பின்பற்ற வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
மதுக் கடைகள் வேண்டாம், மது விலக்கு வேண்டும் என்பது தான் எங்கள் கொள்கை. ஆனால் கள்ளச்சாராயம் பெருகாது என்று நீங்கள் (செய்தியாளர்கள்) உத்தரவாதம் கொடுத்தால் கடையை திறக்கக் கூடாது என்று நான் சொல்லத் தயார். கள்ளச் சாராயம் இருக்காது என்றால் கடையை மூடச் சொல்லலாம். மதுக் கடைகளைத் திறப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை, ஆனால் அரசால் என்ன செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment