
புயல் எதிரொலியாக கனமழை பெய்யும் என்பதால் தென் மாவட்ட விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்துகொள்ளுமாறு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக வலுப் பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து அடுத்த 3 தினங்களுக்கு தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வேளாண் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வருகிற டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் சம்பா நெல் பயிர் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் தங்களுடைய பயிர்களை அருகில் உலா பொது சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது வங்கிகளிலோ உரிய காப்பீடு கட்டணத்தைச் செலுத்தி சகாயபடி செய்ததற்கான அடங்கல், சிட்டா, ஆதார் அட்டை நகல், வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை இணைத்து, புயல் பாதிப்பிலிருந்து பயிர்களை காத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளும், தோட்டக்கலைப் பயிர்களான வாழை, மரவள்ளி, வெங்காயம், மிளகாய், தக்காளி, வெண்டை, கொத்தமல்லி, கத்தரி மற்றும் இஞ்சி போன்ற பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகளும் பயிர்க்காப்பீடு செய்வதற்காக கடைசி தேதி டிசம்பர் 15 ஆம் தேதி ஆகும்.
எனினும் டிசம்பர் 15 ஆம் தேதிக்கு முன்னரே விவசாயில்க பயிர்க்காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment