Latest News

  

22ம் தேதி முதல் ஆதார் சிறப்பு முகாம்

விருத்தாசலம்,; கடலுார் மாவட்ட அஞ்சலகங்களில், வரும் 22 முதல் 27ம் தேதி வரை ஆதார் சிறப்பு முகாம் நடக்கிறது.விருத்தாசலம் கோட்ட கண்காணிப்பாளர் ஜோசப்ராஜ் செய்திக்குறிப்பு:இந்திய அஞ்சல் துறை சார்பில் வரும் 22 முதல் 27ம் தேதி வரை, விருத்தாசலம் அஞ்சலக கோட்டத்தின் கீழ் இயங்கும் தலைமை மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், ஆதார் பதிய பதிவுகள், திருத்தங்கள் செய்யப்படும். பதிவு செய்ய கட்டணம் இல்லை.ஆனால், பாலினம், பிறந்த தேதி, விரல் ரேகை பதிவு, தொலைபேசி எண், கருவிழி படலங்கள், மின்னஞ்சல் முகவரி மற்றும் புகைப்படம் ஆகிய மக்கள் தொகை மற்றும் பயோ மெட்ரிக் திருத்தங்கள் செய்ய 50 முதல் 100 ரூபாய் வரை கட்டணம் பெறப்படுகிறது.விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி, மங்கலம்பேட்டை, நல்லுார், தொழுதுார், பூதாமூர், விருத்தாசலம் பஜார், பெண்ணாடம் ஆர்.எஸ்., வேப்பூர் பகுதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது.பொது மக்கள் பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், கடவுச்சீட்டு, ரேஷன் கார்டு, போட்டோவுடன் கூடிய வங்கி மற்றும் அஞ்சலக கணக்கு புத்தகம், அஞ்சலக அடையாள அட்டை போன்ற அசல் அடையாள சான்றுகளுடன் அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி பயனடையலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.