Latest News

  

12 வயதிலேயே திருநங்கையாக மாறிய குழந்தை.., அதிர்ச்சி காரணம்

அமெரிக்காவில் நியூயார்க் நகரைச் சேர்ந்த Sally Homer என்ற 44 வயது நிரம்பிய பெண்ணுக்கு, 12 வயதில் Zoey Villa என்ற ஆண் குழந்தை உள்ளான். ஆணாக பிறந்த Zoey Villaக்கு ஹார்மோன்கள் மாற்றத்தால், தன்னை பெண்ணாக உணரத் தொடங்கியுள்ளார்.

உடனே உடலில் ஏற்படும் மாற்றத்தை சில வாரங்களிலேயே, இதை தன்னுடைய தாய் Sally Homer-யிடம் Zoey
தெரிவித்துள்ளார். முழுமனதுடன் Zoey-இன் முடிவை ஏற்றுக் கொண்ட Sally, பெண்கள் உடுத்தும் ஆடைகள், அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்து, Zoey-க்கு தன்னம்பிக்கை ஊட்டியுள்ளார்.

மகன் teen பருவத்தை நெருங்கி விட்டதால், ஆணுக்கு உடைய பாலின குணங்கள் மேலோங்கிவிடக் கூடாது என்பதற்காக, hormone blockers-ஐ பயன்படுத்தி வந்துள்ளார் Zoey. இதற்கிடையே, Zoey-க்கு சக வயதில் இருக்கும் இளம் பெண்கள் போல, தனக்கும் மார்பகங்கள் இருக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.

தாய் யிடம் கூறிய போது, அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். மேலும், மார்பக வளர்ச்சிக்கு தேவையான oestrogen hormone, 14 வயது நிரம்பிய பின்னர் தான் உட்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து, Zoey வருத்தமடைந்துள்ளார். Zoey-க்கு அவரது தாய் மற்றும் காதலனின் ஆதரவு இருப்பதால், சற்றே ஆறுதல் அடைந்துள்ளார்.
அதுமட்டுமின்றி, தன்னுடைய பிறப்பு உறுப்பு அறுவை சிகிச்சையும் இப்போதே செய்ய விரும்புகிறார். ஆனால், அதற்கு 18 வயது நிரம்பி இருக்கும் வேண்டும்.

11 வயது வரை ஆணாக மட்டுமே தன்னை அடையாளப்படுத்தி கொண்ட Zoey, ஒரே வருடத்தில் திருநங்கையாக மாறி, பிறப்பு உறுப்பு அறுவை சிகிச்சை வரை சிந்திப்பது, Sally-ஐ மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மகன் என்ன முடிவெடுத்தாலும், அவருடைய மகிழ்ச்சியே பிரதானம் என்று கூறி, அவருக்கு எப்போதும் முழு ஆதரவு கொடுக்க விரும்புவதாக மனமுவந்து தெரிவித்துள்ளார்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.