Latest News

  

தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் வாகனங்கள் மூலம் 5 ஆயிரம் டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய ஏற்பாடு: விவசாயிகள் அனுமதி பெற தொலைபேசி எண் வெளியீடு

தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் வாகனங்கள் மூலம் சுமார் 5 ஆயிரம் டன் காய்கறிகள், பழங்களை விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. காய்கறிகள், பழங்களை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு கொண்டு செல்ல விவசாயிகள் அனுமதி பெறுவதற்கான தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்றுவெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகமே 24 முதல் 31 வரை முழு ஊரடங்குஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான காய்கறி, பழங்கள் தடையின்றி கிடைக்க வாகனங்கள் மூலம்விற்பனை செய்யுமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண் விற்பனை ஆகிய துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், இ-வணிக நிறுவனங்கள் மூலமாக சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் மூலமாக மக்களுக்கு காய்கறி, பழங்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் தினமும் 2 ஆயிரம் வாகனங்கள் மூலம் 1,500 டன், இதர மாவட்டங்களில் சுமார் 5 ஆயிரம் வாகனங்கள் மூலம் 3,500 டன் என மொத்தம் 7 ஆயிரம் வாகனங்கள் மூலம்சுமார் 5 ஆயிரம் டன் காய்கறி, பழங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஆங்காங்கே விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை விவசாயிகள், விவசாய ஆர்வலர் குழுக்கள், விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலமாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய முடியும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளிலும் விவசாயிகளால் கொண்டு வரப்படும் காய்கறிகள், பழங்களை அதற்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்கள் மூலம் நகரின் இதர பகுதிகளில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உற்பத்தியான காய்கறிகள், பழங்களை ஓரிடத்தில் இருந்து சந்தைகளுக்கு கொண்டு செல்லவும், ஆங்காங்கே எடுத்துச் செல்லவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

எனவே, விவசாயிகள் தாங்கள் விளைவித்துள்ள காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்களை சந்தைப்படுத்தவோ, அடுத்த மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லவோ உரிய அனுமதி பெற அந்தந்த மாவட்டத்தில் உள்ள வேளாண் விற்பனைத் துறை துணைஇயக்குநர்கள், தோட்டக்கலைத் துறை இணை, துணை இயக்குநர்களை தொடர்புகொள்ளலாம். (மாவட்ட வாரியாக தொடர்புக்கான எண்கள் அருகே தரப்பட்டுள்ளன.)

கட்டுப்பாட்டு அறை எண்கள்

இதுதவிர, வேளாண் விற்பனைத் துறைகட்டுப்பாட்டு அறை (044-22253884), தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டு அறை (1800 425 44440, வேளாண்மை துறை கட்டுப்பாட்டு அறை (044-28594338) மூலமாகவும் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Dailyhunt

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.