
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. சமீபத்தில் பெய்த நிவர் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்மழை காணப்பட்டது. தஞ்சை மாவட்டத்திலும் 2 நாட்கள் மழை நீடித்தது. அதற்கு முன்பு தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீண்டும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலைமுதல் அவ்வப்போது விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் இதுவரை மொத்தம் 635.72 மி.மீ. மழை பெய்துள்ளது. இது 57.89 சதவீதம் ஆகும். இந்த நிலையில் தற்போது மழை பெய்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment