
ஈரோடு: மகாராஷ்டிரம் மாநிலத்தில் இருந்து ஈரோடு வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஈரோடு மாநகராட்சி ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளியில் பாதுாப்பு அறையைில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இருப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், கூடுதல் எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. இதற்காக, வெளிமாநிலங்களில் இருந்து, மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் மூலம், பாதுகாப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டுவரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி, ஈரோடு மாவட்டத்திற்கு மகாராஷ்டிரம் மாநிலத்தில் இருந்து 2 பெரிய லாரிகள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. இவற்றை ஈரோடு மாநகராட்சி ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. இதில் பேலட் யூனிட் - 1600, கண்ட்ரோல் யூனிட் - 2810 ,வி.வி.பேட் - 3720 ஆகிய இயந்திரங்கள் வந்துள்ளது.
No comments:
Post a Comment