
புது டில்லி: நாடு முழுவதும் கிராம பஞ்சாயத்து அளவில் விவசாய
உற்பத்தியை மதிப்பிட வேளாண் துறை ட்ரோன்களை பயன்படுத்த விமான போக்குவரத்து
அமைச்சகம் அனுமதி தந்துள்ளது.பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின்
கீழ், நாட்டின் 100 மாவட்டங்களில் கிராம பஞ்சாயத்து அளவிலான விவசாய
பகுதிகளில் மகசூல் மதிப்பீட்டிற்காக ட்ரோன்களை பயன்படுத்த விமான
போக்குவரத்து அமைச்சகம் அனுமதி தந்துள்ளது. இந்த அனுமதி ஓராண்டுக்கு
செல்லுப்படியாகும். அதற்கான விரிவான வழிகாட்டுதல்களையும் விமானப்
போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.அந்த வழிகாட்டுதல்களில்
கூறியுள்ளதாவது: வேளாண் அமைச்சகம் ட்ரோன்களை இயக்க உள்ளூர் நிர்வாகத்திடம்
அனுமதி பெற வேண்டியது அவசியம்.
குறிப்பிடப்பட்டுள்ள ட்ரோன்களை மட்டுமே பயன்படுத்த
வேண்டும். பயிற்சி பெற்ற மற்றும் சான்றளிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே
ட்ரோன்களை இயக்க வேண்டும். 200 அடி உயரத்துக்குள் ட்ரோன்களை பயன்படுத்த
வேண்டும். சூரிய உதயம் தொடங்கி சூரிய மறைவுக்குள் மட்டுமே ட்ரோன்களை இயக்க
வேண்டும். ட்ரோன்கள் மூலம் எடுக்கப்படும் வீடியோக்கள், புகைப்படங்களின்
பாதுகாப்புக்கு வேளாண் அமைச்சகமே பொறுப்பு. இது போன்ற 19 வழிகாட்டுதல்களை
கூறியுள்ளது.
No comments:
Post a Comment