
தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் 13 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நேற்று புதுச்சேரியில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. 6 மணி நேரத்தில் 21 செமீ மழை பெய்ததால் புதுச்சேரி நகரமே வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

பல்வேறு வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளானார்கள். இதனையடுத்து வெள்ளம் வந்த பகுதிகளை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் நாராயணசாமி ஆகியோர் தனித்தனியே பார்வையிட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் மழையால் இன்று பள்ளி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in
No comments:
Post a Comment