
மேற்கு வங்கத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை புரிந்துள்ளதையொட்டி, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜாதவ்பூர் மற்றும் கொல்கத்தா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் அமித் ஷா செல்லவுள்ள பாதையில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு சாலைகளில் நின்றனர்.

சட்டப்பேரவை தேர்தலையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள்கள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு சென்றுள்ளார். அங்கு மக்களை சந்தித்து உரையாற்றி, கட்சித் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஆட்சியைப் பிடிக்கும் விதத்தில் வியூகம் அமைத்து செயல்படும் வகையில் பாஜக இந்த முயற்சியினை மேற்கொண்டுள்ளது.
இதனிடையே மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி கொல்கத்தா சாலைகளில் மாணவர்கள் பதாகைகளை ஏந்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment