
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை புகாரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே பள்ளி நிர்வாகமும் அவர்களை சஸ்பெண்ட் செய்தது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க அரசியல் கட்சியினர் பலர் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கைதான PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். இதில் பள்ளியில் உள்ள வேறு சிலருக்கும் இதில் தொடர்புள்ளதாக ராஜகோபாலன் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் ராஜகோபாலை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைக்கப்பட உள்ளார்
என்றும்
அவரை பின்பு காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும்
தெரிகிறது. இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்க வாய்ப்புள்ளதாக போலீசார்
தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment