
கொரோனா நிவாரண நிதியின் 2ஆவது தவணை ரூ.2,000 மற்றும் 14 மளிகை பொருட்களை பெறுவதற்கு ஜூன் 30 வரை அவகாசம் இருக்கிறது என்றும், அதனால் மக்கள் அவசரப்பட வேண்டாம் என உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கேட்டுக்கொண்டுள்ளார்.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிதி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கும் பணி நேற்று தொடங்கப்பட்டது.
கோதுமை மாவு-1 கிலோ, உப்பு -1 கிலோ, சர்க்கரை-500 கிராம், உளுத்தம்பருப்பு- 500 கிராம், புளி-250 கிராம், கடலை பருப்பு-250 கிராம், கடுகு-100 கிராம், சீரகம்-100 கிராம், மஞ்சள் தூள்-100 கிராம், மிளகாய் தூள்-100 கிராம், டீத்தூள் -100 (2 பாக்கெட்டுகள்), குளியல் சோப் -1 (125 கிராம் ), சலவை சோப் -1 (250 கிராம் ) ஆகிய 14 பொருட்கள் சிறப்பு தொகுப்பில் இடம் பெற்றுள்ளன .

தமிழகம் முழுவதும் அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் பணம் மற்றும் உணவுப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இதுகுறித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அந்தந்த மாவட்டங்களில் சூழ்நிலையை கருத்தில்கொண்டு, தினமும் 75 முதல் 200 நபர்களுக்கு பணமும், பொருட்களும் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
பொருட்கள் இம்மாதம் 30-ம் தேதி வரை வழங்கப்படும் என்பதால் பொதுமக்கள் அவசரமோ, அச்சமோப்படாமல் வாங்கிக் கொள்ளலாம் என கூறினார். பொருட்கள் முழுமையாக மக்களை சென்றடைகிறதா என்பதை ஆய்வுசெய்ய ஒவ்வொரு பகுதியிலும் கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
newstm.in
No comments:
Post a Comment